ஸ்கோடா நிறுவனம் தனது இரண்டு கார் மாடல்களின் விலையை குறிப்பிட்ட காலகட்டத்திற்கு குறைப்பதாக அறிவித்துள்ளது.


ஸ்கோடா கார் மாடல்:


இந்திய ஆட்டோமொபைல் நிறுவனங்கள் விற்பனயை அதிகரிக்க தொடர்ந்து பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன. விலை குறைப்பு, தள்ளுபடி விலை, இலவசங்கள் போன்றவை அதில் அடங்கும். அந்த வகையில் ஸ்கோடா நிறுவனமும், தங்களது விற்பனையை அதிகரிக்க புதிய சலுகையை அறிவித்துள்ளது. அதன்படி, ஒரு கார் புதிய எடிஷன் ஆப்ஷனையும், இரண்டு கார் மாடல்களுக்கு விலை குறைப்பு சலுகையும் வழங்கப்பட்டுள்ளது.


ஸ்லாவியா காரின் புதிய எடிஷன்:


அதன்படி, ஸ்கோடாவின் ஸ்லாவியா கார் மாடலில் புதிய மேட் பிளாக் எடிஷன் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இதன் வெளிப்புறத்தில் கார்பன் ஸ்டீல் பெயிண்ட் ஷேட் வழங்கப்பட்டுள்ளது, மேலும் கதவு கைப்பிடிகள் மற்றும் விங் மிரர்களுக்கு க்ளாஸ்-பிளாக் ஃபினிஷிங் உள்ளது. கிரில், பம்பர் அலங்காரங்கள் மற்றும் ஜன்னல் லைனிங் ஆகியவற்றிற்கு, ஏற்கனவே இருந்த குரோம் நிறம் அப்படியே தக்கவைக்கப்பட்டுள்ளது. ஸ்லாவியா மேட் பிளாக் பதிப்பு தற்போதுள்ள அனைத்து பவர்டிரெய்ன் விருப்பங்களுடனும் கிடைக்கிறது. இருப்பினும் ஸ்கோடா சிறப்பு பதிப்பு மாடலுக்கான குறிப்பிட்ட விலையை இன்னும் குறிப்பிடவில்லை.


விலை விவரம்:


அதோடு, ஸ்லாவியா மற்றும் குஷாக் ஆகிய இரண்டு கார்களின்  அடிப்படை விலையும் குறைக்கப்பட்டுள்ளது. அதன்படி, ஸ்லாவியா கார் மாடலின் தொடக்க விலையான 11 லட்சத்து 39 ஆயிரத்திலிருந்து 50,000 ரூபாயும், குஷாக் கார் மாடலின் தொடக்க விலையான 11 லட்சத்து 59 ஆயிரத்திலிருந்து 70 ஆயிரம் ரூபாயும் குறைக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் குறிப்பிட்ட இரண்டு கார் மாடல்களின் தொடக்க விலையும் தற்போது, 10 லட்சத்து 89 ஆயிரம் ரூபாயாக உள்ளது. இந்த இரண்டு விலைக் குறைப்பு சலுகைகளும் பண்டிகைக் காலம் வரையில் மட்டுமே அமலில் இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஸ்லாவியா மேட் பிளாக் எடிஷனும் பண்டிகைக் காலங்கள் வரை மட்டுமே கிடைக்கும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.


புதிய அம்சங்கள்:


ஸ்கோடா ஸ்லாவியா மற்றும் குஷாக்கின் டாப்-ஸ்பெக் ஸ்டைல் ​​டிரிம் இரண்டும், முன்பக்க இருக்கைகள் மற்றும் ஃபுட்வெல் இலுமினேஷனுடன் மேம்படுத்தப்பட்டுள்ளன. இந்த புதிய மேம்பாடுகள் குஷாக் மான்டே கார்லோ வகையிலும் நீட்டிக்கப்பட்டுள்ளது.


இன்ஜின் விவரங்கள்:


ஸ்கோடா ஸ்லாவியாவில் சக்திவாய்ந்த 999 சிசி முதல் 1498 சிசி வரையிலான இன்ஜின் உள்ளது. இந்த வாகனம் 113.98 முதல் 147.52 பிஎச்பி திறன் வரம்பைக் கொண்டுள்ளது. ஸ்லாவியா 115 பிஎஸ் மற்றும் 178 என்எம் டார்க் கொண்ட 1 லிட்டர் பெட்ரோல் இன்ஜின் மூலம் இயக்கப்படுகிறது. மறுபுறம், 1.5 லிட்டர் யூனிட், 150PS மற்றும் 250 Nm டார்க்கை உற்பத்தி செய்கிறது.


ஸ்கோடா குஷக்கின் மான்டே கார்லோ வேரியண்ட் 1.0 லிட்டர், மூன்று சிலிண்டர், டிஎஸ்ஐ பெட்ரோல் இன்ஜின் மற்றும் 1.5 லிட்டர், நான்கு சிலிண்டர், டிஎஸ்ஐ பெட்ரோல் இன்ஜினினுடனும் விற்பனைக்கு வரலாம். முந்தைய மாடலில் 114bhp மற்றும் 178Nm முறுக்குவிசையையும், தற்போதைய மாடல் 148bhp மற்றும் 250Nm முறுக்குவிசையையும் உருவாக்கும். 6 ஸ்பீட்  மேனுவல்,  6 ஸ்பீட் டார்ட்க் கன்வெர்ட்டர் மற்றும் 7 ஸ்பீட் DSG கியர்பாக்ஸ் ஆகிய டிரான்ஸ்மிஷன்கள் வழங்கப்பட்டுள்ளன.


Car loan Information:

Calculate Car Loan EMI