Olympics 2024: பாரீஸ் ஒலிம்பிக் திருவிழா! இந்தியாவிற்காக பங்கேற்கும் தடகள வீரர், வீராங்கனைகள் யார்? யார்? முழு விவரம்

பாரீசில் நடைபெற உள்ள ஒலிம்பிக் போட்டியில் இந்தியா சார்பில் பங்கேற்க உள்ள தடகள வீரர்கள் யார்? யார்? என்பதை கீழே காணலாம்.

Continues below advertisement

உலகின் மிகப்பெரிய விளையாட்டு திருவிழாக்களில் ஒன்று ஒலிம்பிக் திருவிழா ஆகும். வரும் 26ம் தேதி ஒலிம்பிக் திருவிழா பிரான்ஸ் நாட்டின் தலைநகரான பாரீசில் தொடங்க உள்ளது. இதற்காக பிரம்மாண்ட ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.

Continues below advertisement

இந்த சூழலில், பாரீஸ் ஒலிம்பிக் திருவிழாவில் பங்கேற்பதற்கான இந்திய வீரர்கள், வீராங்கனைகள் பட்டியல் ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தியா அதிகளவு பதக்கங்களை வெல்ல வாய்ப்புள்ள போட்டிகளில் தடகளம் முக்கியமானதாக கருதப்படுகிறது.

ஒலிம்பிக் தடகளப் போட்டிகளில் பங்கேற்க உள்ள இந்திய வீரர்கள் யார்? யார்? என்பதை கீழே விரிவாக காணலாம். தடகளத்தில் மொத்தம் 29 வீரர்கள், வீராங்கனைகள் பங்கேற்க உள்ளனர்.

ஆண்கள்:

உயரம் தாண்டுதல்                                    - சர்வேஷ்  குஷாரே

மராத்தன் ரேஸ் வாக் மிக்ஸ்ட் ரிலே      - சூரஜ் பன்வார்

20 கி.மீ. நடைபோட்டி                                  - அக்‌ஷ்தீப்சிங், விகாஸ்சிங், பரம்ஜித் பிஷ்த்

ஈட்டி எறிதல்                                                  - கிஷோர் ஜேனா, நீரஜ் சோப்ரா

4x400 மீட்டர் ரிலே                                         -  முகமது அனஸ், முகமது அஜ்மல், அமோஜ் ஜேகப்,    

                                                                             சந்தோஷ் தமிழரசன், ராஜேஷ் ரமேஷ்

300 மீ தடைதாண்டும் ஓட்டம்                     – அவினாஷ் சப்ளே

குண்டு எறிதல்                                            - தஜிந்தேர்பல்சிங் தூர்

ட்ரிப்ள் ஜம்ப்                                                - அப்துல்லா அபூபக்கர், ப்ரவீன் சித்ரவேல்

நீளம் தாண்டுதல்                                       - ஜெஸ்வின் ஆல்ட்ரின்

 

பெண்கள் :

ஈட்டி எறிதல்                                                  - அன்னு ராணி

300 மீ தடை தாண்டும் ஓட்டம்                   – பரூல் சௌத்ரி

5000 மீ ஓட்டப்பந்தயம்                                 - பரூல் சௌத்ரி

400 மீ ஓட்டப்பந்தயம்                                  - கிரண் பஹல்

4x400 ரிலே ஓட்டப்பந்தயம்                      - கிரண் பஹல்

100 மீ தடை தாண்டும் ஓட்டம்                – ஜோதி யர்ராஜி

5000 மீ ஓட்டம்                                             - அங்கிதா த்யானி

20 கி.மீ. நடைபோட்டி                             - ப்ரியங்கா கோஸ்வாமி

மராத்தான் ரேஸ்வாக்                           - ப்ரியங்கா கோஸ்வாமி

ரிசர்வ்ட் வீரர்கள் : ப்ரசி, மிஜோ சாக்கோ குரியன்

 

Continues below advertisement