மேலும் அறிய

பாஜக ஆட்சியை முடிவு கட்ட ஜிஎஸ்டி மட்டும் போதும் - நாஞ்சில் சம்பத்

அதிமுக தலைமையை பன்னீர்செல்வம் ஏற்பதற்கு சசிகலாவிற்கு எந்த தயக்கமும் இருப்பதாக தெரியவில்லை - நாஞ்சில் சம்பத்

கனியாமூர் கலவரத்திற்கு பின்னால் பாஜக உள்ளதாக  நாஞ்சில் சம்பத் கடலூரில் பேட்டியளித்துள்ளார்.
 
கடலூர் திருப்பாதிரிப்புலியூரில் கடந்த 2018-ல் நடைபெற்ற பொதுக் கூட்டத்தில் நாஞ்சில் சம்பத் கலந்து கொண்டு பேசிய போது அப்போதைய  முதல்வர் எடப்பாடி பழனிசாமி மற்றும் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோரை அவதூறாக பேசியதாக நாஞ்சில் சம்பத் மீது வழக்கு தொடரப்பட்டது. அந்த வழக்கில் நேற்று நீதிமன்றத்தில் ஆஜரானார்.
 
பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர், இவ்வழக்கை ரத்து செய்ய அரசாணை பிறப்பிக்க தமிழக முதல்வரிடம் மனு அளித்துள்ளேன், இவ்வழக்கு ரத்தாகும் என தெரிவித்தார்.
 
தொடர்ந்து செய்தியாளர்களின் கேள்விகளுக்கு பதிலளித்த அவர், எடப்பாடி பழனிசாமியின் பண அரசியலுக்கு உயர்நீதிமன்ற தீர்ப்பு பாடை கட்டியுள்ளது. பணத்தை வைத்து ஒன்றரை கோடி தொண்டர்களை கொண்ட கட்சியை கபளீகரம் செய்ய முயன்ற எடப்பாடிக்கு உயர்நீதிமன்றம் முற்றுப்புள்ளி வைத்துள்ளதால் எடப்பாடி பழனிசாமியின் நம்பிக்கையில் மண் விழுந்துள்ளது என்றார்.
 
ஓ.பன்னீர்செல்வம் கையில் கட்சி வந்துவிட்டது. ஓபிஎஸ் ஆல் தான் கட்சியை காப்பாற்ற முடியும், என்பதுதான் தொண்டர்களின் எண்ணம். பணத்தை வைத்து தொண்டர்களை வாங்க நினைத்த எடப்பாடி பழனிசாமி அரசியலில் காணாமல் போகின்றார், அவர் அரசியல் அனாதை ஆக்கப்படுவார் என்று கூறினார். மேலும், சசிகலா பிறந்தநாளில் உயர்நீதிமன்ற தீர்ப்பு அவருக்கு நம்பிக்கை அளித்திருக்கும் எனவும், அதிமுக தலைமையை பன்னீர்செல்வம் ஏற்பதற்கு சசிகலாவிற்கு எந்த தயக்கமும் இருப்பதாக தெரியவில்லை என்றும் அவர் கூறினார்.
 
தொடர்ந்து பேசிய அவர், “பாஜக ஆட்சியை முடிவு கட்ட ஜிஎஸ்டி மட்டும் போதும். டைமண்ட் மாஃபியாக்களின் ஆட்சி நடைபெற்று வருகின்றது. பிணத்தை வைத்து அரசியல் செய்ய நினைக்கின்றது பாஜக. கனியாமூர் கலவரத்திற்கு பின்னால் பாஜக உள்ளது என தோன்றுகிறது. இவர்களை மக்கள் தூக்கி எரிவார்கள். எடப்பாடி பழனிசாமிக்கு  செல்வாக்கு இல்லை என்றால் எம்எல்ஏக்கள் அனைவரும் ஓபிஎஸ் பக்கம் வருவார்கள். அதிமுக பலவீனப்பட வேண்டும் சிதைய வேண்டும் என அந்தக் கட்சிக்குள் ஊடுருவி அதை அழித்துவிட்டு அந்த இடத்தில் பாஜக வரவேண்டும் என்பதற்கு எடப்பாடி பழனிசாமி பலியாகியுள்ளார்” என்று கூறினார்.

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர

யூட்யூபில் வீடியோக்களை காண  

 
 
 

தலைப்பு செய்திகள்

நீர்நிலைகளைத் தூர்வார ‘டெட்லைன்’... பருவமழைக்கு முன் பணிகளை முடிக்க ஆட்சியர் கெடு!
நீர்நிலைகளைத் தூர்வார ‘டெட்லைன்’... பருவமழைக்கு முன் பணிகளை முடிக்க ஆட்சியர் கெடு!
நம்ம ஊரு ‘சூப்பர் ஃபுட்’! விழுப்புரத்தில் குவிந்த நூற்றுக்கும் மேற்பட்ட நாட்டு நெல் ரகங்கள்!
நம்ம ஊரு ‘சூப்பர் ஃபுட்’! விழுப்புரத்தில் குவிந்த நூற்றுக்கும் மேற்பட்ட நாட்டு நெல் ரகங்கள்!
ஆசியாவையே மிரளவைத்த புதுச்சேரி! 8 மணி நேர வேலைக்காக உயிர் கொடுத்த 12 தியாகிகளின் உதிர வரலாறு!
ஆசியாவையே மிரளவைத்த புதுச்சேரி! 8 மணி நேர வேலைக்காக உயிர் கொடுத்த 12 தியாகிகளின் உதிர வரலாறு!
விஜய் மாடலில் ரங்கசாமி கோட்-சூட்! அஜித் ரேஸர் கெட்டப்... புதுச்சேரியில் தொண்டர்கள் செய்த சம்பவம்!
விஜய் மாடலில் ரங்கசாமி கோட்-சூட்! அஜித் ரேஸர் கெட்டப்... புதுச்சேரியில் தொண்டர்கள் செய்த சம்பவம்!

வீடியோ

தமிழ்நாட்டுக்குத் தலைகுனிவு? அசிங்கப்படுத்திய DK சிவகுமார் வாயைதிறங்க விஜய்
Cauvery Issue :
Kayalvizhi Alagiri Arrest : மு.க அழகிரி மகள் கைது! சென்னை போலீஸ் அதிரடி.. வெளியான அதிர்ச்சி வீடியோ
இர்பானுக்கு புது சிக்கல் சுகாதாரத்துறை நடவடிக்கை! விரைவில் கைதாகிறாரா?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
பனையூருக்கு தூதுவிட்ட முன்னாள் முதல்வர் மகன்! அப்பாவோட வரச் சொன்ன தவெக - நடந்தது என்ன?
பனையூருக்கு தூதுவிட்ட முன்னாள் முதல்வர் மகன்! அப்பாவோட வரச் சொன்ன தவெக - நடந்தது என்ன?
DMK Vs TVK: எதிர்பாராத ட்விஸ்ட்கள், அடுத்தடுத்த தோல்வி - திமுகவின் அடுத்த ப்ளான் என்ன? தயாராகும் தவெக
எதிர்பாராத ட்விஸ்ட்கள், அடுத்தடுத்த தோல்வி - திமுகவின் அடுத்த ப்ளான் என்ன? தயாராகும் தவெக
NEET PROTEST : நீட் தேர்வுக்கு எதிரான போராட்டம்.! வழக்குகள் அனைத்தும் ரத்து- அசத்திய சிஎம் விஜய்
நீட் தேர்வுக்கு எதிரான போராட்டம்.! வழக்குகள் அனைத்தும் ரத்து- அசத்திய சிஎம் விஜய்
TN GOVT Reliability Division : விஜய் அரசின் FACT CHECK குழு.! தளபதி ரசிகர் மன்ற நிர்வாகிக்கு பொறுப்பு.. யார் யாருக்கு இடம் ? சம்பளம் என்ன?
விஜய் அரசின் FACT CHECK குழு.! தளபதி ரசிகர் மன்ற நிர்வாகிக்கு பொறுப்பு.. யார் யாருக்கு இடம் ? சம்பளம் என்ன?
தமிழ்நாட்டுக்கு தண்ணீர்.. பிரதமர் மோடிகிட்ட ஒரு வார்த்தை பேசுனீங்களா?.. நயினாருக்கு மாணிக்கம் தாகூர் கேள்வி!
தமிழ்நாட்டுக்கு தண்ணீர்.. பிரதமர் மோடிகிட்ட ஒரு வார்த்தை பேசுனீங்களா?.. நயினாருக்கு மாணிக்கம் தாகூர் கேள்வி!
Maruti 7 Seater: எல்லாமே இருந்தும் ஓடல..! 7 சீட்டரை அப்க்ரேட் செய்து விலையை குறைக்கும் மாருதி? 5 ஸ்டார் ரேட்டிங், 23KM மைலேஜ்
எல்லாமே இருந்தும் ஓடல..! 7 சீட்டரை அப்க்ரேட் செய்து விலையை குறைக்கும் மாருதி? 5 ஸ்டார் ரேட்டிங், 23KM மைலேஜ்
Ration Shop Fingerprint : மிஸ் பண்ணாதீங்க.! ரேஷன் கடையில் கைவிரல் பதிவு செய்ய லாஸ்ட் சான்ஸ்- வெளியான முக்கிய அறிவிப்பு
மிஸ் பண்ணாதீங்க.! ரேஷன் கடையில் கைவிரல் பதிவு செய்ய சூப்பர் சான்ஸ்- வெளியான முக்கிய அறிவிப்பு
Toyota Innova Hycross: இன்னோவா ஹைக்ராஸை கட்டிட்டு அழாதீங்க..! விலையிலும், வசதியிலும் டக்கரான 3 மாற்று ஆப்ஷன்கள்
இன்னோவா ஹைக்ராஸை கட்டிட்டு அழாதீங்க..! விலையிலும், வசதியிலும் டக்கரான 3 மாற்று ஆப்ஷன்கள்
Embed widget