மேலும் அறிய

இலங்கேஸ்வரன் என்ற ராவணனுக்கு சிறப்பு யாக வேள்வி நடத்திய சிவனடியார்கள்

கொடைரோடு அருகே இலங்கேஸ்வரன் என்ற ராவணனுக்கு சிறப்பு யாக வேள்வி நடத்தி ஆச்சிரியத்தை ஏற்படுத்திய சிவனடியார்கள்

அயோத்தியில் பால ராமர் சிலை நிறுவப்பட்டு கோவில் திறக்கப்பட்ட நிகழ்ச்சி இந்தியா முழுவதும் பரபரப்பாக பேசப்பட்டு வரும் நிலையில் தமிழ்நாட்டில் திண்டுக்கல் மாவட்டம் கொடைரோடு அருகே ராவணனுக்கு தமிழில் சிறப்பு யாக வேள்வி பூஜை நடத்தி சிவனடியார்கள் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளனர்.

NMMS Scholarship: மாதாமாதம் ரூ.1000 உதவித்தொகை: என்எம்எம்எஸ் தேர்வுக்கு நாளை முதல் ஹால்டிக்கெட்- பெறுவது எப்படி?


இலங்கேஸ்வரன் என்ற ராவணனுக்கு சிறப்பு யாக வேள்வி நடத்திய சிவனடியார்கள்

பள்ளப்பட்டி சிறுமலை அடிவாரப் பகுதியில் அமைந்துள்ளது ஓம் திருமேனி சங்கம ஆசிரமம். இங்குள்ள தமிழ் ஆலயத்தில் நேற்று முன்தினம் ராமர் மற்றும் சீதாதேவிக்கு  தமிழில் யாக வேள்வி பூஜைகள் நடத்தப்பட்டன. இதனைத் தொடர்ந்து மறுநாள் காலை குடவாசல் சுவாமிகள் தலைமையில் தமிழ் ஆலயத்தில் அமைந்துள்ள குன்று பகுதியில் தமிழ் மன்னர்களில் ஒருவரான இலங்கேஸ்வரன் என்று அழைக்கப்பட்ட ராவணனுக்கு சிறப்பு யாக வேள்வி பூஜைகள் நடத்தப்பட்டன.

நெல்லையில் விளைநிலங்களை சேதப்படுத்திய கால்நடைகளால் விவசாயிகள் கவலை..! பசு மாடுகள் அனைத்தும் சிறைபிடிப்பு...!


இலங்கேஸ்வரன் என்ற ராவணனுக்கு சிறப்பு யாக வேள்வி நடத்திய சிவனடியார்கள்

ராவணன் உருவ படத்திற்கு முன்பு புனித நீர் கலசங்கள் வைக்கப்பட்டும் தமிழ்நாட்டில் விளைவிக்கப்படும் கனிகள் படைக்கப்பட்டும் தமிழில் வேத மந்திரங்கள் ஓதப்பட்டு யாக வேள்வி பூஜைகள் நடத்தப்பட்டன. ராமாயண இதிகாசத்தில் தீவிர சிவ பக்தராக அடையாளப்படுத்தப்பட்ட ராவணனின் சிவ பக்தியை போற்றும் விதமாக பதினோராவது சித்தர் கருவூரார் சுவாமிகளின் குரு வழிபாட்டுச் சீடர்களான சிவ நெறிச் செல்வர்கள் தமிழில் வேத மந்திரங்களை முழங்கினர்.

Budget 2024 Expectations: விரைவில் பட்ஜெட்: கல்வி, வேலைவாய்ப்பில் இளம் தலைமுறை எதிர்பார்ப்புகள் என்ன?


இலங்கேஸ்வரன் என்ற ராவணனுக்கு சிறப்பு யாக வேள்வி நடத்திய சிவனடியார்கள்

இதனைத் தொடர்ந்து சித்த ராமாயணம், இராவண காதை, மண்டோதரி வாக்கு, ராவணன் நீதி, சீதை நீதி என பெயரிடப்பட்ட 60 நூல்கள் குறித்து விளக்க சொற்பொழிவு நிகழ்த்தப்பட்டது. இந்த ராவண யாக வேள்வி பூஜையில் மதுரை, திண்டுக்கல், புதுக்கோட்டை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்து ஏராளமான சிவ பக்தர்கள் பங்கு பெற்றனர். அயோத்தியில் ராமருக்கு சிலை பிரதிஷ்டை நடைபெற்ற நேரத்தில் தமிழ்நாட்டில் ராவணனுக்கு  பூஜைகள் நடைபெற்று இருப்பது ஆன்மீக பக்தர்கள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

தலைப்பு செய்திகள்

காவிரியில் புனித நீராடி... அக்னி குண்டத்தில் இறங்கி... மயிலாடுதுறையைச் சிலிர்க்க வைத்த அக்னி விழா!
காவிரியில் புனித நீராடி...அக்னி குண்டத்தில் இறங்கி... மயிலாடுதுறையைச் சிலிர்க்க வைத்த அக்னி விழா!
அதிக பலன்களை அள்ளித்தரும் ஆடிப் பவுர்ணமி ஆனந்த வழிபாடு
அதிக பலன்களை அள்ளித்தரும் ஆடிப் பவுர்ணமி ஆனந்த வழிபாடு
திங்கட்கிழமையில் சிவபெருமானை வழிபட்டால் இவ்வளவு நன்மைகளா? - வழிபடும் முறை இதோ!
திங்கட்கிழமையில் சிவபெருமானை வழிபட்டால் இவ்வளவு நன்மைகளா? - வழிபடும் முறை இதோ!
மானாமதுரை வீர அழகர் கோயில் ஆடி பிரம்மோத்ஸவம்: சுந்தரராஜப் பெருமாள் திருக்கல்யாணம்!
மானாமதுரை வீர அழகர் கோயில் ஆடி பிரம்மோத்ஸவம்: சுந்தரராஜப் பெருமாள் திருக்கல்யாணம்!

வீடியோ

SHIFT ஆகும் CM விஜய் அலுவலகம்.. BEACH VIEW உடன் புதிய OFFICE
கரூர் கூட்ட நெரிசல் அரசுப் பணி கொடுத்த விஜய்..ரத்து செய்த மதுரை நீதிமன்றம்
வங்கி மேனேஜர் கன்னத்தில் பளார் மு.க.அழகிரி மகள் ஆவேசம்! வெளியான வீடியோ காட்சி!
BAN NEET vs FAIR NEET..மாணவர்களிடையே பிளவு?கைவிடுவதா? தொடர்வதா? குழப்பம்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Tamil Thai Vazhthu: தமிழ்த்தாய் வாழ்த்துக்கு 3-ம் இடமா? தவெக அரசின் நிலைப்பாடு என்ன? மார்க்சிஸ்ட் கேள்வி
Tamil Thai Vazhthu: தமிழ்த்தாய் வாழ்த்துக்கு 3-ம் இடமா? தவெக அரசின் நிலைப்பாடு என்ன? மார்க்சிஸ்ட் கேள்வி
EPS Condemn Central Minister: மத்திய நீர்வளத்துறை இணை அமைச்சரின் பதிலால் காவிரி நதி நீர் பாயும் மாநில மக்கள் பதற்றம் - இபிஎஸ் அறிக்கை
மத்திய நீர்வளத்துறை இணை அமைச்சரின் பதிலால் காவிரி நதி நீர் பாயும் மாநில மக்கள் பதற்றம் - இபிஎஸ் அறிக்கை
Iran Vs Trump: ''நாங்க பேசனும்னு சொன்னோமா.? அவர் தானாவே போர நிறுத்திட்டார்''; ட்ரம்ப்பை கழுவி ஊற்றும் ஈரான்
''நாங்க பேசனும்னு சொன்னோமா.? அவர் தானாவே போர நிறுத்திட்டார்''; ட்ரம்ப்பை கழுவி ஊற்றும் ஈரான்
TVK - Congress Alliance : ‘பாஜகவின் ஆபரேஷன் TC’ தவெக – காங்கிரஸ் கூட்டணியை முறிக்க பலே திட்டம்..!
‘பாஜகவின் ஆபரேஷன் TC’ தவெக – காங்கிரஸ் கூட்டணியை முறிக்க பலே திட்டம்..!
Mekadatu Dam: தமிழக அனுமதி வேண்டாமா? மத்திய அமைச்சர் சொன்னது தவறு - பிரதமருக்கு CM விஜய் கடிதம்
தமிழக அனுமதி வேண்டாமா? மத்திய அமைச்சர் சொன்னது தவறு - பிரதமருக்கு CM விஜய் கடிதம்
Vaiko Book Release : ’புத்தக வெளியீட்டிற்கு டெல்லி செல்ல மறுத்த முதல்வர் விஜய்?’ வைகோ சொல்வது உண்மையா..? – காரணம் என்ன ?
’புத்தக வெளியீட்டிற்கு டெல்லி செல்ல மறுத்த முதல்வர் விஜய்?’ வைகோ பேச்சு உண்மையா..?
Tamil Thai Vazhthu:கடும் எதிர்ப்பு; 3ஆம் இடத்தில் தமிழ்த்தாய் வாழ்த்து- மனோன்மணியம் சுந்தரனார் பல்கலை. சர்ச்சை
Tamil Thai Vazhthu:கடும் எதிர்ப்பு; 3ஆம் இடத்தில் தமிழ்த்தாய் வாழ்த்து- மனோன்மணியம் சுந்தரனார் பல்கலை. சர்ச்சை
Chennai Power Cut: சென்னை மக்களே.! ஜூலை 29-ம் தேதி நிறைய இடங்கள்ல பவர் கட் இருக்கு; இந்த லிஸ்ட்ல உங்க ஏரியா இருக்கா பாருங்க.?
சென்னை மக்களே.! ஜூலை 29-ம் தேதி நிறைய இடங்கள்ல பவர் கட் இருக்கு; இந்த லிஸ்ட்ல உங்க ஏரியா இருக்கா பாருங்க.?
Embed widget