இஸ்ரேல் - ஹமாஸ் இடையே கடந்த 3 நாளாக நடைபெற்று வருகிறது. இஸ்ரேல் மீது ஹ்மாஸ் நடத்திய தாக்குதலில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 1100 ஐ கடந்துள்ளது. போர் நீடிப்பதால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை அதிகரிக்கும் என அஞ்சப்படுகிறது.
இஸ்ரேல், பாலஸ்தீனத்திற்கு இடையே நீண்ட காலமாக மோதல் போக்கு நிலவி வருகிறது. 1948ஆம் ஆண்டு தனி நாடாக இஸ்ரேல் உருவானதில் இருந்தே இந்த பிரச்சினை நீடித்து வருகிறது. இஸ்ரேல், பாலஸ்தீன விவகாரமே மூன்றாம் உலக போருக்கு வழிவகுக்கும் என்றெல்லாம் சொல்வது உண்டு. கிழக்கு ஜெருசலேம், காசா, வெஸ்ட் பேங்க் ஆகிய பகுதிகளில் வாழும் இஸ்ரேலியர்களுக்கும் பாலஸ்தீனியர்களுக்கும் இடையேதான் அடிக்கடி பிரச்னை ஏற்பட்டு வருகிறது. இஸ்ரேலுடன் பலமுறை போரிட்ட பாலஸ்தீன போராளிக் குழுவான ஹமாஸ் காஸாவை ஆட்சி செய்து வருகிறது. இந்த ஹமாஸ் குழுவினருக்கும் இஸ்ரேலுக்கும் தான் நேற்று முன்தினம் போர் தொடங்கியது.
இதுவரை இல்லாத அளவுக்கு தெற்கு இஸ்ரேல் மீது 5,000 ராக்கெட்டுகளை கொண்டு தாக்குதல் நடத்தியிருப்பதாக ஹமாஸ் குழு தகவல் வெளியிட்டுள்ளது. மேலும், கண்ணில் பட்ட பொதுமக்களை எல்லாம் சுட்டுக் கொலை செய்வது பதைபதைக்க வைத்து வருகிறது. இதற்கு பதிலடி தாக்குதலையும் இஸ்ரேல் தொடங்கி உள்ளது. தெற்கு இஸ்ரேல் மீது அண்மையில் ஹமாஸ் நடத்திய தாக்குதலில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை தற்போது 1,100ஐ தாண்டியுள்ளது, மூன்றாவது நாளாக இந்த தாக்குதல் போர் நடந்து வருகிறது.
இஸ்ரேலில் 18,000க்கும் மேற்பட்ட இந்தியர்கள் சிக்கியுள்ளனர். இஸ்ரேலில் சுமார் 85,000 இந்திய வம்சாவளி யூதர்கள் உள்ளனர். இவர்களில், 27 பேர் பத்திரமாக மீட்கப்பட்டதாக மேகாலயா முதல்வர் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் பதிவிட்டுள்ள ட்விட்டர் (எக்ஸ்) பக்கத்தில், "மேகாலயா மாநிலத்தைச் சேர்ந்த 27 பேரும் பத்திரமாக மீட்கப்பட்டதாகவும், எகிப்து அருகே வந்து விட்டதாக" முதல்வர் கான்ராட் சங்கா தெரிவித்துள்ளார். மேலும், வெளியுறுவுத்துறை அமைச்சகத்தின் நடவடிக்கையால் மீட்கப்பட்டு இருப்பதாகவும் விரைவில் நாடு திரும்புவார்கள் என்றும் தெரிவித்துள்ளார்.
இஸ்ரேல் - ஹமாஸ் படை இடையேயான போர் சர்வதேச அளவில் பல்வேறு அதிர்வலைகளை ஏற்படுத்தி வருகிறது. இந்நிலையில் இந்த போர் எதிரொலியாக சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் 5% உயர்ந்துள்ளது. அக்டோபர் 6ஆம் தேதி 84.58 டாலராக இருந்த பிரெண்ட் கச்சா எண்ணெய் இன்று 89 டாலாராக உயர்ந்துள்ளது. ப்ளூம்பெர்க் செய்தியின்படி, மேற்கு ஆசியா பகுதியான இஸ்ரேல் - பாலஸ்தீனில் போர் வெடித்ததால், கச்சா எண்ணெய் விலை 5 சதவீதம் வரை அதிகரித்துள்ளது. இதன் காரணமாக மேற்கு டெக்சாஸில் ஒரு பீப்பாய்க்கு $ 87 ஐ எட்டியுள்ளது.
ப்ளூம்பெர்க் செய்தியின்படி, மேற்கு ஆசியா பகுதியான இஸ்ரேல் - பாலஸ்தீனில் போர் வெடித்ததால், கச்சா எண்ணெய் விலை 5 சதவீதம் வரை அதிகரித்துள்ளது. இதன் காரணமாக மேற்கு டெக்சாஸில் ஒரு பீப்பாய்க்கு $ 87 ஐ எட்டியுள்ளது. ராய்ட்டர்ஸின் செய்தியின்படி, ப்ரெண்ட் கச்சா எண்ணெய்யில் $ 4.18 அல்லது 4.99 சதவீதம் அதிகரித்து ஒரு பீப்பாய்க்கு $ 88.76 என்று எட்டியுள்ளது. அதேசமயம் WTI 5.11 சதவீதம் அதிகரித்து ஒரு பீப்பாய்க்கு $87.02 ஆக உள்ளது.
Israel-Palestine Conflict: இஸ்ரேல் - ஹமாஸ் போர் எதிரொலி: கச்சா எண்ணெய் விலை 5% ஏற்றம்