தியேட்டர்களில்  பட்டாசுகளை வெடிக்க வேண்டாம் என தனது ரசிகர்களுக்கு வேண்டுகோள் விடுத்த நடிகர் சல்மான் கான், அதிர்ச்சி வீடியோ ஒன்றையும் தனது இன்ஸ்டாவில் பகிர்ந்துள்ளார்.


சல்மான் கான் நடிப்பில் உருவாகியுள்ள  'ஆண்டிம்: தி ஃபைனல் ட்ரூத் '  கடந்த 26ஆம் தேதி தியேட்டர்களில் ரிலீசானது. ஆனால் படம் வெளியானதும், சல்மான் கானின் ரசிகர்கள் சிலர் மும்பையில் உள்ள ஒரு தியேட்டருக்குள் பட்டாசுகளை வெடித்து அட்டகாசம் செய்தனர். திரையில் சல்மான் கான் தோன்றும்போது, மேலே சென்று வெடிக்கும் பட்டாசுகளை கொளுத்தி வெடித்தனர். இந்த பட்டாசால் வெளியான தீப்பொறி அருகில் இருந்தவர்கள் மீது எல்லாம் விழுந்தது. இந்த காட்சிகளை எல்லாம் அங்கியிருந்த ஒருவர் தனது செல்போனில் வீடியோவாக எடுத்துள்ளார்.


தற்போது, இந்த அதிர்ச்சியூட்டும் வீடியோவைப் தனது இன்ஸ்டாம்கிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ள சல்மான்கான், இது ஆபத்தானது என்பதால் பட்டாசுகளை வெடிக்க வேண்டாம் என்று தனது ரசிகர்கள் அனைவரையும் கேட்டுக் கொண்டார். 


இதுதொடர்பாக அவர் எழுதிய பதிவில்,  ‘தியேட்டருக்குள்  பட்டாசுகளை எடுத்துச் செல்ல வேண்டாம் என்று எனது ரசிகர்கள் அனைவரையும் கேட்டுக்கொள்கிறேன். ஏனெனில் இது ஒரு பெரிய தீ விபத்தை ஏற்படுத்தும். இதனால் உங்கள் உயிருக்கும் மற்றவர்களுக்கும் ஆபத்து ஏற்படும். திரையரங்க உரிமையாளர்களுக்கு எனது வேண்டுகோள். தியேட்டருக்குள் பட்டாசுகளை எடுத்துச் செல்ல அனுமதிக்கக் கூடாது. நுழைவு வாயிலில் பட்டாசு வெடிப்பதை பாதுகாப்புப் படையினர் தடுத்து நிறுத்த வேண்டும். படத்தை எல்லா வகையிலும் ரசியுங்கள். ஆனால் தயவுசெய்து இதைத் தவிர்க்கவும். எனது ரசிகர்கள் அனைவருக்கும் எனது வேண்டுகோள்.. நன்றி” எனப் பதிவிட்டுள்ளார்.


 






இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவி, தியேட்டர் அதிகாரிகளிடம் இருந்து எந்த இடையூறும் ஏற்படாததைக் கண்டு பலரும் அதிர்ச்சியடைந்தனர்.


சல்மான் கான் படம் வருடத்திற்கு ஒரு முறை வரும். கொரோனா தொற்றுக்கு பிறகு, பெரிய திரையில் வெளியான முதல் படம் இதுவாகும்.  சல்மான் கான்  ரசிகர்கள் தியேட்டர்களில் பட்டாசு வெடித்து கொண்டாடுவது இது இரண்டாவது முறையாகும். கடந்த 2017ஆம் ஆண்டு, சல்மானின் டியூப்லைட் படம் வெளியாகும்போது, ​​ரசிகர்கள் வெறித்தனமாகி பட்டாசுகளை வெடித்தனர். அது தொடர்பான வீடியோ ஒன்று வைரலாக பரவியது குறிப்பிடத்தக்கது.


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


 


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


 


பேஸ்புக் பக்கத்தில் தொடர


 


ட்விட்டர் பக்கத்தில் தொடர


 


யூடிபில் வீடியோக்களை காண