TN DSP Transfer:  தமிழ்நாட்டின் 9 முக்கிய நகரங்களைச் சேர்ந்த ஏஎஸ்பி மற்றும் டிஎஸ்பிக்களை மாற்றி அரசு உத்தரவிட்டுள்ளது.


9 காவல்துறை அதிகாரிகள் பணியிட மாற்றம்:


அதன்படி, தாம்பரம், தாம்பரம், நாகை, திருச்சி, திருநெல்வேலி, மதுரை, திருப்பத்தூர், மாவட்ட டிஎஸ்பிக்களை மாற்றி, சட்ட ஒழுங்கு டிஜிபி சங்கர் ஜிவால் உத்தரவிட்டுள்ளார். மேலும், திருப்பத்தூர் கூடுதல் காவல் கண்காணிப்பாளர் முத்துமாணிக்கும் போலீஸ் அகாடெமிக்கு மாற்றம். மதுர - மேலூர், திருச்சி-முசிறி காவல் கண்காணிப்பாளர்களும் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.


பணியிட மாற்ற விவரங்கள்:



  • தமிழ்நாடு காவல் அகாடமி கூடுதல் காவல் கண்காணிப்பாளராக முத்து மாணிக்கம் பணியிடமாற்றம்

  • ராஜபாளையம் துணை காவல் கண்காணிப்பாளராக பிரீத்தி நியமனம்

  • மேலூர் துணை காவல் கண்காணிப்பாளராக வேல்முருகன் இடமாற்றம்

  • தமிழ்நாடு காவல் அகாடமி துணை காவல் கண்காணிப்பாளராக யாஸ்மின் நியமனம்

  • ஊமச்சிக்குளம் துணை காவல் கண்காணிப்பாளராக பாலசுந்தரம் நியமனம்

  • கள்ளக்குறிச்சி கூடுதல் காவல் கண்காணிப்பாளராக குத்தாலிங்கம் நியமனம்

  • தாம்பரம் மணிமங்கலம் சரக உதவி காவல் ஆணையராக இளஞ்செழியன் இடமாற்றம்

  • ஈரோடு குடிமைப் பொருள் வழங்கல் சிஐடி பிரிவு  துணை காவல் கண்காணிப்பாளராக ராஜபாண்டியன் இடமாற்றம்


தொடரும் அதிரடி மாற்றங்கள்:


கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய மரணங்கள் மற்றும் ஆம்ஸ்ட்ராங் படுகொலை, தமிழ்நாட்டில் சட்ட-ஒழுங்கு பற்றிய கேள்வி எழுப்பியது. இதையடுத்து சட்ட ஒழுங்கை நிலைநாட்டும் நோக்கில் பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை தமிழ்நாடு அரசு மேற்கொண்டு வருகிறது. குறிப்பாக சென்னை காவல் கண்காணிப்பாளர் உள்ளிட்ட பல காவல்துறை அதிகாரிகள் பணியிடமாற்றம் செய்யப்பட்டனர். தொடர்ந்து, உள்துறை அமைச்சர் அமுதா உள்ளிட்ட ஐஏஎஸ் அதிகாரிகளும் மாற்றப்பட்டனர். அந்த வரிசையில் தற்போது முக்கிய நகரங்களைச் சேர்ந்த டிஎஸ்பிக்கள் மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.