TN Corona Lockdown LIVE: தமிழ்நாட்டில் அமலுக்கு வந்தது முழு ஊரடங்கு : வெறிச்சோடிய சாலைகள்..! உடனுக்குடன் தகவல்கள் உள்ளே..!

தமிழ்நாட்டில் இன்று(ஞாயிற்றுக்கிழமை) மட்டும் அமலில் உள்ள முழு ஊரடங்கின் போது நிகழும் முக்கிய நிகழ்வுகளை கீழே காணலாம்.

ABP NADU Last Updated: 09 Jan 2022 06:45 AM

Background

தமிழ்நாட்டில் கொரோனா மற்றும் ஒமிக்ரான் வைரஸ் பரவலை கட்டுப்படுத்தும் நோக்கத்தில் ஊரடங்கு மீண்டும் அமல்படுத்தப்பட்டுள்ளது. இதன்படி, ஞாயிற்றுக்கிழமையான இன்று மாநிலம் முழுவதும் முழு ஊரடங்கு அமலுக்கு வந்துள்ளது. இன்றைய தினத்தில் பொதுப்போக்குவரத்து சேவை, மெட்ரோ சேவைகள், அத்தியாவசிய கடைகள் ஆகிய இயங்க...More

ஊரடங்கிலும் அடங்காமல் சுற்றித்திரியும் இரு சக்கர வாகன ஓட்டிகள்...!

தமிழ்நாடு முழுவதும் இன்று முழு ஊரடங்கு அமலில் இருப்பதால் பிரதான சாலைகளில் மக்கள் நடமாட்டமின்றி காணப்படுகிறது. ஆனாலும், சென்னை உள்பட முக்கிய நகரங்கள், கிராமப்புறங்களில் இரு சக்கர வாகன ஓட்டிகள் வழக்கம்போல அங்குமிங்கும் சுற்றித்திரிந்து வருகின்றனர். தலைநகர் சென்னையிலும் உள்புற பகுதிகளில் குறுகலான சந்துகளில் இரு சக்கர வாகனங்களின் நடமாட்டத்தை தொடர்ந்து காண முடிந்தது.