பிலடெல்பியாவில் 14 வயது சிறுவனை மர்ம கும்பல் சராமரியாக சுட்டுத்தள்ளிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பள்ளியில் இருந்து வீட்டிற்கு செல்ல பேருந்துக்காக காத்திருந்த போது இந்த படுகொலை நடந்துள்ளது. சமீர் சபர்ஷன் என்ற மாணவர் மாலை 3.30 மணியளவில் பேருந்துக்காக காத்திருந்துள்ளார். அப்போது அங்கு வந்த இருவர் பள்ளி மாணவர் மீது சரமாரியாக சுட்டுள்ளனர். கிட்டத்தட்ட 36 முறைக்கு மேல் அவர் மீது துப்பாக்கியால் சுட்டுள்ளனர்.
இதில் 18 குண்டுகள் பள்ளி மாணவர் மீது பாய்ந்துள்ளது. இந்த திடீர் தாக்குதலால் நிலைகுலைந்த மாணவர் சம்பவ இடத்திலேயே சுருண்டு விழுந்துள்ளார். உடனடியாக அருகில் உள்ள மருத்துவமனையில் சேர்க்கப்பட்டும், அந்த மாணவர் உயிரிழந்துள்ளார். இது குறித்து தெரிவித்த போலீசார், இந்த விபத்தை அங்கு நின்றிருந்த பலரும் நேரில் பார்த்துள்ளனர். சிலர் செல்போனில் படம் பிடித்துள்ளனர். அங்குள்ள சிசிடிவி கேமராவிலும் இந்த விபத்து பதிவாகியுள்ளது. இதுவரை இந்த கொடூர கொலைக்கான காரணம் தெரியவில்லை. அது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
மாணவர் இறப்பு குறித்து பேசிய காவல் ஆணையர், ' மீண்டும் ஒரு இளம் நபரை துப்பாக்கி வன்முறைக்கு நாம் பறிகொடுத்துள்ளோம். இழந்தவர்களை எங்களால் திரும்பக் கொண்டுவர முடியாது என்றாலும், இந்த வழக்குகள் முழுமையாக விசாரிக்கப்படுவதை பிலடெல்பியா காவல் துறை உறுதி செய்யும். பாதிக்கப்பட்டவர்களின் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக்கொள்கிறோம் என்றார்
பிலடெல்பியாவில் 2021 ஆம் ஆண்டு கடந்த திங்கட்கிழமை இறுதிவரை 508 கொலைகள் பதிவாகியுள்ளன. இது 1990 ஆம் ஆண்டிலிருந்து கணக்கிட்டால் அதிக எண்ணிக்கையாகும். காவல் துறை எண்களின்படி கடந்த ஆண்டை விட 12% அதிகமாக இந்த ஆண்டு கொலைவழக்கு பதிவாகியுள்ளது. இதில் கவனிக்கத் தக்க தகவல் என்னவென்றால் அந்தக் கொலைகளில் 18 வயதுக்குட்பட்ட 30க்கும் மேற்பட்டோர் அடங்குவர்.
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்
சமீபத்திய லைப்ஸ்டைல் செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் லைப்ஸ்டைல் செய்திகளைத் (Tamil Lifestyle News) தொடரவும்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்