10 நாட்கள் ஆகியும் எந்த தகவலும் இல்லை.. சிறுமி வழக்கில் அதிரடி முடிவு எடுத்த தமிழக அரசு
Child Missing Case: 10 நாட்களாகியும் சிறுமி காணாமல் போன வழக்கில் எந்த துப்பும் கிடைக்காததை அடுத்து வேறு வழியில்லாமல் இந்த வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டுள்ளது.

விழுப்புரம் மாவட்டம் செஞ்சியை அடுத்த ஆலம்பூண்டி கிராமத்தில் குளக்கரை தெருவை சேர்ந்தவர் வடிவேலு. இவருடைய மனைவி பவானி. இந்த தம்பதியின் 2-வது மகள் ஹேமாவதி (7). இந்த சிறுமி 11ம் தேதி இரவு பிறந்த நாள் கொண்டாடிய நிலையில் 12ம் தேதி அதிகாலையில் எழுந்து பார்த்த திடீரென மாயமானார். இதனையடுத்து பெற்றோர் பல்வேறு இடங்களில் தேடியும் கிடைக்காததை அடுத்து தாய் சத்தியமங்கலம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.
சிறுமி காணாமல் போன வழக்கு
இந்த புகாரை அடுத்து முதலில் 5 தனிப்டைகள் அமைக்கப்பட்டு 100க்கும் மேற்பட்ட போலீசார் தீவிர தேடுதல் பணியில் ஈடுபட்டனர். அதே சமயம் சிறுமியை யாரேனும் கடத்திச் சென்றார்களா அல்லது வேறு ஏதேனும் காரணமா என்ற கோணத்தில் போலீசார் விசாரணையை தீவிரப்படுத்தினர். இதனையடுத்து மேலும் கூடுதலாக 5 தனிப்படைகள் அமைக்கப்பட்டு மலைப்பகுதி, பாறைகளுக்கு இடையே ஆய்வு செய்தனர். கரும்புத் தோட்டங்கள்,ஏரி, குளங்கள், கிணறு மற்றும் டிரோன் மூலமும் தேடும் வேட்டையில் ஈடுபட்டனர். கிராமத்தில் உள்ள ஒவ்வொரு வீட்டிற்கும் நேரில் சென்று சோதனை செய்தனர்.
விசாரணையில் எந்த முன்னேற்றமும் இல்லை
மேலும் ஆலம்பூண்டி மலைமீது 20 போலீசார் மோப்பநாய் உதவியுடன் தேடுதல் பணியில் ஈடுபட்டனர். அப்பகுதியில் பதிவான தொலைபேசி அழைப்பு விவரங்கள் மற்றும் கண்காணிப்பு கேமரா காட்சிகள் உள்ளிட்டவற்றையும் ஆய்வு செய்துள்ளனர். அதேபோல் தீயணைப்புத் துறையினர், ஆலம்பூண்டி மட்டுமின்றி சுற்றுப்புற கிராமங்களில் உள்ள கிணறுகளில் இறங்கி தேடும் பணியில் ஈடுட்டனர். இருப்பினும், இதுவரை வழக்கில் எந்தவிதமான முன்னேற்றமும் ஏற்படவில்லை.
சிபிசிஐடிக்கு மாற்றம்
இதனிடையே சிறுமியை கண்டுபிடிக்க காவல்துறை உரிய நடவடிக்கை எடுக்கவில்லை என கூறி, திமுக சார்பில் நாளை ஆர்ப்பாட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் 10 நாட்களாகியும் 7 வயது சிறுமி காணாமல் போன வழக்கில் எந்த துப்பும் கிடைக்காததை அடுத்து வேறு வழியில்லாமல் இந்த வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
Before You Go
Minister Inspection : ”எல்லாமே அப்படியே தான் இருக்கு ஒரு நாளும் வேலை நடக்கல”அதிகாரியை விளாசிய அமைச்சர்
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்





















