சவுதி அரேபிய அரச குடும்பத்து உறுப்பினரும் பெண்கள் உரிமைகளுக்காக போராடியவருமான 57 வயதான Basmah bin Saud என்பவர் கடந்த 2019ஆம் ஆண்டு மார்ச் மாதம் திடீரென்று கைது செய்யப்பட்டார். உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவ உதவியை நாடிய அவருக்கு சவுதி நிர்வாகம் மருத்துவ உதவிகளையும் மறுத்து வந்துள்ளது. இதுவரையில் அவர் மீது எந்த குற்றச்சாட்டுகளையும் சவுதி நிர்வாகம் முன்வைக்கவில்லை என்று கூறப்படுகிறது.
2019 மார்ச் மாதம் மருத்துவ சிகிச்சைக்காக ஸ்விட்சர்லாந்து செல்ல திட்டமிட்டு, விமான நிலையம் செல்லும் நிலையில் இளவரசி பாஸ்மா சவுத் கைது செய்யப்பட்டார். அவருக்கு என்ன நோய் என்பது தொடர்பான தகவல் ஏதும் குடும்பத்தினரால் இதுவரை வெளியிடப்படவில்லை.
சவுதி அரேபியாவின் பட்டத்து இளவரசராக இளவரசர் முகமது சல்மான் பொறுப்பேற்ற பின்னர் குறிப்பிடத்தக்க மாற்றங்களை நாட்டில் அவர் அமலுக்கு கொண்டு வந்துள்ளார். இருப்பினும், அரசியல் எதிரிகள், சமூக செயற்பாட்டாளர்கள் என குறிப்பிடத்தக்க எண்ணிக்கையிலான நபர்கள் கைது செய்யப்பட்டு சிறையிலும் உள்ளனர்.
இந்நிலையில் சிறையில் இருந்த பாஸ்மாவின் உடல் நலனைக் கருத்தில் கொண்டு அவர் விடுவிக்கப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது. அவருடன் சிறையிருந்த அவரது மகளும் விடுவிக்கப்பட்டுள்ளார்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்
மேலும் வாசிக்க: ”கொரோனா பரவக்கூடாதுல்ல” : மகனை இந்த நிலைமையில் வைத்த தாய்... பாய்ந்த காவல்துறை நடவடிக்கை