மேலும் அறிய
மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் ரனில் விக்ரமசிங்கே சாமி தரிசனம்: கச்சத்தீவு கேள்விக்கு பதில் என்ன?
முன்னாள் இலங்கை அமைச்சர் ஆறுமுகம் தொண்டைமான் இல்ல விழாவில் பங்கேற்கிறார். அங்கு அவர் தமிழகத்தில் உள்ள முக்கிய அரசியல் கட்சி பிரமுகர்களை சந்திப்பார் என கூறப்படுகிறது.

ரனில் விக்ரமசிங்கே
Source : whatsapp
மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் இலங்கை முன்னாள் அதிபர் ரனில் விக்ரமசிங்கே சாமி தரிசனம். இலங்கை முன்னாள் அதிபர் வருகையொட்டி மீனாட்சி அம்மன் கோயில் பகுதியில் பலத்த பாதுகாப்பு.
இலங்கை முன்னாள் அதிபர் ரனில் விக்ரமசிங்கே சாமி தரிசனம்
சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூரில் நடைபெறும் முன்னாள் இலங்கை அமைச்சர் ஆறுமுகம் தொண்டைமான் இல்ல விழாவில் பங்கேற்பதற்காக. இலங்கை முன்னாள் அதிபர் ரனில் விக்ரமசிங்கே மதுரைக்கு இன்று காலை விமான மூலம் வருகை தந்தார். தொடர்ந்து அவர் மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் இலங்கை முன்னாள் அதிபர் ரனில் விக்ரமசிங்கே துணைவியாருடன் சாமி தரிசனம் செய்தார்.
கோயில் பகுதியில் பலத்த பாதுகாப்பு போடப்பட்டிருந்தது
அவருக்கு கோவில் நிர்வாகம் சார்பாக மரியாதை செலுத்தப்பட்டது. அம்மன் சன்னதியில் சாமி தரிசனம் சுந்தரேஸ்வரர் சன்னதியில் 30 நிமிடங்களுக்கும் மேலாக அவர் சாமி தரிசனம் மேற்கொண்டார், தொடர்ந்து அவர் கோயிலில் புகைப்படங்களை எடுத்துக் கொண்டார். மதுரை மீனாட்சியம்மன் கோயிலில் இலங்கை முன்னாள் அதிபர் ரனில் விக்ரமசிங்கே சாமி தரிசனம் செய்வதற்காக வருகை தந்ததை ஒட்டி கோயில் பகுதியில் பலத்த பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. காவல்துறை அவரை கோயிலுக்குள் பலத்த பாதுகாப்புடன் உள்ளே அழைத்து சென்று சாமி தரிசனம் செய்துவிட்டு காவல்துறை பாதுகாப்போடு வெளியில் அழைத்து வந்தனர்.
இலங்கை அமைச்சர் ஆறுமுகம் தொண்டைமான் இல்ல விழாவில் பங்கேற்கிறார்
பின்பு செய்தியாளர்கள் அவரிடம் கச்சத்தீவு குறித்த கேட்ட கேள்விக்கு அவர் பதில் அளிக்காமல் காரில் ஏறி புறப்பட்ட சென்றார் சென்றார். தொடர்ந்து அவர் காரைக்குடி சென்று பின் சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூரில் நடைபெறும் முன்னாள் இலங்கை அமைச்சர் ஆறுமுகம் தொண்டைமான் இல்ல விழாவில் பங்கேற்கிறார். அங்கு அவர் தமிழகத்தில் உள்ள முக்கிய அரசியல் கட்சி பிரமுகர்களை சந்திப்பார் என கூறப்படுகிறது.
மேலும் படிக்கவும்
Advertisement
Advertisement






















