மேலும் அறிய

Tvk maanadu: தவெக முதல் மாநாடு... ஸ்கெட்ச் போடும் போலீஸ்

தமிழக வெற்றிக் கழக மாநாட்டிற்கு வடக்கு மண்டல ஐஜி தலைமையில் 5500 காவலர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளனர்.

விழுப்புரம்: தவெக மாநாடு அமைக்கும் பணி 90 சதவீதம் பணிகள் நிறைவு பெற்றது. இன்னும் 10 சதவீத பணிகளே உள்ளது. மாநாட்டிற்கு இன்னும் இரண்டு நாட்களே உள்ள நிலையில் காவல்துறை சார்பில் பாதுகாப்பு அளிப்பதற்கான திட்டங்கள் குறித்து ஆலோசனை நடத்தி வருகின்றனர்.

தமிழக வெற்றிக் கழகம்

நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை கடந்த பிப்.2-ம் தேதி தொடங்கினார். கட்சி தொடங்கியதில் இருந்து உறுப்பினர் சேர்க்கை, மாநில நிர்வாகிகள் நியமனம், கட்சி கொடி, பாடல் அறிமுகம் உள்ளிட்ட பல்வேறு பணிகளை மேற்கொண்டு வந்த அவர், பிரம்மாண்ட மாநாடு நடத்தவும் திட்டமிட்டிருந்தார். அதன்படி, விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டியில் சென்னை - திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் அமைந்துள்ள வி.சாலை என்ற கிராமத்தில் 85 ஏக்கர் நிலத்தை மாநாடு நடத்துவதற்கு அக்கட்சியினர் தேர்வு செய்தனர்.

இதையடுத்து, கடந்த ஆக.27-ம் தேதி விழுப்புரம் மாவட்ட காவல் துறையிடம் தமிழக வெற்றிக் கழகத்தின் சார்பில் அக்கட்சியின் பொதுச் செயலாளர் என்.ஆனந்த், மாநாடு நடத்துவதற்கு அனுமதி கோரி மனு அளித்தார். ஆனாலும், காவல்துறை அனுமதி வழங்குவதில் தொடர்ந்து இழுபறி ஏற்பட்டது. குறிப்பாக, மாநாடு தொடர்பாக 21 கேள்விகளுக்கு பதில் அளிக்குமாறு காவல் துறை கூறியது. அதற்கு கட்சி சார்பாக விளக்கம் அளிக்கப்பட்ட நிலையில், மாநாடு நடத்த காவல் துறை அனுமதி வழங்கியது.

இந்நிலையில், தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் அரசியல் மாநில மாநாடு அக்.27-ம் தேதி நடைபெறும் என அக்கட்சியின் தலைவர் நடிகர் விஜய் அதிகாரப்பூர்வமாக அறிவித்தார்.

வி.சாலையில் தமிழக வெற்றிக் கழக மாநாடு

தமிழக வெற்றிக்கழகத்தின் முதல் அரசியல் மாநாடு 27 ஆம் தேதி விக்கிரவாண்டி வி.சாலையில் அக்கட்சியின் தலைவர் விஜய் தலைமையில் 85 ஏக்கர் பரப்பளவில் நடைபெற உள்ளது. மாநாட்டிற்கான மேடை அமைக்கும் பணிகளில் 500க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். தற்போது வரை மாநாட்டின் பணி 90 சதவீதம் நிறைவடைந்துள்ளது.

நடிகர் விஜய் மாநாட்டை வெற்றிகரமாக நடத்தி முடிக்க வேண்டும் என ஒற்றை குறிக்கோளுடன் நகர்ந்து வருவதாக தெரிகிறது. கட்சியின் முதல் மாநாட்டை வெற்றிகரமாக நடத்துவதற்கு, பல்வேறு குழுக்களை அமைத்து விஜய் கண்காணித்து வருகிறார்.

500 சிசிடிவி கேமராக்கள்

தமிழகம் முழுவதும் கொடியேற்றும் நிகழ்வுகள், சுவர் விளம்பரம், போஸ்டர்கள் என தமிழக வெற்றிக் கழகத்தினர் விளம்பர பணிகளை செய்து வருகின்றனர். மேலும் மாநாட்டுக்கு ஆட்களை அழைத்துச் செல்வதற்காக வாகனங்களை முன்னதாகவே அட்வான்ஸ் கொடுத்து புக் செய்து வருகின்றனர். 

இந்த நிலையில் மாநாட்டிற்கு இலட்சக் கணக்கானோர் வருவார்கள் என்பதால் சுமார் 500க்கும் மேற்பட்ட சிசிடிவி கேமராக்களை அமைத்து மாநாட்டு நிகழ்வுகள் முழுவதையும் கண்காணிக்க ஏற்பாடு செய்யப்பட்டு இருக்கிறது. மேலும் மாநாட்டில் யாராவது தவறினால் அல்லது வேறு பகுதிக்கு சென்று விட்டால் அவர்களை கண்டுபிடித்து தரவும் காணாமல் போனவர்களை அணுகுவதற்கும் மிஸ்ஸிங் ஜோன் உதவி மையங்கள் Missing center மாநாட்டு திடல் பகுதிகளிலும், நான்கு பார்க்கிங் பகுதிகளிலும் அமைக்கப்படுகிறது.

150-க்கும் மேற்பட்ட மருத்துவமுகாம் 

மாநாட்டிற்கு வருபவர்கள் அனைவருக்கும் தேவையான கழிப்பிட வசதி, இருக்கைகளுக்கு அருகே தேவையான அளவுக்கு குடிநீர் வசதி ஏற்பாடு செய்யப்பட்டு இருக்கிறது. மாநாட்டு திடல் மற்றும் பார்க்கிங் பகுதியில் அவசர மருத்துவ உதவி மையங்கள் அமைக்கப்பட உள்ளது. 150-க்கும் மேற்பட்ட மருத்துவர்கள், மருத்துவ ஊழியர்கள், உதவியாளர்கள் பணியில் இருப்பார்கள். மேலும்  மருத்துவ குழுவினர், ஆம்புலன்ஸ் குழுவினர், கண்காணிப்பு குழுவினர், வரவேற்பு குழுவினர் என அனைவருக்கும் தனித் தனியாக ஒரே நிற சீருடை வழங்கப்பட இருக்கிறது.

வெற்றி கொள்கை திருவிழா

மாநாடு நுழைவாயிலில் கோட்டையின் மதில் சுவர் வடிவில் அமைக்கப்பட்டிருக்கிறது. அதில் இரண்டு யானைகள் இருபுறமும் பிளிரும் வகையில் நுழைவாயில் அமைக்கப்பட்டுள்ளது.

அதேபோல் மாநாடு மேடையில் "வெற்றி கொள்கை திருவிழா" என்கிற வாசகத்துடன் பேனர் வைக்கப்பட்டுள்ளது. மாநாடு மேடையின் அருகே காமராஜர், பெரியார், அம்பேத்கர், விஜய் ஆகியோரின் கட்அவுட் வைக்கப்பட்டுள்ளது. மாநாடு நடைபெறும் இடத்தில் தரை முழுவதுமாக பச்சை கலர் மேட் அமைக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. மொபைல் டாய்லெட் மற்றும் குடிநீர் டேங்க் அமைக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.

பாதுகாப்பு பணியில் 5500 காவலர்கள் 

வடக்கு மண்டல ஐஜி தலைமையில் 2 டிஐஜி, 10 காவல்துறை கண்காணிப்பாளர், 20 கூடுதல் காவல் துறை கண்காணிப்பாளர்கள், 50 டிஎஸ்பி, 200 ஆய்வாளர்கள், உதவி ஆய்வாளர் 400,  சுமார் 4800 தமிழக காவல்துறையினரும் , 200 ஆயுத படை காவலர்களும் , 300 சிறப்பு காவல் படை என மொத்தம் 5500 பேர் காவல்துறை பணியில் ஈடுபடுத்த திட்டமிடப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

கதி கலங்க வைக்கும் டானா புயல்.. களத்தில் இறங்கிய கடற்படை.. அத்தியாவசிய பொருள்கள் ரெடி!
கதி கலங்க வைக்கும் டானா புயல்.. களத்தில் இறங்கிய கடற்படை.. அத்தியாவசிய பொருள்கள் ரெடி!
Madurai HC: பணக்காரர்களுக்கு மட்டும் தான் கோயிலா? ஏழைகள் சாமி கும்பிட கூடாதா? - நீதிபதிகள் சரமாரி கேள்வி
Madurai HC: பணக்காரர்களுக்கு மட்டும் தான் கோயிலா? ஏழைகள் சாமி கும்பிட கூடாதா? - நீதிபதிகள் சரமாரி கேள்வி
எதிர்பார்ப்பை கிளப்பிய ABP Southern Rising Summit 2024.. தென்னிந்தியாவை கொண்டாடும் பிரபலங்கள்!
எதிர்பார்ப்பை கிளப்பிய ABP Southern Rising Summit 2024.. தென்னிந்தியாவை கொண்டாடும் பிரபலங்கள்!
Pink Auto: பெண்கள் ஆட்டோ வாங்க ரூ.1 லட்சம் மானியம்: அரசு அறிவிப்பு- விண்ணப்பிப்பது எப்படி?
Pink Auto: பெண்கள் ஆட்டோ வாங்க ரூ.1 லட்சம் மானியம்: அரசு அறிவிப்பு- விண்ணப்பிப்பது எப்படி?
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

TVK Maanadu : Vijay Maanadu | அம்பேதகர், பெரியார் நடுவில் விஜய்அண்ணா இடம்பெறாதது ஏன்? விஜய் மாஸ்டர் ப்ளான்Madurai People vs Ko Thalapathy | MLA-வை முற்றுகையிட்ட பெண்கள் திணறிய கோ.தளபதிRahul Gandhi speech On wayanad :

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
கதி கலங்க வைக்கும் டானா புயல்.. களத்தில் இறங்கிய கடற்படை.. அத்தியாவசிய பொருள்கள் ரெடி!
கதி கலங்க வைக்கும் டானா புயல்.. களத்தில் இறங்கிய கடற்படை.. அத்தியாவசிய பொருள்கள் ரெடி!
Madurai HC: பணக்காரர்களுக்கு மட்டும் தான் கோயிலா? ஏழைகள் சாமி கும்பிட கூடாதா? - நீதிபதிகள் சரமாரி கேள்வி
Madurai HC: பணக்காரர்களுக்கு மட்டும் தான் கோயிலா? ஏழைகள் சாமி கும்பிட கூடாதா? - நீதிபதிகள் சரமாரி கேள்வி
எதிர்பார்ப்பை கிளப்பிய ABP Southern Rising Summit 2024.. தென்னிந்தியாவை கொண்டாடும் பிரபலங்கள்!
எதிர்பார்ப்பை கிளப்பிய ABP Southern Rising Summit 2024.. தென்னிந்தியாவை கொண்டாடும் பிரபலங்கள்!
Pink Auto: பெண்கள் ஆட்டோ வாங்க ரூ.1 லட்சம் மானியம்: அரசு அறிவிப்பு- விண்ணப்பிப்பது எப்படி?
Pink Auto: பெண்கள் ஆட்டோ வாங்க ரூ.1 லட்சம் மானியம்: அரசு அறிவிப்பு- விண்ணப்பிப்பது எப்படி?
ஜெர்மன் கத்துக்கிட்டா இத்தனை பயன்களா? நான் முதல்வன் திட்டத்தில் இலவசப்பயிற்சி: விண்ணப்பிக்க நாளை கடைசி
ஜெர்மன் கத்துக்கிட்டா இத்தனை பயன்களா? நான் முதல்வன் திட்டத்தில் இலவசப்பயிற்சி: விண்ணப்பிக்க நாளை கடைசி
TNPSC Reforms: பட்டையைக் கிளப்பும் டிஎன்பிஎஸ்சி: படுவேகமாக முடிவுகளை வெளியிட்டு அசத்தல்!
பட்டையைக் கிளப்பும் டிஎன்பிஎஸ்சி: படுவேகமாக முடிவுகளை வெளியிட்டு அசத்தல்!
Diwali 2024: நெருங்கும் தீபாவளி! அனைத்து ரேசன் கடைகளும் 27ம் தேதி இயங்கும் - அமைச்சர் அறிவிப்பு
Diwali 2024: நெருங்கும் தீபாவளி! அனைத்து ரேசன் கடைகளும் 27ம் தேதி இயங்கும் - அமைச்சர் அறிவிப்பு
Breaking News LIVE 24th OCT 2024: ஸ்விக்கி, சொமேட்டோவில் பிளாட்ஃபார்ம் கட்டணம் உயர்வு!
Breaking News LIVE 24th OCT 2024: ஸ்விக்கி, சொமேட்டோவில் பிளாட்ஃபார்ம் கட்டணம் உயர்வு!
Embed widget