ஒரு உயிரை காப்பதற்கு மருத்துவர்கள் எவ்வளவு அவசியமோ அதே அளவு அவசியம் ஆம்புலன்ஸ்கள். சரியான காரணத்துக்கு மட்டுமே ஆம்புலன்ஸை பயன்படுத்த வேண்டும். ஆனால் தைவானில் ஒரு சம்பவம் அரங்கேறியுள்ளது.


தைவானில் வாங் என்ற நபர் வசித்துவருகிறார். பல்பொருள் அங்காடியில் பணியாற்றும் வாங்கின் வீடு மருத்துவமனையின் அருகில் இருக்கிறது. தூரம் 200 மீட்டர் மட்டுமே. ஆனால் நடந்து செல்வதற்கு சோம்பேறிப்பட்ட வாங் 39 முறை இதுவரை ஆம்புலன்ஸை அழைத்திருக்கிறார்.


மேலும் வாசிக்க: Watch Video: தியேட்டருக்குள் பட்டாசு.. ராக்கெட்டு.. விபத்தை விலை கொடுத்து வாங்கும் ரசிகர்கள்..! ஷாக் வீடியோ!




பல்பொருள் அங்காடியிலிருந்து மருத்துவமனை வரை ஆம்புலன்ஸில் செல்லும் அவர் அங்கிருந்து தனது வீட்டுக்கு நடந்து செல்வதை வாடிக்கையாக வைத்திருக்கிறார். 


காவல்துறை காரில் பெண்ணுடன் செக்ஸ்... வெளியான வீடியோ.. வேலையைப் பிடுங்கிய நிர்வாகம்..


குளோபல் டைம்ஸின் அறிக்கையின்படி, வாங் அடிக்கடி உடல்நிலை சரியில்லாமல் இருப்பதுபோல் நடித்திருக்கிறார். ஆம்புலன்ஸை அழைப்பதற்கு தனது 'நோயை' அவர் காரணம் காட்டியிருக்கிறார். இதனையடுத்து பல்பொருள் அங்காடியிலிருந்து ஆம்புலன்ஸில் மருத்துவமனைக்கு செல்லும் அவர் அங்கிருந்து வீட்டிற்கும் சென்றுவிடுவார்.


தொடர்ந்து இவ்வாறு செய்துகொண்டிருந்த வாங், ஒருமுறை மருத்துவமனைக்கு சென்று செக் அப் எதுவும் செய்யாமல் செல்வதை மருத்துவமனை ஊழியர்கள் கவனித்துள்ளனர். இதனையடுத்து இதுதொடர்பாக காவல் துறையினருக்கு புகார் அளித்தனர்.


இரண்டாம் முறையாக செக்ஸ் பொம்மையை திருமணம் செய்த பாடிபில்டர்: அடுத்த ஹனிமூனுக்கு இதோ தயார்!


உடனடியாக வாங்கை பிடித்த காவல் துறையினர் ஆம்புலன்ஸை மருத்துவ தேவைக்காக மட்டுமே பயன்படுத்த வேண்டும். இனி இதுபோல் சுயதேவைக்காக பயன்படுத்தக்கூடாது. மீறி பயன்படுத்தினால் அபராதம் விதிக்கப்படும்” என்று எச்சரித்து அனுப்பினர். இந்தச் சம்பவம் தைவானில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூட்யூபில் வீடியோக்களை காண  


2nd Baby for Arulnithi: வீட்டுக்கு வந்த தேவதை.. அருள்நிதி சொன்ன ஸ்வீட் நியூஸ்!


SJ Suryah | நடிப்பில் மாஸ்.. வரிசைகட்டும் படங்கள்..! இனி எல்லாத்துலயும் எஸ்.ஜே.சூர்யா தான்.!


Omicron - CoronaVirus Live Updates | ஓமைக்ரான் அச்சுறுத்தல் : வெளிநாடுகளிலிருந்து இந்தியா வருபவர்களுக்கு, வழிகாட்டுதல் நெறிமுறைகள் இறுகுகிறது..