உருமாற்றமடைந்த கொரோனா வகையான ஓமைக்ரான் அச்சுறுத்தல் காரணமாக, வெளிநாடுகளிலிருந்து இந்தியா வருகைதருபவர்களுக்கு வழிகாட்டிதல் நெறிமுறைகள் இறுகுகிறது. ”அபாயம்” என குறிக்கப்பட்ட நாடுகளில் இருந்து வருபவர்களுக்கு கூடுதல் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது. அதாவது, சுகாதார அமைச்சகத்தில் வழிகாட்டுதல் நெறிமுறைகளின்படி, “Countries at risk" எனக் குறிக்கப்பட்ட நாடுகளில் இருந்து வருகை தருபவர்கள், விமான நிலையத்திலேயே கொரோனா சோதனை மேற்கொண்டு, அதற்கான அறிக்கை கிடைக்கும்வரை விமான நிலையத்தில் காத்திருக்க வேண்டும்.


அமெரிக்காவின் தலைமை மருத்துவ அதிகாரியான ஆண்டனியோ ஃபெளசி ஓமைக்ரோன் வகை கொரோனா குறித்து பேசியதில், “ஓமைக்ரான் மிக எளிதாக பரவும் அறிகுறிகளைக் காட்டியுள்ளது. அனைத்து நாடுகளும் ஓமைக்காரனுக்கு எதிராக எந்தவிதமான நடவடிக்கைகளும் எடுக்கத் தயாராக இருப்பது அவசியம்” எனத் தெரிவித்துள்ளார். மேலும், ஓமைக்ரான் வகை கொரோனாவைத் தடுக்க அமெரிக்கா மீண்டும் லாக்டவுன் நடவடிக்கை எடுக்க தேவையாக இருப்பின் அதையும் செய்ய வேண்டியது அவசியமாகும் எனக் குறிப்பிட்டுள்ளார்.


கோவிட்-19 வைரசின் புதிய மாறுபாடு மறுபடியும் ஒருமுறை தடுப்பூசியின் செயல்திறனை கேள்விக்குட்படுத்தி இருக்கிறது. ஓமைக்ரான், கொரோனா வைரசின் புதிய மாறுபாடு தடுப்பூசியை வலுவிழக்கச் செய்யலாம் என்று எய்ம்ஸ் ஆய்வு கூறுகிறது. ஓமைக்ரான் வைரசின் மேற்பரப்பில் உள்ள புரத மூலக்கூறுகளில் 30-க்கும் மேற்பட்ட மாறுபாடுகள் நடந்திருப்பதாக எய்மஸ் முதன்மை மருத்துவர் ரந்தீப் குலேரியா கூறுகிறார். பொதுவாக தடுப்பூசிகள் வைரசின் மேற்பரப்பிலுள்ள புரதக் கூறுகளுக்கு எதிராக செயல்படுவதன் மூலமாகத்தான் உடலின் எதிர்ப்புத் திறனை தூண்டி விடும். தற்போது, வைரஸில் ஏற்பட்டிருக்கும் மாறுபாடுகள் அதற்குத் தடை விதிப்பதால், ஓமைக்ரான் தடுப்பூசியிலிருந்து எதிர்ப்புத் திறனை வளர்த்துக்கொண்டிருப்பதாகக் கருதலாம் என்று அவர் கூறினார்.  


உலக சுகாதார மையம், ஓமைக்ரான் ம்யூடண்ட் குறித்து உலக நாடுகளை எச்சரித்துள்ளது. இது மேலும் ஓமைக்ரான் குறித்த பதற்றத்தை உலக நாடுகளிடம் மேலும் அதிகப்படுத்தியுள்ளது.






மேலும் படிக்க:-


ஓமைக்ரான் வகை கொரோனா, மிக எளிதாக பரவக்கூடிய அறிகுறியைக் கொண்டுள்ளது - தலைமை மருத்துவ ஆலோசகர்