மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே சித்ததர்புரத்தில் 18 சித்தர்கள் அருள்பாலிக்கும் மிக பிரசித்தி பெற்ற ஒளிலாயம் சித்தர்பீடம் அமைந்துள்ளது. இப்பகுதியை சேர்ந்த ராஜேந்திர சுவாமிகளால் இவ் சித்தர் பீடம் தோற்றுவிக்கப்பட்டது.  இந்த ஒளிலாயம் சித்தர் பீடத்தில் 18 சித்தர்களும் தனி சந்நிதி கொண்டு அருள் பாலித்து வருகின்றனர்.18 படிகள் கொண்ட விநாயகர் சந்நிதியுடன் கூடிய மகா லிங்கமும் இங்கு அமைந்துள்ளது.




இத்தகைய பல்வேறு சிறப்பு மிக்க சித்தர் பீடத்தில் பவுர்ணமி தோறும் சிறப்பு வழிபாடு நடைபெறும், அது போன்று பீடத்தின் நிறுவனர் ஸ்ரீ சத்குரு ராஜேந்திர சுவாமிகளின் 6 -ம் ஆண்டு குருபூஜை விழா நடைபெற்றது. விழாவை முன்னிட்டு ஒளிலாயம் சித்தர் பீடத்தில் சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டன. அதனைத் தொடர்ந்து பீடத்தின் வளாகத்தில் உலக நன்மை வேண்டி முருக பெருமானின் ஆறுபடை வீடு மகா யாகம் நடைபெற்றது.


Asian Games 2023: 29 ஆண்டுகளுக்குப் பின் படகோட்டுதல் போட்டியில் பதக்கம்.. சாதனையை செதுக்கிய அர்ஜுன் - சுனில் ஜோடி!




முருக பெருமான் அம்பாளுடன் எழுந்தருள  அவர்களுக்கு முன்பாக பிரமாண்ட 6  யாக குண்டங்கள் அமைக்கப்பட்டு மகா யாகம் நடைபெற்றது. பின்னர் மேளதாள மங்கள வாத்தியங்கள் முழங்க, சிவாச்சாரியார்கள் வேத மந்திரங்கள் ஓத பூர்ணாஹூதி மற்றும் மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது. இந்த மகா யாகத்தில் மயிலாடுதுறை மற்றும் இன்றி தமிழகம், ஆந்திரா, கர்நாடகா, குஜராத் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் இருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள்  கலந்து கொண்டு தரிசனம் செய்து வழிபட்டனர். 


Skoda Price: ஸ்கோடா கார் வாங்க சரியான நேரம்..! அதிரடியாக விலையை குறைத்து அறிவிப்பு..! புதிய எடிஷன் அறிமுகம்




மேலும் விழாவில் சீர்காழி முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள் பாரதி, சக்தி உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டனர். விழாவில் சித்தர் பீடம் அமைந்துள்ளது சுற்றுவட்டார பகுகளை சேர்ந்த பொதுமக்களுக்கு நலத்திட்ட உதவிகளும் வழங்கப்பட்டது.


Navaratri 2023: முதல் முறையா கொலு வைக்க போறிங்களா? எந்த படியில் எந்த பொம்மையை வைப்பதென பார்க்கலாம்....