கம்சனை அழிப்பதற்காக திருமால் எடுத்த அவதாரமே கிருஷ்ணர் என்று புராணங்கள் கூறுகிறது. ஆவணி மாத ரோகிணி நட்சத்திரத்தில் தேய்பிறை அஷ்டமி திதி நாளிலே கிருஷ்ணர் நள்ளிரவில் பிறந்ததாக புராணங்கள் கூறுகிறது. இன்று நாடு முழுவதும் கிருஷ்ண ஜெயந்தி கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது.
கிருஷ்ணர் நள்ளிவு நேரத்தில் அவதரித்தார் என்ற காரணத்தினால் கிருஷ்ண ஜெயந்தியை மாலை நேர்த்தில் கொண்டாட வேண்டும் என்று கூறுகிறார்கள். கிருஷ்ண ஜெயந்தி தினத்தில் கிருஷ்ணரை வழிபட்டால் குழந்தை வரம் உண்டாகும் என்பது பக்தர்கள் ஐதீகம் ஆகும்.
குழந்தையில்லாதவர்கள் இல்லாதவர்கள் எப்படி வழிபட வேண்டும்?
- கிருஷ்ண ஜெயந்தி தினத்தில் குழந்தை பாக்கியம் வேண்டுபவர்கள் மாலை நேரத்து பூஜையின்போது கிருஷ்ணர் சிலை அல்லது படத்தின் முன்பு வெண்ணெய்யை படையலிட வேண்டும்.
- அவ்வாறு படையலிடும் வெண்ணெய்யை இரவு தூங்கும் முன்னரோ அல்லது காலையில் வெறும் வயிற்றிலோ சாப்பிட வேண்டும்.
- மேலும் குழந்தை வரம் வேண்டுபவர்கள் தங்களது படுக்கை அறையில் கிருஷ்ணர் பானைக்குள் கையை விட்டு வெண்ணெய் எடுக்கும் புகைப்படத்தை மாட்டினால் குழந்தை வரம் கிடைக்கும் என்று நம்பப்படுகிறது. ( பானை என்பது கர்பப்பையையும், வெண்ணெய் என்பது கர்பப்பையைில் உள்ள பிரச்சினைகளை வெளியில் எடுத்துவிட்டு தானே அந்த குழந்தையாக கர்ப்பப்பையில் கிருஷ்ணர் குடி கொள்வார் என்பதாக கருதப்படுகிறது)
பணம், செல்வம் அதிகரிக்க:
மேலே உள்ளவாறு கிருஷ்ண ஜெயந்தி தினத்தில் வழிபட்டால் குழந்தை இல்லாதவர்களுக்கு விரைவில் குழந்தை பாக்கியம் உண்டாகும் என்று அர்த்தம். மேலும் புல்லாங்குழல் வைத்திருக்கும் கிருஷ்ணரின் படம் அல்லது சிலை வைத்திருப்பவர்களின் வீடுகளில் துஷ்ட சக்திகள் நெருங்காது என்பதும் பக்தர்கள் நம்பிக்கை ஆகும்.
கிருஷ்ணருக்கு வெண்ணெய் மிகவும் பிடித்த பொருள் என்பதால் பால் சார்ந்த உணவுகளை கண்ணனுக்கு படைப்பது விசேஷம் ஆகும். நன்றாக காய்ச்சிய பாலின் மேல் படியும் ஆடைகளை தனியாக எடுத்து ஏலக்காய், குங்குமப்பூ, கற்கண்டு கலந்து நைவேத்யமாக கிருஷ்ணருக்கு படைக்கலாம். இவ்வாறு செல்வதால் வீட்டில் பணம், செல்வம் அதிகரிக்கும் என்பதும் ஐதீகம் ஆகும்.
கிருஷ்ணர் தவழ்ந்து வருவது போலவும், ஒரு கை தூக்கி, ஒரு கால் தூக்கி நடந்து வருவது போலவும் உருவத்தை வழிபட்டால் செல்வ வளமும், வாகன யோகமும் ஏற்படும் என்றும் நம்பப்படுகிறது.