உலகளவில் காவல்துறையினர் மீதும் பல புகார்கள் எழுந்து வருவதை நாம் பார்த்திருப்போம். இந்தியாவில் மட்டுமல்லாமல் பல்வேறு நாடுகளிலும் விசாரணை மரணங்கள் பெரிய குற்றமாகவே இருந்து வருகின்றன. அப்படி மிகவும் முக்கியமான குற்றங்கள் இருக்கும் போது ஒரு சில வித்தியாசமான குற்றங்களும் காவலர்கள் மீது வைக்கப்பட்டு வருகின்றன. அந்தவகையில் தற்போது ஒரு காவலர் செய்த செயல் அவருடைய வேலையையே பறிக்கும் வகையில் அமைந்துள்ளது. யார் அவர்? என்ன செய்தார்?
அமெரிக்காவின் விஸ்கான்சின் பகுதியில் மாடிசென் காவல்துறை செயல்பட்டு வருகிறது. இந்த காவல்துறையினர் ரெஜினால்ட் பெட்டர்சென் என்ற நபர் பணியாற்றி வருகிறார். இவர் அங்கு கடந்த 15 ஆண்டுகளுக்கும் மேலாக காவலராக பணியாற்றி வருகிறார். இந்தச் சூழலில் கடந்த செப்டம்பர் மாதம் 16ஆம் தேதி ஒரு வீடியோ ஒன்று வெளியானது. அந்த வீடியோவில் மாடிசென் காவல்துறையின் வாகனத்தில் ஒரு காவலர் ஒருவர் பெண்ணுடன் உடலுறவில் ஈடுபடுவது போல் காட்சிகள் இடம்பெற்று இருந்தன.
இந்த வீடியோ பெரும் சர்ச்சையை கிளப்பியது. இந்த வீடியோவில் இருக்கும் காவலர் ரெஜினால்ட் பெட்டர்சென் என்று சந்தேகம் எழுந்தது. இதை தொடர்ந்து அவரை காவல்துறை பணியிடை நீக்கம் செய்து இருந்தது. அதன்பின்னர் இந்த சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்தப்பட்டது. அப்போது விசாரணையில் பெட்டர்சென், “நான் செய்தது தவறு தான். நான் காவல்துறை வாகனத்தில் அப்படி செய்திருக்க கூடாது” என்று கூறி தன்னுடைய தவறை ஒப்புக் கொண்டுள்ளார்.
அதைத் தொடர்ந்து காவல்துறை சார்பில் இந்த விவகாரத்தில் இறுதி முடிவு எடுக்கப்பட்டது. அதன்படி, காவலர் பெட்டர்சென் காவல்துறை பணியிலிருந்து விலக வேண்டும் என்று கூறப்பட்டது. இதை ஏற்று கொண்ட அவர் தன்னுடைய காவலர் பதவியிலிருந்து ராஜினாமா செய்தார். இதைத் தொடர்ந்து இந்த வழக்கு தொடர்பாக மேலும் விசாரிக்கபட்டது. அதாவது அவர் அந்தப் பெண்ணை காவலர் என்பதால் பயம் காட்டி உடலுறவில் ஈடுபட்டாரா? என்ற கோணத்தில் விசாரிக்கப்பட்டது.
ஆனால் அந்த விசாரணையில் அந்தப் பெண்ணின் விருப்பத்துடன் இந்த செயல் நடந்தது கண்டறியப்பட்டது. இதன்காரணமாக அவர் மீது குற்ற வழக்கு எதுவும் பதியப்படவில்லை. எனினும் காவல்துறை அதிகாரிகளின் நடத்தை விதிகளிலிருந்து இவர் மீறியதனால் இவரை அப்பணியிலிருந்து நீக்கும் உத்தரவை பிறப்பித்திருந்தனர். காவலர் ஒருவர் காவல்துறை வாகனத்தில் பெண்ணுடன் உடலுறவில் ஈடுபட்டது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மேலும் இன்றைய முக்கியச் செய்திகள்...
ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்
மேலும் படிக்க: கொதிகொதிக்கும் இந்த கிரகத்தில் ஒரு வருடம் என்பது வெறும் 16 மணிநேரம்தான்! இதை கண்டிப்பா படிங்க..