இந்த வருடத்தின் கடைசி சூரிய கிரகணம் வரும் டிசம்பர் 4ம் தேதி நடக்கவுள்ளது. கடந்த ஜூன் 10ம் தேதி தோன்றிய சூரியக் கிரகணத்தை விட தற்போது தோன்றவுள்ள சூரிய கிரகணம் முழு சூரிய கிரகணம் ஆகும். வரப்போகும் சூரியக் கிரகணம் 4 மணி நேரம் 8 நிமிடங்கள் நீடிக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்திய நேரப்படி சூரியக் கிரகணம் டிசம்பர் 4ம் தேதி காலை 10.59க்கு தொடங்கவுள்ளது. இந்த மொத்த சூரியக் கிரகணம் மதியம் 12.30 மணிக்கு முடிவடைகிறது. அதிகபட்சமாக நீடித்தால் மதியம் 1.03 மணி வரை இது நீடிக்கும். முழு சந்திரகிரகணம் மதியம் 1.33 மணிக்கு முடிவடையும் என தெரிவிக்கப்பட்டுள்ளது
டிசம்பர் 4 சூரிய கிரகணம் அண்டார்டிகா கண்டத்தில் நிகழும் துருவ கிரகணமாக தெரியும். சூரிய கிரகணம் உலகின் பல பகுதிகளில் இருந்து தெரியும். இருப்பினும், இந்தியாவில் இருந்து பார்க்க முடியாது. இந்த சூரிய கிரகணம் தென் அமெரிக்கா, ஆஸ்திரேலியா, தென்னாப்பிரிக்கா மற்றும் அண்டார்டிகாவைத் தவிர தெற்கு அட்லாண்டிக் நாடுகளில் இருந்து தெரியும்.
இந்தியாவில் இருந்து நேரடியாக பார்க்க முடியவில்லை என்றாலும் ஆன்லைன் மூலம் இதனை பார்க்க முடியும். டிசம்பர் 4 சூரிய கிரகணத்தை நாசாவின் நேரடி ஒளிபரப்பு மூலம் பார்க்கலாம். இது அண்டார்டிகாவில் உள்ள யூனியன் பனிப்பாறையிலிருந்து காட்சியைக் காண்பிக்கும். இந்த நிகழ்வு நாசாவின் யூடியூப் சேனலில் நேரடியாக ஒளிபரப்பப்படும். அதுமட்டுமின்றி, சூரிய கிரகணத்தை நாசாவின் அதிகாரப்பூர்வ இணையதளத்திலும் நேரடியாக பார்க்கலாம்.
மேலும் படிக்க...
இந்த பாகங்களில் தொடர்ச்சியாக வலி இருந்தால் கவனிங்க.. மாரடைப்பின் அறிகுறியாக இருக்கலாம்..
Jaw Pain and Heart Attack | தாடை வலி, மாரடைப்பு வருவதற்கான அறிகுறியா?
முடி கொட்டுதா? பிரச்னை இதுதான்..! தலைமுடியும்.. தெரியாத தகவல்களும்!
Diabetes | சர்க்கரை நோய் குறித்து பரப்பப்படும் டாப் 10 பொய்கள் இவைதான்.. இதையெல்லாம் நம்பாதீங்க..
மழைக்காலத்தில் உடலை கதகதப்பாக்கும் உணவுகள் இதோ!
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்