சீர்காழி சட்டைநாதர் சுவாமி கோயிலில் ஆடி மாத பிரதோஷ வழிபாடில் நந்தி பகவானுக்கு நடைபெற்ற சிறப்பு அபிஷேக ஆராதனை வழிபாடில் சுற்றுவட்டார பகுதிகளில் இருந்து திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர். 


ஆடி மாத வழிபாடு 


கடந்த ஜுலை 17 -ம் தேதி ஆடி மாதம் துவங்கியது, ஆடி மாதம் என்றாலே குறிப்பாக தமிழகத்தில் உள்ள இந்து கோயில்களில் திருவிழாக்கள் களைகட்ட துவங்கிவிடும், அதனைத் தொடர்ந்து பல்வேறு கோயில்களிலும் தீமிதி, காவடி எடுத்தல், பால்குட ஊர்வலம், முளைப்பாரி எடுத்தல், பொங்கல் வைத்தல் என பல்வேறு வகையான திருவிழாக்கள் கோயில்களில் நடைபெறும். அந்த வகையில் மயிலாடுதுறை மாவட்டத்தில் பல்வேறு கோயில்களில் கடந்த இரண்டு நாட்களாக திருவிழாக்கள் தொடங்கி நடைபெற்று வருகின்றன.


Kuchanur Saneeswaran Temple: ஆடி சனிக்கிழமை... சனீஸ்வரர் பகவான் கோயிலில் திரளான பக்தர்கள் சாமி தரிசனம்



ABP கோயில் உலா: சீர்காழி சட்டைநாதர் கோயிலில் ஆடி பிரதோஷ சிறப்பு வழிபாடு


பிரசித்தி பெற்ற சட்டைநாதர் கோயில் 


மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழியில் தருமபுரம் ஆதீனத்திற்கு சொந்தமான புராதண சிறப்பு வாய்ந்த மிகவும் பழமையான திருநிலை நாயகி அம்பாள் சமேத பிரம்மபுரீஸ்வரர்  திருக்கோயில் அமைந்துள்ளது. இக்கோயிலில் சிவபெருமான் சுயம்புவாக எழுந்தருளி பக்தர்களுக்கு அருள் பாலிக்கிறார். தேவாரப் பாடல் பெற்ற 274 சிவாலயங்களில் 14 வது தலமான இக்கோயில் சோழர் கட்டிடக்கலை அமைப்பைக் கொண்டது.


சங்கரன்கோவில் ஆடித்தபசு நிகழ்விற்கு செல்லும் பக்தர்களே.. காவல்துறை அறிவிப்பு இதோ உங்களுக்காக!




கோயிலின் சிறப்புகள் 


இங்கு பிரம்ம தீர்த்தம் உள்ளிட்ட 22 தீர்த்தங்கள் அமைந்துள்ளன. இக்கோயிலில் சுவாமி பிரம்மபுரீஸ்வரர், தோனியப்பர், சட்டைநாதர் என மூன்று நிலைகளில் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சி அளிக்கிறார். சீர்காழியில் சிவபாத இருதயருக்கும் பகவதி அம்மையாருக்கும் மகனாகப் பிறந்து கோயிலில் அம்பாளிடம் ஞானப்பால் அருந்தியதால் ஞானம் பெற்று தனது மூன்றாவது வயதில் தோடுடைய செவியன் என்ற தேவாரத்தின் முதல் பதிகத்தை அருளிய திருஞானசம்பந்தருக்கு இக்கோயில் தனி சன்னதி அமையப் பெற்றுள்ளது.


Olympics 2024: பாரீஸ் ஒலிம்பிக் திருவிழா! இந்தியாவிற்காக பங்கேற்கும் தடகள வீரர், வீராங்கனைகள் யார்? யார்? முழு விவரம்




ஆடி மாத பிரதோஷ வழிபாடு  


ஆடி மாத பிரதோஷத்தை முன்னிட்டு கோயில் கொடி மரம் அருகே அருள் பாலிக்கும் நந்தி பகவானுக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. திரவிய பொடி, மஞ்சள் பொடி, அரிசி பொடி, சந்தனம், பால், தயிர், பழச்சாறு, தேன், பஞ்சாமிர்தம், இளநீர், விபூதி, பன்னீர் உள்ளிட்ட மங்கள மற்றும் வாசனை திரவியங்களை  கொண்டு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. தொடர்ந்து மலர்களால் அலங்கரிக்கப்பட்ட நந்தி தேவருக்கு சிறப்பு பூஜைகள் செய்து மகா தீபாரதனை காண்பிக்கப்பட்டது. இதில் சீர்காழி சுற்றுவட்டார பகுதிகளில் இருந்து திரளான பக்தர்கள் வருகை தந்து  நந்தி பகவானை வழிபாடு செய்தனர்.


TN DSP Transfer: தொடரும் தமிழக அரசின் அதிரடி - முக்கிய நகரங்களைச் சேர்ந்த டிஎஸ்பிக்களை மாற்றி உத்தரவு