சீர்காழி அருகே குமிளங்காடு சுயம்பு ஆதி நாகாத்தம்மன் கோயில் ஆண்டு திருவிழாவின் முக்கிய நிகழ்வாக பால்குடம் ஊர்வலத்தில் 200க்கும் மேற்பட்ட பக்தர்கள் பால்குடம், அலகு காவடிகள் எடுத்து வந்து அம்பாளுக்கு அபிஷேகம் செய்து வழிபாடு மேற்கொண்டனர்.


குமிளங்காடு சுயம்பு ஆதி நாகாத்தம்மன் திருக்கோயில்


மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி தாலுக்கா குமிளங்காடு கிராமத்தில் பிரசித்தி பெற்ற பழமை வாய்ந்த சுயம்பு ஆதி நாகாத்தம்மன் திருக்கோயில் அமைந்துள்ளது. பக்தர்கள் வேண்டுவனவற்றை வேண்டிய மாத்திரத்தில் அருளும் அம்பிகைக்கு ஆண்டுதோறும் ஆடி மாதம் கடைசியில் தொடங்கி ஆவணி மாதம் வரை 10 நாட்கள் உற்சவம் நடைபெறுவது வழக்கம். 


Krishna Jayanthi 2024: குழந்தை வரம் வேண்டுபவர்களா? கிருஷ்ண ஜெயந்திக்கு இப்படித்தான் வழிபட வேண்டும்!




ஆண்டு திருவிழா 


இவ்வாண்டு ஆண்டு திருவிழா கடந்த ஆடி மாதம் 31-ஆம் தேதி காப்புக் கட்டுதலுடன் தொடங்கியது. தொடர்ந்து பத்து நாட்களும் பல்வேறு அலங்காரத்தில் சுவாமி வீதியுலா நடைபெற்றது. 10-ம் நாளான காப்புக் கட்டி கொண்டு விரதம் இருந்த 200-க்கும் மேற்பட்ட பக்தர்கள் குமிளங்காடு கோட்டையா கோயிலில் இருந்து சக்தி கரகம் முன்னே செல்ல தீச்சட்டி, ஆதிசக்தி கரகம், பால் குடங்கள் மற்றும் அலகு காவடிகள் எடுத்து வந்து தங்கள் நேர்த்திக் கடனை செலுத்தினர்.


Watch Video: "சாதி, மத சான்றிதழ் கேட்டாங்க" மீனாட்சி அம்மன் கோயிலில் நடந்தது என்ன? வீடியோ வெளியிட்ட நமீதா




அருளாசி 


வழிநெடுக்கிலும் பக்தர்கள் அர்ச்சனைகள் செய்து வழிபட்டனர். தொடர்ந்து கோயிலை வந்தடைந்த பக்தர்கள் தாங்கள் எடுத்து வந்த பாலை கொண்டு அம்பாளுக்கு அபிஷேகம் செய்து வழிபாடு நடத்தினர். தொடர்ந்து அம்பாளுக்கு மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது. இதனை அடுத்து ஆதி நாகாத்தம்மன் வேடம் தரித்த தேவேந்திர அடிகளார் பக்தர்களுக்கு அருளாசி வழங்கினார். இவ்விழாவில் மயிலாடுதுறை மாவட்டம் மட்டும் இன்றி தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு வழிபாடு செய்தனர்.


புனித அன்னை தெரசா பிறந்தநாளை ஒட்டி 200 மாணவர்களுக்கு ரூ.19.50 லட்சம் கல்வி உதவித்தொகை வழங்கல்