உலக நாடுகளில் வாழ்க்கைச் செலவு மிகவும் அதிகமான நகரமாக இஸ்ரேல் நாட்டின் டெல் அவீவ் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது. 


உலகின் 170 நாடுகளில், வாழ்க்கைச் செலவு ஒப்பீட்டளவில் எந்தளவிற்கு அதிகரித்துள்ளதை என்பதை இஐயு நிறுவனம் ஆண்டுதோறும் Worldwide Cost of Living cities என்ற புள்ளிவிவர அறிக்கையை வெளியிட்டு வருகிறது. இந்த அறிக்கையானது வாழ்க்கைச் செலவில் ஏற்படும் அடிப்படை மாற்றங்களைப் பிரதிபலிப்பதால் நகர ஆட்சியாளர்களுக்கு அதிகம் பயனுள்ளதாக அமைகிறது.




2021ல் இசுரேலின் டெல் அவீவ் நகரம் முதலிடத்தைப் பெற்றுள்ளது. கடந்தாண்டு ஐந்தாவது இடத்தில் இருந்த டெல் அவீவ், முதல் மற்றும் இரண்டாம் இடத்தில் இருந்த பாரிஸ் மற்றும் சிங்கப்பூர் நகரங்களை பின்னுக்குத் தள்ளியுள்ளது. பொருள்களை உற்பத்தி செய்வது, வழங்குவது ஆகியவையில் ஏற்பட்டுள்ள தடைகள், அந்நிய நாணயத்துக்கான பரிமாற்ற விகிதம் உயர்வு, நுகர்வில் ஏற்பட்டுள்ள மாற்றங்கள் ஆகியவற்றின் காரணமாக வாழ்க்கை செலவு அதிகரித்திருபப்தாக ஆய்வறிக்கை தெரிவிக்கிறது.  கொரோனா தொற்றுக்கு முந்தைய நிலவரத்துடன் ஒப்பிடுகையில், தற்போது அனைத்து நகரங்களிலும் சராசரியாக பணவீக்க விகிதம் அதிகரித்து காணப்படுகிறது. 2020ல் 1.9% ஆகவும், 2019ல் 2.8% ஆகவும் இருந்த பணவீக்க விகிதம் தற்போது  3.5% ஆக அதிகரித்து காணப்படுகிறது.               


கொரோனா பெருந்தொற்று காரணமாக ஏற்பட்ட நெருக்கடி காலத்தில் சந்தை  பொருள்களை உற்பத்தி செய்வது, வழங்குவது ஆகியவை மிகவும் தடைபட்டதாகவும், இதனால் ஏற்பட்ட பற்றாக்குறை காரணமாக தற்போது பொருட்களின் விலைகள் உயர்ந்துள்ளதாக தெரிவித்துள்ளது.  உதாரணமாக, டெல் அவீவ் நகரில் மளிகைப் பொருட்கள், போக்குவரத்து போன்றவைகளின் விலையேற்றம் காரணமாக, பெரும்பாலான சந்தைப் பொருட்களின் விலை 10% வரை அதிகரித்துள்ளது. இதன், இந்நகரரின் வாழ்க்கை செலவை முக்கிய காரணியாக அமைந்திருக்கிறது.




மலிவான வாழ்க்கை செலவு கொண்ட நகரங்களில் தமாஸ்கஸ் (சிரியா), திரிப்பொலி (tripoli- லிபியா) இடம்பெற்றுள்ளன. இந்த இரண்டு நகரங்களும் உள்நாட்டு அரசியல் பிரச்சனைகளை சந்தித்து வருகிறது.  இந்த பட்டியலில், இந்தியாவின் அகமதாபாத் நகரம் 7வது இடத்தைப் பிடித்துள்ளது. கடந்தாண்டுடன் ஒப்பிடுகையில், பெரும்பாலான அமெரிக்க நகரங்களில் வாழ்க்கை செலவு குறைந்திருப்பதாக ஆய்வறிக்கையில் கூறப்பட்டுள்ளது.


சர்வதேச அளவில் பொருளாதார மூலப்பொருட்களின் விலை அதிகரிப்பு காரணமாக இந்தியாவில் பணவீக்கம் அடுத்த ஓராண்டுக்கு நீடிக்கலாம் எனப் பொருளாதார நிபுணர்கள் கணிக்கின்றனர்.