ஆனி திருமஞ்சனம், ஆடி பிறப்பு, ஆடிக்கிருத்திகை.. இந்த மாசம் இத்தனை விசேஷமா? என்ன தேதி?
ஜுலை மாதம் இன்று பிறந்துள்ள நிலையில் இந்த மாதத்தில் என்னென்ன விசேஷங்கள் இருக்கிறது? என்பதை கீழே காணலாம்.

ஜுலை மாதம் இன்று பிறந்துள்ளது. இந்த மாதத்தில் என்னென்ன சிறப்பு வாய்ந்த நாட்கள் வருகிறது? என்பதை கீழே காணலாம். இந்த ஜுலை மாதத்தில் ஆனி மாதமும், ஆடி மாதமும் கலந்து வருகிறது.
ஜுலை 1 - சஷ்டி விரதம்
ஜுலை 2 - ஆனித் திருமஞ்சனம் (ஆனி உத்திரம்) - செவ்வாய்
ஜுலை 3 - செயின்ட் தாமஸ் டே - புதன்
ஜுலை 6 - மொஹரம், ஏகாதசி விரதம் - ஞாயிறு
ஜுலை 8 - பிரதோஷம் - செவ்வாய்
ஜுலை 10 - பெளர்ணமி - வியாழன்
ஜுலை 11 - உலக மக்கள் தொகை நாள் - வெள்ளி
ஜுலை 13 - திருவோண விரதம் - ஞாயிறு
ஜுலை 14 - சங்கடஹர சதுர்த்தி - திங்கள்
ஜுலை 16 - ஆடி மாத பிறப்பு - புதன்
ஜுலை 17 - சபரிமலை நடை திறப்பு - வியாழன்
ஜுலை 20 - ஆடிக்கிருத்திகை - ஞாயிறு
ஜுலை 21 - ஏகாதசி விரதம் - திங்கள்
ஜுலை 22 - பிரதோஷம் - செவ்வாய்
ஜுலை 23 - மாத சிவராத்திரி - புதன்
ஜுலை 24 - ஆடி அமாவாசை - வியாழன்
ஜுலை 25 - சந்திர தரிசனம் - வெள்ளி
ஜுலை 28 - ஆடிப்பூரம், சோமவாரம் - திங்கள்
ஜுலை 29 - நாக பஞ்சமி - செவ்வாய்
ஜுலை 30 - சஷ்டி விரதம் - புதன்
முக்கிய நாட்கள்:
இந்த நன்னாட்களில் ஆனி திருமஞ்சனம், மொஹரம், ஆடி மாத பிறப்பு, ஆடிக்கிருத்திகை, ஆடி அமாவாசை முக்கியமான நாட்கள் ஆகும்.
தமிழ்நாட்டைப் பொறுத்தவரை ஆடி மாதம் கோயில்கள் களைகட்டி காணப்படும். குறிப்பாக, அம்மன் ஆலயங்கள் தமிழ்நாடு முழுவதும் பக்தர்களால் கோலாகலமாக காெண்டாடப்படும். தமிழ்நாட்டில் ஆடி மாதம் திருமணம் உள்ளிட்ட எந்தவொரு சுபகாரியங்கள் செய்வது வழக்கம் இல்லை. இதனால், இந்த மாதத்தில் எஞ்சிய நாட்களில் உள்ள ஆனி மாதத்தில் வரும் வளர்பிறை முகூர்த்த நாட்களில் விசேஷங்கள் நடத்தப்படும்.





















