மேலும் அறிய

Gustavo Arnal: தொழிலில் நஷ்டம்.. பணிநீக்கம் செய்யப்பட்ட பணியாளர்கள்.. பிரபல நிறுவனத்தின் நிதி அதிகாரி தற்கொலை..

அமெரிக்காவின் நியூயார்க் நகரில் உள்ள ஜெங்கா டவரில் (New York's Tribeca skyscraper known as the "Jenga" tower) இருந்து குதித்து ஒருவர் தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து தகவல் அறிந்த நியூயார்க் நகர காவல் துறையினர் அங்கு சென்று அவரின் உடலை மீட்டனர். நீயூயார்க் நகர காவல் துறையின் தகவலின்படி, உயிரிழந்தவர் பிரபல நிறுவனத்தின் தொழிலதிபர் குஸ்டாவோ அர்னல் (Gustavo Arnal) என்று தெரிய வந்துள்ளது. 
 
இரண்டு நாட்களுக்கு முன்பு, பெட் அண்ட் பியாண்ட் (Bed Bath & Beyond) என்ற நிறுவனத்தின் தலைமை நிதி அதிகாரி (Chief Financial Officer)
Manhattan பகுதியில் உள்ள கெங்கா டவரின் 18-வது மாடியில் இருந்து குதித்து உயிரிழந்தார். 
பெட் அண்ட் பியாண்ட்  நிறுவனம் கடும் பொருளாதார நெருக்கடியில் சிக்கி தவித்ததாகவும், விற்பனை கடுமையாக பாதிக்கப்பட்டதால் அந்நிறுவனத்தின் 150 கிளைகளை மூட முடிவெடுக்கப்பட்டுள்ளது. 20 சதவீத பணியாளர்களை வேலையில் இருந்து நீக்குவதற்கும் முடிவு செய்துள்ளாதாக அறிவித்தது அந்நிறுவனம். இந்த அறிவிப்பு வெளிவந்து இரண்டு நாட்களுக்கு பிறகு, குஸ்டாவோ அர்னல் உயிரிழந்திருப்பது குறிப்பிடத்தக்கது. கடந்த ஜூன் மாதத்தில் மட்டும், நிறுவனத்தின் விற்பனை 25 சதவீதம் வீழ்ச்சியடைந்தது. அதற்கடுத்த மாதங்களிலும் விற்பனை அதிகரிக்கவில்லை. கடந்த வாரத்தில் இந்நிறுவனத்தின் பங்குகள் விற்பனை செய்யப்பட்டன. சுமார் 42,000 க்கும் மேற்பட்ட பங்குகள் விற்பனை செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. பங்குகள் விற்பனைக்கு முன்பு, இந்நிறுவனத்தில் 267,896 பங்குகள் குஸ்டாவோ அர்னலிடம் இருந்தது குறிப்பிடத்தக்கது. இதன் மதிப்பு 5.6 மில்லியன் டாலர்கள் ஆகும். 
 
கடந்த 2020 ஆம் ஆண்டு, கொரோனா தொற்றால் பொருளாதாரம் கடுமையாக சீர்குலைந்த நிலையில், குஸ்டாவோ அர்னல் பெட் அண்ட் பியாண்ட் நிறுவனத்தின் தலைமை நிதி அதிகாரியாக நியமிக்கப்பட்டார். இதற்கு முன்பு, குஸ்டாவோ அர்னல் லண்டனைச் சேர்ந்த காஸ்மெடிக்ஸ் நிறுவனத்தின் தலைமை நிதி அதிகாரியாக இருந்தார்.
 
குஸ்டாவோ அர்னல் மரணம் குறித்து நியூயார்க் காவல் துறையினர் எந்த தகவலும் அளிக்கவில்லை. இதுவரை மரணத்திற்கான காரணம் குறித்து எந்த தகவலும் கூறப்படவில்லை. இதுகுறித்து விசாரணை நடைபெற்று வருகிறது.

Freelancer Jhansi Rani. MA
Read
மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

பொழப்ப பாப்போம்.. சென்னைக்கு ரிட்டர்ன் ஆகும் வெளியூர்வாசிகள்! திணறும் சாலைகள்!

தமிழகத்தில் வானிலை மாற்றம் !! அடுத்த 48 மணி நேரத்தில் என்ன நடக்கும் ? வானிலை மையம் எச்சரிக்கை

33 ஆண்டுகள் நிலுவை.. இந்திய அரசியலையே உலுக்கும் ஒற்றை மசோதா - அப்படி என்ன இருக்கு?

ஆழத்தில் மறைந்திருக்கும் அதிசயம்! எவரெஸ்ட் சிகரமே மூழ்கும்! மரியானா அகழியின் சுவாரஸ்யம்

ABP Premium

வீடியோ

AR Rahman controversy | எதிர்த்து நிற்கும் பாலிவுட்!
Rahul gandhi meeting | ”எல்லாரும் டெல்லி வாங்க”ராகுலுடன் முக்கிய மீட்டிங்!படையெடுத்த தமிழக காங்கிரஸ்
Alanganallur Jallikattu TVK flag | ஜல்லிக்கட்டில் தவெக கொடி! ”பரிசு கிடையாது வெளிய போ” கண்டித்த கமிட்டி
Soori vs Vijay | ”தவெகவை மீறி படம் ஓடுமா” வம்பிழுத்த நெட்டிசன்! சூரி தரமான பதிலடி!

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
பொழப்ப பாப்போம்.. சென்னைக்கு ரிட்டர்ன் ஆகும் வெளியூர்வாசிகள்! திணறும் சாலைகள்!
பொழப்ப பாப்போம்.. சென்னைக்கு ரிட்டர்ன் ஆகும் வெளியூர்வாசிகள்! திணறும் சாலைகள்!
தமிழகத்தில் வானிலை மாற்றம் !! அடுத்த 48 மணி நேரத்தில் என்ன நடக்கும் ? வானிலை மையம் எச்சரிக்கை
தமிழகத்தில் வானிலை மாற்றம் !! அடுத்த 48 மணி நேரத்தில் என்ன நடக்கும் ? வானிலை மையம் எச்சரிக்கை
33 ஆண்டுகள் நிலுவை.. இந்திய அரசியலையே உலுக்கும் ஒற்றை மசோதா - அப்படி என்ன இருக்கு?
33 ஆண்டுகள் நிலுவை.. இந்திய அரசியலையே உலுக்கும் ஒற்றை மசோதா - அப்படி என்ன இருக்கு?
ஆழத்தில் மறைந்திருக்கும் அதிசயம்! எவரெஸ்ட் சிகரமே மூழ்கும்! மரியானா அகழியின் சுவாரஸ்யம்
ஆழத்தில் மறைந்திருக்கும் அதிசயம்! எவரெஸ்ட் சிகரமே மூழ்கும்! மரியானா அகழியின் சுவாரஸ்யம்
Study Tips: தேர்வு பயம் இனி வேண்டாம்! 140 ஆண்டு ஜெர்மன் உத்தி: மறதியை விரட்டும் சூப்பர் டிப்ஸ்! மாணவர்கள் கவனத்திற்கு!

Sastra University: சாஸ்த்ரா பல்கலை. விவகாரம்: ஏழைகளுக்கு ஒரு நீதி, கல்வி வியாபாரிகளுக்கு வேறு நீதியா? மார்க்சிஸ்ட் கேள்வி!

சிங்கிள் சார்ஜில் 146 கி.மீட்டர் மைலேஜ்.. OLA S1 Z இ ஸ்கூட்டரின் விலை, தரம் இதுதான்!

மதுரை டூ சென்னை 4 ஆயிரம்.. தனியார் பேருந்துகள் நடத்தும் கட்டண கொள்ளை - தடுக்கப்போவது யார்?

Embed widget