இன்று 2023 ஆசிய விளையாட்டுப் போட்டியின் 10வது நாளாகும். இதுவரை நடந்த ஆசிய விளையாட்டு போட்டியில் இந்தியா 61 பதக்கங்களை வென்றுள்ளது. இன்றைய 10வது நாளின் முதல் பதக்கம் படகோட்டுதல் போட்டியில் இருந்து வந்தது. படகோட்டுதல் போட்டியில் அர்ஜூன் சிங் மற்றும் சுனில் சிங் ஜோடி நாட்டிற்கு வெண்கலப் பதக்கம் வென்றது. இந்த போட்டியில் உஸ்பெகிஸ்தானின் ஷோக்முரோட் கோல்முராடோவ் மற்றும் நூரிஸ்லோம் துக்தாசின் ஆகியோர் தங்கப் பதக்கத்தையும், கஜகஸ்தானின் டிமோஃபி யெமிலியானோவ் மற்றும் செர்ஜி யெமெலியானோவ் ஆகியோர் வெள்ளிப் பதக்கத்தையும் வென்றனர்.
இன்று நடைபெற்ற ஆசிய விளையாட்டுப் போட்டியில் ஆடவர் கேனோ 1000 மீட்டர் இரட்டையர் போட்டியில் இந்தியாவின் அர்ஜூன் சிங் மற்றும் சுனில் சிங் ஜோடி வெண்கலப் பதக்கம் வென்றது. இந்திய ஜோடி 329 வினாடிகள் எடுத்து மூன்றாவது இடத்தைப் பிடித்தார். இதன்மூலம், 3:53 என்ற கணக்கில் வெற்றி பெற்றது. ஆசிய விளையாட்டு வரலாற்றில் 29 ஆண்டுகளுக்குப் பிறகு படகோட்டுதல் போட்டியில் இந்தியா பதக்கம் வென்றுள்ளது.
ஆசிய விளையாட்டு வரலாற்றில் கேனோவில் இந்தியா வென்ற இரண்டாவது பதக்கம் இதுவாகும். இதற்கு முன்பு 1994 ஆம் ஆண்டு ஹிரோஷிமா விளையாட்டுப் போட்டியில் இந்தியாவின் சிஜி சதானந்தன் மற்றும் ஜானி ரோம்மல் ஆகியோர் இதே போட்டியில் வெண்கலப் பதக்கம் வென்றிருந்தனர்.
இந்தியா - இதுவரை 61 பதக்கங்கள்:
இதுவரை, 2023 ஆசிய விளையாட்டுப் போட்டியில் இந்தியா மொத்தம் 61 பதக்கங்களை வென்றுள்ளது. இதில் 13 தங்கம் தவிர, 24 வெள்ளிப் பதக்கங்களும், 24 வெண்கலப் பதக்கங்களும் அடங்கும். புள்ளிப்பட்டியலில் இந்தியா தற்போது 61 பதக்கங்களை பெற்று நான்காவது இடத்தில் உள்ளது. அதேசமயம் சீனா 273 பதக்கங்களுடன் முதலிடத்தில் உள்ளது.
இன்றைய நாளில் சிறந்த தருணம்:
இந்திய கபடி அணி இன்று (அக்டோபர் 3) முதல் ஆசிய விளையாட்டு 2023 இல் தனது முதல் போட்டியில் விளையாடியது. தொடங்கியுள்ளது. முதல் போட்டியில் இந்திய அணி 37 புள்ளிகள் வித்தியாசத்தில் வங்கதேசத்தை தோற்கடித்தது. இந்தியா 55-18 என்ற கணக்கில் வங்கதேச அணியை வீழ்த்தியது.
ஆசிய விளையாட்டுப் போட்டியில் இந்திய கபடி அணி:
பவன் செஹ்ராவத் (கேப்டன்), சுர்ஜித் சிங், அஸ்லாம் இனாம்தார், நவீன் குமார், பர்வேஷ் பைஸ்வால், விஷால் பரத்வாஜ், நிதிஷ் குமார், அர்ஜுன் தேஸ்வால், சுனில் குமார், நிதின் ராவல், சச்சின் தன்வார், ஆகாஷ் ஷிண்டே.