மேலும் அறிய

Veedur Dam: வீடூர் அணையில் தண்ணீர் திறப்பு ! கரையோர மக்களுக்கு எச்சரிக்கை!

வீடூர் அணை நிரம்பி வருவதால் அணையின் பாதுகாப்பு கருதி மதகு வழியாக 500 கன அடி நீர் திறக்கப்பட்டுள்ளது.

விழுப்புரம்: வீடூர் அணை நிரம்பி வருவதால் 32 அடி உயர வீடூர் அணை நீர்மட்டம் 31அடியை எட்டியதால் அணையின் பாதுகாப்பு கருதி மதகு வழியாக 500கன அடி நீர் திறக்கப்பட்டுள்ளது. 

வீடூர் அணை

வீடூர் அணை என்பது விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி அருகே உள்ளது . 89 இலட்சம் ரூபாய் செலவில் கட்டப்பட்ட இந்த அணை 1959 ஆம் ஆண்டு அப்போதைய தமிழக முதல்வர் திரு காமராசர் அவர்களால் திறந்துவைக்கப்பட்டது. அணையின் மொத்த நீளம் அகலம் முறையாக 15,800 அடி மற்றும் 37 அடி ஆகும். அணையின் மொத்தக் கொள்ளளவு 32 அடியாகும். 3200 ஏக்கர் நிலம் பாசன வசதி பெரும் வகையில் அமைந்துள்ள இந்த அணையின் பிரதான கால்வாய் 176 கி. மீ நீளம் கொண்டதாகும். இந்த அணை தமிழக அரசின் பொதுபணித்துறை கட்டுப்பாட்டின் கீழ் உள்ளது.

மக்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்

32 அடி உயரம் கொண்ட வீடூர் அணை கனமழை காரணமாக 31 அடி நிரம்பி உள்ளது. அணையின் பாதுகாப்பு கருதி ஐந்தாம் கண் மதகு வழியாக மணிக்கு 500 கன அடி தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. அவ்வாறு திறந்துவிடப்படும் நீர் சங்கராபரணி ஆற்றில் புதுச்சேரி மாநில எல்லையான மணலிப்பட்டை வந்தடைந்து செட்டிப்பட்டு, சுத்துக்கேணி, கைக்கிளைப் பட்டு வழியாக ஊசுட்டேரியின் ஒரு பகுதிக்குச் செல்லும். மறுபகுதி குமராபாளையம், வம்புப்பட்டு, செல்லிப்பட்டு வழியாக வில்லியனூர் சென்று கடலில் கலக்கும். இதனால் சங்கராபரணி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்படும். ஆகவே, சங்கராபரணி ஆற்றின் கரையோர கிராமங்களில் வசிக்கும் மக்கள் பாதுகாப்பாகவும், எச்சரிக்கையாகவும் இருக்க வேண்டிய நிலை உள்ளது.

வீடூர் அணையில் இருந்து தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளதால் ஆற்றுப் பகுதிகளுக்கு யாரும் செல்ல வேண்டாம், எச்சரிக்கையாக இருக்க வேண்டும். ஆடு, மாடு உள்ளிட்ட கால்நடைகளை மேய்க்க, குளிப்பாட்ட ஓட்டிச் செல்லக்கூடாது என மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது.

தென்மேற்கு வங்கக்கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி

தென்மேற்கு வங்கக்கடலில் உருவான குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி, ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதியாக இன்று வலுப்பெற்றது.

அடுத்த 24 மணி நேரத்தில் வட தமிழ்நாடு, தெற்கு ஆந்திரா கடலோரப் பகுதிகளை நோக்கி நகர்ந்து காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவடையக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது. இந்நிலையில், ஏற்கனவே பல மாவட்டங்களில் பெய்து வரும் மழை மேலும் வலுப்பெற வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனை தொடர்ந்து, சென்னை வானிலை ஆய்வு மையம் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியின் பல்வேறு பகுதிகளுக்கு ரெட் மற்றும் ஆரஞ்சு அலர்ட் விடுத்துள்ளது. ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ள மாவட்டங்களில் அதிகனமழைக்கு வாய்ப்பிருக்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தலைப்பு செய்திகள்

ரேஷன் கார்டு இல்லையா? கவலை வேண்டாம்... புதுச்சேரியில் களமிறங்கிய 'எக்ஸ்ட்ரா லைட்' கேஸ் சிலிண்டர்!
ரேஷன் கார்டு இல்லையா? கவலை வேண்டாம்... புதுச்சேரியில் களமிறங்கிய 'எக்ஸ்ட்ரா லைட்' கேஸ் சிலிண்டர்!
Puducherry Power Cut: புதுச்சேரியில் நாளை (05-08-2026) மின்தடை அறிவிப்பு: எந்தெந்த பகுதிகள் பாதிக்கப்படும்?
Puducherry Power Cut: புதுச்சேரியில் நாளை (05-08-2026) மின்தடை அறிவிப்பு: எந்தெந்த பகுதிகள் பாதிக்கப்படும்?
1,200 வருஷத்து பழமை! திண்டிவனம் ஏரியில் கிடைத்த பல்லவர் காலத்து சிலை... ஆய்வில் வெளிவந்த ஆச்சரியத் தகவல்கள்!
1,200 வருஷத்து பழமை! திண்டிவனம் ஏரியில் கிடைத்த பல்லவர் காலத்து சிலை... ஆய்வில் வெளிவந்த ஆச்சரியத் தகவல்கள்!
பயிர் இழப்பைத் தடுக்க சூப்பர் வழிமுறைகள்! விழுப்புரத்தில் அட்மா திட்ட விவசாயிகள் - விஞ்ஞானிகள் சந்திப்பு!
பயிர் இழப்பைத் தடுக்க சூப்பர் வழிமுறைகள்! விழுப்புரத்தில் அட்மா திட்ட விவசாயிகள் - விஞ்ஞானிகள் சந்திப்பு!

வீடியோ

தமிழ்நாட்டுக்குத் தலைகுனிவு? அசிங்கப்படுத்திய DK சிவகுமார் வாயைதிறங்க விஜய்
Cauvery Issue :
Kayalvizhi Alagiri Arrest : மு.க அழகிரி மகள் கைது! சென்னை போலீஸ் அதிரடி.. வெளியான அதிர்ச்சி வீடியோ
இர்பானுக்கு புது சிக்கல் சுகாதாரத்துறை நடவடிக்கை! விரைவில் கைதாகிறாரா?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Tamil Nadu Budget 2026 LIVE: மிடில் கிளாஸ் பேமிலிக்கு குட் நியூஸ்; கான்கிரீட் வீடு திட்டத்திற்கு மானியம் ரூ.5 லட்சமாக உயர்வு - அமைச்சர் மரிய வில்சன்
மிடில் கிளாஸ் பேமிலிக்கு குட் நியூஸ்; கான்கிரீட் வீடு திட்டத்திற்கு மானியம் ரூ.5 லட்சமாக உயர்வு - அமைச்சர் மரிய வில்சன்
TN Budget 2026 Highlights: தமிழக பட்ஜெட்: முதல்வர் விஜய் அறிவித்த டாப் 10 திட்டங்கள்! தங்கம் முதல் லேப்டாப் வரை!
TN Budget 2026 Highlights: தமிழக பட்ஜெட்: முதல்வர் விஜய் அறிவித்த டாப் 10 திட்டங்கள்! தங்கம் முதல் லேப்டாப் வரை!
TN Budget 2026: நிதியை அள்ளிக் கொடுத்த CM விஜய்..! ஒவ்வொரு துறைக்கும் எத்தனை கோடிகள் - தமிழக பட்ஜெட் விவரங்கள்
நிதியை அள்ளிக் கொடுத்த CM விஜய்..! ஒவ்வொரு துறைக்கும் எத்தனை கோடிகள் - தமிழக பட்ஜெட் விவரங்கள்
TN Budget 2026: சமூக நீதியை காப்பாற்றினாரா CM விஜய்? பட்ஜெட்டில் ஒதுக்கிய நிதி என்ன? முக்கிய திட்டங்களின் லிஸ்ட்
சமூக நீதியை காப்பாற்றினாரா CM விஜய்? பட்ஜெட்டில் ஒதுக்கிய நிதி என்ன? முக்கிய திட்டங்களின் லிஸ்ட்
அடி தூள்.! 25,000 டூ 35,000 ரூபாயாக உயர்வு.. ஹஜ்க்கு செல்பவர்களுக்கு ஜாக்பாட்- பட்ஜெட்டில் அசத்தல்
அடி தூள்.! 25,000 டூ 35,000 ரூபாயாக உயர்வு.. ஹஜ்க்கு செல்பவர்களுக்கு ஜாக்பாட்- பட்ஜெட்டில் அசத்தல்
TN Budget 2026: மின் கட்டணமே கட்ட தேவையில்லை.! புதிய திட்டம் தொடங்க ரூ.1 லட்சம் மானியம்- பட்ஜெட்டில் அசத்தல் அறிவிப்பு
மின் கட்டணமே கட்ட தேவையில்லை.! புதிய திட்டம் தொடங்க ரூ.1 லட்சம் மானியம்- பட்ஜெட்டில் அசத்தல் அறிவிப்பு
TN Budget 2026: மாணவர்களுக்கு ஜாக்பாட்: புதிய சைக்கிள் & லேப்டாப்- கோடிக்கணக்கில் நிதி ஒதுக்கீடு!
TN Budget 2026: மாணவர்களுக்கு ஜாக்பாட்: புதிய சைக்கிள் & லேப்டாப்- கோடிக்கணக்கில் நிதி ஒதுக்கீடு!
TN Budget 2026: ’’சூப்பர் சிஎம் ஆட்சியில் சூப்பர் சேஃப்டி’’ Super Clean- Super Campus திட்டம், காமராசர் சிறப்பு பள்ளிகள் அறிவிப்பு!
TN Budget 2026: ’’சூப்பர் சிஎம் ஆட்சியில் சூப்பர் சேஃப்டி’’ Super Clean- Super Campus திட்டம், காமராசர் சிறப்பு பள்ளிகள் அறிவிப்பு!
Embed widget