பிரசிதிபெற்ற மதுரை கோரிப்பாளையத்தில் உள்ள தர்ஹா சந்தனக் கூடு விழா வெகுவிமர்சையாக நடைபெற்றது - மதவேறுபாடின்றி அனைத்து சமுதாயத்தினரும் கலந்துகொண்டனர்.

 

மதுரை கோரிப்பாளையம் பகுதியில் அமைந்துள்ள ஹஜ்ரத் காஜா சையது சுல்தான் அலாவுதீன் அவுலியா மற்றும் சம்சுதீன் அவுலியா தர்ஹா மிகவும் பிரசித்தி பெற்றது. இங்கு இஸ்லாமியர்கள் மட்டுமின்றி அனைத்து மதத்தினரும் மத வேறுபாடின்றி வழிபாடு செய்து நேர்த்திகடன் செலுத்துவார்கள்.

 







 

இந்த தர்ஹாவில் இந்த ஆண்டிற்கான சந்தனக்கூடு திருவிழா காலையில் கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதையொட்டி தர்ஹாவில் உள்ள கொடிமரத்தில் சந்தனக் கூடு திருவிழா கொடியேற்றம் நடந்தது. அப்போது ஏராளமான இஸ்லாமியர்கள் உலக நன்மைக்காகவும், சமத்துவம் வேண்டியும், மழை பொழிய வேண்டியும் துவா செய்தனர். பின்னர் இரவு மின் அலங்காரத்தில் சந்தனக் கூடு ஊர்வலம் நடைபெற்றது. சிலம்பாட்டம், மேளதாள வாத்தியங்கள் முழங்க, ஒட்டகம், யானை, குதிரையுடன் கோரிப்பாளையத்தில் உள்ள முக்கிய வீதிகளின் வழியாக சந்தனக்கூடு வலம் வந்தது.



 

மதுரை மட்டுமின்றி விருதுநகர், திண்டுக்கல், ராமநாதபுரம் உள்ளிட்ட மாவட்டங்களை ஏராளமானோர்வருகை தந்து சிறப்பு துவா செய்தனர். சந்தனக் கூடு உருஸ் விழாவை முன்னிட்டு  தர்ஹாவிற்கு வந்தவர்களுக்கு சந்தனம் வழங்கப்பட்டது. சந்தனக் கூடு விழாவினை முன்னிட்டு தர்ஹா முழுவதிலும் வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டிருந்தது.



 

இதுகுறித்து இந்து பக்தர்கள் சிலர் நம்மிடம் கூறுகையில்,” மதுரை கோரிப்பாளையம் பகுதி மதுரையின் மையப் பகுதியாக இருந்து வருகிறது. கோரிப்பாளையம் தேவர் சிலைக்கு அடுத்தபடியாக இங்குள்ள மசூதி பிரபலமானது. இப்பகுதியில் ஏராளமான இஸ்லாமிய மக்கள் வழிபாடு செய்கின்றனர். சந்தனக் கூடு நிகழ்வின் போது மத வேறுபாடுகள் இல்லாமல் அனைத்து சமுதாய மக்களுக்கும் ஒன்றிணைந்து கொண்டாடுகிறோம். இந்தாண்டு சந்தனக் கூடு விழாவினை முன்னிட்டு தர்ஹா முழுவதிலும் வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டிருந்தது. அதிகளவு மக்கள் இந்த விழாவில் கலந்துகொண்டனர். மதுரை மட்டுமின்றி வெளியூரை சேர்ந்த மக்களும் இந்த விழாவிற்கு வருவது கூடுதல் சிறப்பு. சிலம்பாட்டம், மேளதாள வாத்தியங்கள் முழங்க, ஒட்டகம், யானை, குதிரையுடன் கோரிப்பாளையத்தில் உள்ள முக்கிய வீதிகளின் வழியாக சந்தனக்கூடு வலம் வந்தது. இந்தாண்டு சந்தனக் கூடு நிகழ்ச்சி மிகவும் பிரமாண்டமாக நடைபெற்றது, எங்கள் பகுதி மக்களுக்கு மகிழ்ச்சியை அளித்துள்ளது” எனத் தெரிவித்தார்.