சனீஸ்வர பகவானுக்கு என்று ஒரு சுயம்பு ஆலயம் என்பது தேனி மாவட்டம் உத்தமபாளையம் அருகே உள்ள குச்சனூரில் மட்டும்தான் உள்ளது என்று கூறப்படுகிறது. இந்த ஆலயமானது சுருளியாறு முல்லைப் பெரியாரும் இணைந்த கிளை நதியான சுரபி நதிக்கரையில் அமைந்துள்ளது. முன்பொரு காலத்தில் கலிங்க நாட்டை ஆட்சிசெய்த தினகரன் என்ற மன்னரின் மகனான சந்திரவதனன் என்பவரால் இந்த கோவில் நிறுவப்பட்டது என்று கூறப்படுகிறது.


Latest Gold Silver Rate:அதிரடியாக குறைந்த தங்கம் விலை; இன்றைய நிலவரம் இதோ!




தமிழகத்தில் தனிப்பெரும் கோவிலில் சனீஸ்வரர் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலிக்கும் ஒரே இடமாக குச்சனூர் கோவில் விளங்குகிறது. இந்த கோவிலில் ஒவ்வொரு ஆண்டும் ஆடி மாதத்தில் வரும் சனிக்கிழமைகளில் ஆடி பெருந்திருவிழா நடைபெறுவது வழக்கம். இந்த திருவிழாவில் தமிழகம் மட்டுமின்றி கேரளா, கர்நாடக உள்ளிட்ட வெளிமாநிலங்களில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு, தங்களது தோஷங்கள் நீங்க நேர்த்திக்கடனை செலுத்தி வழிபாடு செய்து வருகிறார்கள்.


தமிழ்நாடு வருகிறார் ராகுல் காந்தி - எப்போது தெரியுமா? செல்வப் பெருந்தகை சொன்ன தகவல்




இந்த கோவிலில் ஆண்டுதோறும் ஆடி மாத சனிக்கிழமைகளில் சிறப்பு வழிபாடு நடைபெறும். இந்து அறநிலையத் துறையின் கட்டுப்பாட்டில் உள்ள இக்கோயிலில் ஆண்டுதோறும் ஆடி மாதம் சனிவாரத் திருவிழா வெகு விமரிசையாக நடைபெறும். நிகழாண்டில் கோயிலில் கொடி மரம் உள்பட பல்வேறு கட்டுமானப் பணிகள் நடைபெறுவதால் ஆடி சனிவாரத்திருவிழா ரத்து செய்யப்பட்டது. இருப்பினும் ஆகம விதிப்படி ஆடி மாத சனிக்கிழமைகளில் பக்தர்கள் வழிபாடு நடத்திட உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.


Breaking News LIVE, July 20: குஜராத்தில் பரவும் புதிய வகை வைரஸ்: 29 பேர் பாதிப்பு




இந்நிலையில்  ஆடி மாத முதல் சனிக்கிழமையான இன்று குச்சனூர் சனீஸ்வரர் பகவான் கோயிலில் வழிபட பக்தர்கள் குவியத் தொடங்கினர்.‌ சுரபி நதியில் புனித நீராடிய பக்தர்கள் எள் தீபம்,பொறி படைத்தும், காக்கை வடிவிலான மண் சிலை வைத்தும் பக்தர்கள் பகவானை வழிபட்டனர். தொடர்ந்து ஆடி மாதம் மூன்றாம் வெள்ளிக்கிழமையான ஆகஸ்ட் 2 ஆம் தேதியன்று நீலாதேவி - சனீஸ்வரர் பகவான் திருக்கல்யாணம் நடைபெறும். இதையடுத்து ஆகஸ்ட் 12 ஆம் தேதியன்று சோனை கருப்பண்ணசாமிக்கு மது படையல் மற்றும் கறி விருந்துடன் ஆடி சனிவார விழா நிறைவு பெறும். ஆடி சனிக்கிழமையை முன்னிட்டு தமிழகம் மட்டுமின்றி கேரள, கர்நாடகா, பாண்டிச்சேரி உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் குச்சனூர் சனீஸ்வரர் பகவான் கோயிலில் சுவாமி தரிசனம் செய்தனர்.