மேலும் அறிய

திண்டிவனத்தில் வடமாநில இளைஞர் உயிரிழப்பு; புலம்பெயர் தொழிலாளர்களுக்கு பாதுகாப்பு வழங்க வேண்டும் - எம்பி ரவிக்குமார் கோரிக்கை

புலம்பெயர் தொழிலாளர் பாதுகாப்பு சட்டத்தின்படி உரிய பாதுகாப்பை வழங்கவேண்டும் என எம் பி ரவிக்குமார் கோரிக்கை விடுத்துள்ளார்.

விழுப்புரம்: திண்டிவனத்தில் பாதாள சாக்கடை திட்டப் பணியின் போது மண்ணில் புதைந்த வடமாநில இளைஞர் உயிரிழந்தார். விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் நகராட்சிக்குட்பட்ட அனைத்து பகுதிகளிலும் பாதாள சாக்கடை திட்ட பணிகள் நடைபெற்று வருகின்றது. இதன் ஒரு பகுதியாக இன்று திண்டிவனம் ரொட்டிகார தெருவில் பாதாள சாக்கடை திட்ட பணிகள் நடைபெற்றுக் கொண்டிருந்தது. அங்கு நான்கு வட மாநில இளைஞர்கள் பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர். அதில் மூன்று பேர் பள்ளத்தின் மேல் இருந்து கொண்டு ஜல்லியை அள்ளி கொடுத்துக் கொண்டிருந்தனர்.

பள்ளத்தில் கீழே இருந்த மற்றொரு வட மாநில இளைஞரான சிராஜ் பீஞ்ச் என்பவர் ஜல்லியை வாங்கி கீழே கொட்டிக் கொண்டிருக்கும் போது திடீரென்று பக்கவாட்டில் இருந்த மண் சரிந்ததில் முற்றிலுமாக வடமாநில இளைஞர் மண்ணில் புதைந்தார். அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் அவரை மீட்க முயற்சி செய்தனர். பின்னர் ஜேசிபி எந்திரம் கொண்டு சுமார் ஒரு மணி நேரம் மீட்கும் முயற்சியில் ஈடுபட்டு பின் அவரை மண் புதையலில் இருந்து மீட்டு வெளியே எடுத்தனர். பின்பு 108 ஆம்புலன்ஸ் மூலமாக திண்டிவனம் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டார். அங்கு அவரை பரிசோதனை செய்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். பாதாள சாக்கடை திட்டத்தின் பொழுது வடமாநில இளைஞர் ஒருவர் மண்ணில் புதைந்து பலியான சம்பவம் இப்பகுதியில் பரபரப்பை  ஏற்படுத்தி உள்ளது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில், திண்டிவனத்தில் பாதாள சாக்கடைக்கு பள்ளம் தோண்டும்போது மேற்குவங்க தொழிலாளி சிராஜ் மிஞ்ச் ( Siraj Minj) என்பவர் புதையுண்டு உயிரிழந்தவருக்கு முதலமைச்சர்  அவர்கள் இறந்தவரின் குடும்பத்துக்கு 20 லட்சம் நிவாரணம் வழங்கவேண்டும் எனவும் மாநிலங்களுக்கு இடையேயான புலம்பெயர் தொழிலாளர் சட்டம், 1979 (‘ISMA’) தற்போது தொழில் பாதுகாப்பு, சுகாதாரம், வேலை நிலைமைகள் (OSH) 2020 என்ற சட்டதொகுப்பின் கீழ் கொண்டுவரப்பட்டுள்ளது. அந்த சட்டத்தின்படி புலம்பெயர்ந்த தொழிலாளர்களுக்கு உரிய பாதுகாப்பை வழங்கவேண்டும் என விழுப்புரம் நாடாளுமன்ற உறுப்பினர் ரவிக்குமார் தெரிவித்துள்ளார்.

 


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர

யூடியூபில் வீடியோக்களை காண

தலைப்பு செய்திகள்

புதுச்சேரியில் பரபரப்பு! பிரியாணி கடைக்காரர் செய்த 'ஒற்றை' சம்பவம்... மாட்டிக்கொண்ட மின்துறை அதிகாரி!
புதுச்சேரியில் பரபரப்பு! பிரியாணி கடைக்காரர் செய்த 'ஒற்றை' சம்பவம்... மாட்டிக்கொண்ட மின்துறை அதிகாரி!
மதுபோதையில் ரவுசு! கார் கண்ணாடியை நொறுக்கி வாகனங்களை மறித்து ரகளை: விழுப்புரத்தில் பரபரப்பு!
மதுபோதையில் ரவுசு! கார் கண்ணாடியை நொறுக்கி வாகனங்களை மறித்து ரகளை: விழுப்புரத்தில் பரபரப்பு!
விழுப்புரம் வந்த 1319 டன் யூரியா உரம்: விவசாயிகளுக்கு தட்டுப்பாடு இல்லை; விதிகளை மீறும் கடைகளுக்கு 'சீல்' பாயும் என கடும் எச்சரிக்கை!
விழுப்புரம் வந்த 1319 டன் யூரியா உரம்: விவசாயிகளுக்கு தட்டுப்பாடு இல்லை; விதிகளை மீறும் கடைகளுக்கு 'சீல்' பாயும் என கடும் எச்சரிக்கை!
புதுச்சேரியில் எகிறிய MBBS அரசு சீட்டுகள்: 429 ஆக உயர்வு - முதல்வர் ரங்கசாமி அதிரடி!
புதுச்சேரியில் எகிறிய MBBS அரசு சீட்டுகள்: 429 ஆக உயர்வு - முதல்வர் ரங்கசாமி அதிரடி!

வீடியோ

Cauvery Issue :
Kayalvizhi Alagiri Arrest : மு.க அழகிரி மகள் கைது! சென்னை போலீஸ் அதிரடி.. வெளியான அதிர்ச்சி வீடியோ
இர்பானுக்கு புது சிக்கல் சுகாதாரத்துறை நடவடிக்கை! விரைவில் கைதாகிறாரா?
RSS to கல்வி அமைச்சர் மோடியின் நம்பிக்கை!யார் இந்த பிரகலாத் ஜோஷி?
வைத்திலிங்கம் ரூ.28 கோடி ஊழல்?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
MK Stalin: TVK ஆட்சி அமைந்ததில் இருந்தே தடங்கல்தான்..! அவகாசம் நீட்டிக்கப்பட வேண்டும் - அரசுக்கு ஸ்டாலின் கோரிக்கை
TVK ஆட்சி அமைந்ததில் இருந்தே தடங்கல்தான்..! அவகாசம் நீட்டிக்கப்பட வேண்டும் - அரசுக்கு ஸ்டாலின் கோரிக்கை
Income Tax Return: இன்றே கடைசி..! வருமான வரி தாக்கல் செய்யாவிட்டால் ரூ.5000 அபராதம் - கூடுதல் அவகாசம் யாருக்கு?
இன்றே கடைசி..! வருமான வரி தாக்கல் செய்யாவிட்டால் ரூ.5000 அபராதம் - கூடுதல் அவகாசம் யாருக்கு?
அந்தர் பல்டி அடித்து வந்த அதிமுக முன்னாள் அமைச்சர்கள்.. டம்மியாகவே வைத்திருக்கும் தவெக - காரணம் என்ன?
அந்தர் பல்டி அடித்து வந்த அதிமுக முன்னாள் அமைச்சர்கள்.. டம்மியாகவே வைத்திருக்கும் தவெக - காரணம் என்ன?
Sasikumar:
Sasikumar: "விஜய் முதலமைச்சரானதில் ஒரே ஒரு வருத்தம்தான்.." இயக்குனர் சசிகுமார் சொன்னது ஏன்?
TVS Raider 125: ரெய்டர் 125 பைக்கில் டாக்டர் டூம் எடிஷன் - 60KM மைலேஜ், புதுசா என்ன இருக்கு? விலை எப்படி
ரெய்டர் 125 பைக்கில் டாக்டர் டூம் எடிஷன் - 60KM மைலேஜ், புதுசா என்ன இருக்கு? விலை எப்படி
ஒரே சார்ஜில் 120 கி.மீட்டர் மைலேஜ்... பட்ஜெட் விலையில் Quantum Energy Plasma இ ஸ்கூட்டர்! எவ்ளோ?
ஒரே சார்ஜில் 120 கி.மீட்டர் மைலேஜ்... பட்ஜெட் விலையில் Quantum Energy Plasma இ ஸ்கூட்டர்! எவ்ளோ?
Sabarivarman Murder : சபரிவர்மன் கொலையில் ட்விஸ்ட்.! நள்ளிரவில் சிறையில் நடந்தது என்ன.? CBCID விசாரணையில் ஷாக் தகவல்
சபரிவர்மன் கொலையில் ட்விஸ்ட்.! நள்ளிரவில் சிறையில் நடந்தது என்ன.? CBCID விசாரணையில் ஷாக் தகவல்
Mekdatu: கர்நாடகாவிற்கு நோ சொன்ன மத்திய அரசு..! தேவையில்லாத பயணம் - CM விஜய் திட்டத்தை கைவிடுகிறாரா?
கர்நாடகாவிற்கு நோ சொன்ன மத்திய அரசு..! தேவையில்லாத பயணம் - CM விஜய் திட்டத்தை கைவிடுகிறாரா?
Embed widget