பொருளாதாரத்திற்கான நோபல் பரிசு இன்று (அக்டோபர் 9)  அறிவிக்கப்பட்டுள்ளது. அந்தவகையில் அமெரிக்காவைச் சேர்ந்த பொருளாதார வரலாற்றாசிரியர் மற்றும் பொருளாதார ரீதியாக தொழிலாளர்களை முன்னேற்றுபவருமான  கிளாடியா கோல்டின்-க்கு பொருளாதாரத்திற்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது.


பொருளாதாரத்திற்கான நோபல் பரிசு:


இச்சூழலில் 2023-24 ஆம் ஆண்டிற்கான நோபல் பரிசு கடந்த அக்டோபர் 2 ஆம் தேதி முதல் அறிவிக்கப்பட்டு வருகிறது. அதன்படி, ஏற்கனவே மருத்துவம், இலக்கியம், வேதியியல், இயற்பியல், அமைதி என் ஐந்து துறைக்களுக்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், இன்று (அக்டோபர் 9) பொருளாதாரத்திற்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது.


அதன்படி, இந்த பரிசை அமெரிக்காவைச் சேர்ந்த பொருளாதார வரலாற்றாசிரியர் மற்றும் பொருளாதார ரீதியாக தொழிலாளர்களை முன்னேற்றுவருமான  கிளாடியா கோல்டின் பெறுகிறார்.


யார் இந்த கிளாடியா கோல்டின்?


அமெரிக்காவின் நியூயார்க் நகரில், 1946 ஆம் ஆண்டு மே 14 ஆம் தேதி பிறந்தவர். கிளாடியா கோல்டின். பெண்களுக்கான தொழில்கள் தொடர்பாக ஆய்வுகள் நடத்தி வருபவர். பெண்களுக்கான தொழில் வாய்ப்புகளை தொடந்து பொது வெளிகளில் வெளிப்படுத்தி வருபவர். 


மேலும், மனித வளத்தில் பெண்களுக்கான வாய்ப்புகள் எல்லாம் எவ்வாறு சமூகத்தில் பாதிக்கப்படுகிறது என்பதற்கான அடிப்படை புரிதல்களை வெளியிட்டத்தில் முக்கிய பங்காற்றியவர். 


தொழிலாளர்களின் சந்தையில் பெண்களுக்கான தேவைகள் எந்த அளவில் இருக்கிறது என்று ஆய்வு செய்து அதனையும் தரவுகளாக வெளியிட்டிருக்கிறார் கிளாடியா கோல்டின்.


நோபல் பரிசு என்றால் என்ன?


நோபல் பரிசை உருவாக்கிய ஆல்பர்ட் நோபல் ஒரு வேதியியலாளர், பொறியாளர், ஆயுதத் தயாரிப்பாளர். போபர்ஸ் ஆயுத உற்பத்தி நிறுவனத்தின் உரிமையாளர். அவரது 355 கண்டுபிடிப்புகளில் பெரும்பாலானவை ராணுவம் பயன்படுத்தும் ஆயுதங்கள்,வெடிபொருள்கள் தொடர்பானவை.


ஒரு நாள் ஒரு பிரெஞ்ச் செய்தித்தாளில் நோபல் இறந்ததாக வந்த செய்தியை நோபல் பார்த்து அதிர்ந்தார். “மரண வியாபாரி இறப்பு” என்று அதற்குத் தலைப்பு தரப்பட்டு இருந்தது. உண்மையில் அவரது சகோதரர்தான் இறந்திருந்தார்.


அவரது சகோதரரை ஆல்பர்ட் நோபல் என அந்தப் பத்திரிகை தவறாக நினைத்துவிட்டது. ஆனால் அந்த தலைப்பு நோபலை தீவிரமாகச் சிந்திக்க வைத்தது. மரணத்துக்குப் பின்பு தான் மதிக்கப்பட வேண்டும் என அவர் நோபல் பரிசை உருவாக்கினார்.


 மனித இனத்தின் முன்னேற்றத்துக்குப் பங்களித்தவர்களுக்கு இயற்பியல், வேதியியல், அமைதி, மருத்துவம் மற்றும் இலக்கியம் ஆகிய ஐந்து துறைகளில் பரிசு வழங்கத் தனது சொத்தைப் பயன்படுத்த வேண்டும் என உயில் எழுதினார். 1895-ல் 63 வயதில் இறந்தார்.  


1901 முதல் இந்தப் பரிசு வழங்கப்படுகிறது.1905-ம் ஆண்டு சுவீடனில் இருந்து நார்வே பிரிந்தது. அதனால், அமைதிக்கான பரிசை மட்டும் நார்வே வழங்க ஏற்பாடானது. 


சுவீடன் மத்திய வங்கி: 


அதன்படி, 1968 ஆம் ஆண்டில் சுவீடன் மத்திய வங்கி ஒரு பெரும் தொகையை நோபல் அறக்கட்டளைக்கு அளித்து, நோபலின் பெயரில் பொருளாதார அறிவியலுக்கான பரிசை ஏற்படுத்தியது. 


சொத்து மதிப்பு:


நோபல் அறக்கட்டளையின் இப்போதைய சொத்து மதிப்பு சுமார் 3,500 கோடி ரூபாய்க்கும் மேல் என்று கணிக்கப்பட்டுள்ளது.


நோபல் பரிசு பெற்ற தமிழர்கள்: 


நோபல் பரிசை தமிழகத்தைச் சேர்ந்த  சர்.சி.வி.ராமன் (1930), சுப்பிரமணியன் சந்திரசேகர் (1983), வெங்கட்ராமன் ராமகிருஷ்ணன் (2009) ஆகிய மூன்றுபேர் பெற்றுள்ளனர்.


அதேபோல் இந்தியாவில் தொழுநோய் பாதிப்பில் பாதிக்கப்பட்ட மக்களுக்காக தன் வாழ்நாளையே அர்பணித்து சேவை செய்த, ‘அன்னை தெரசா’வும் நோபல் பரிசு பெற்றிருக்கிறார் என்பது கவனிக்கத்தக்கது.


மேலும் படிக்க: Israel War: குலைநடுங்க வைக்கும் இஸ்ரேல் ஹமாஸ் போர்.. உயிரிழந்தோரின் எண்ணிக்கை 1100 ஆக அதிகரிப்பு..


 


மேலும் படிக்க: Israel-Palestine Conflict: இஸ்ரேல் - ஹமாஸ் போர் எதிரொலி: கச்சா எண்ணெய் விலை 5% ஏற்றம்