மேலும் அறிய

தூத்துக்குடி மாவட்டம் வல்லநாடு துப்பாக்கி சுடுதளத்தில் துப்பாக்கி சுடும் போட்டி- நெல்லை டிஐஜி பிரவேஷ் குமார் முதலிடம்

பிஸ்டல் ரக துப்பாக்கி பிரிவுக்கான போட்டியில் டிஐஜிபிரவேஷ் குமார் முதலிடத்தையும், ஏஎஸ்பி கேல்கர் சுப்ரமண்யா இரண்டாவது இடத்தையும், பூபதிமூன்றாவது இடத்தையும் பிடித்தனர்.

தமிழ்நாடு காவல்துறையில் பெண்கள் பணிக்குச் சேர்ந்து 50 ஆண்டுகள் நிறைவடைந்ததை கொண்டாடும் வகையில் திருநெல்வேலி சரகத்தில் பணிபுரியும் பெண் காவல் துறையினர் மற்றும் திருநெல்வேலி சரக காவல்துறை உயர் அதிகாரிகளுக்கான துப்பாக்கி சுடும் போட்டி தூத்துக்குடி மாவட்டம் வல்லநாடு துப்பாக்கி சுடுதளத்தில் 2 நாட்கள் நடைபெற்றது.

தூத்துக்குடி மாவட்டம் வல்லநாடு துப்பாக்கி சுடுதளத்தில் துப்பாக்கி சுடும் போட்டி- நெல்லை டிஐஜி பிரவேஷ் குமார் முதலிடம்

பெண் காவல் துறையினருக்கும், உயர் அதிகாரிகளுக்கும் நடைபெற்ற இப்போட்டியில் தூத்துக்குடி, திருநெல்வேலி, தென்காசி, கன்னியாகுமரி மாவட்டங்கள், திருநெல்வேலி மாநகரம், தமிழ்நாடு சிறப்பு காவல் படையின் 9, 11 மற்றும் 12-வது பிரிவு பட்டாலியன் ஆகியவற்றில் பணிபுரியும் பெண் காவல்துறையினர் மற்றும் திருநெல்வேலி சரக டிஐஜி பிரவேஷ் குமார், தூத்துக்குடி எஸ்பிஎல்.பாலாஜி சரவணன் உள்ளிட்டஉயர் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

தூத்துக்குடி மாவட்டம் வல்லநாடு துப்பாக்கி சுடுதளத்தில் துப்பாக்கி சுடும் போட்டி- நெல்லை டிஐஜி பிரவேஷ் குமார் முதலிடம்

பெண் காவல்துறையினருக்கான இன்சாஸ் ரக துப்பாக்கி பிரிவுக்கான போட்டியில் கன்னியாகுமரி மாவட்டம் மண்டைக்காடு காவல் நிலைய முதல் நிலை பெண் காவலர் செலின் பிரபா முதலிடத்தையும், திருநெல்வேலி மாவட்ட ஆயுதப்படை பெண் காவலர் ஆதிலட்சுமி இரண்டாவது இடத்தையும், கோவில்பட்டி மேற்குகாவல் நிலைய பெண் உதவி ஆய்வாளர் ஆரோக்கிய ஜென்சி மூன்றாவது இடத்தையும் பிடித்து வெற்றி பெற்றனர். கார்பன் ரக துப்பாக்கி பிரிவுக்கான போட்டியில் ராமலட்சுமிமுதலிடத்தையும், செங்கோட்டைகாவல் நிலைய உதவி ஆய்வாளர் இளவரசி மற்றும் தூத்துக்குடி மாவட்ட ஆயுதப்படை பெண் காவலர் ஜானகி ஆகியோர் இரண்டாவது இடத்தையும், திருநெல்வேலி பெருமாள்புரம் காவல் நிலைய பெண் தலைமை காவலர் கற்பகராஜலட்சுமி மூன்றாவது இடத்தையும் பிடித்தனர்.

தூத்துக்குடி மாவட்டம் வல்லநாடு துப்பாக்கி சுடுதளத்தில் துப்பாக்கி சுடும் போட்டி- நெல்லை டிஐஜி பிரவேஷ் குமார் முதலிடம்

பிஸ்டல் ரக துப்பாக்கி பிரிவுக்கான போட்டியில் தமிழ்நாடு சிறப்பு காவல் படை 12-வதுபிரிவு பட்டாலியன் உதவி கமாண்டண்ட் பூபதி முதலிடத்தையும், திருநெல்வேலி ஊரகஅனைத்து மகளிர் காவல் நிலைய பெண் தலைமை காவலர் வளர்மதி இரண்டாவது இடத்தையும், கன்னியாகுமரி மாவட்ட ஆயுதப்படைஉதவி ஆய்வாளர் குருகிருத்திகா 3-வது இடத்தையும் பிடித்தனர்.

தூத்துக்குடி மாவட்டம் வல்லநாடு துப்பாக்கி சுடுதளத்தில் துப்பாக்கி சுடும் போட்டி- நெல்லை டிஐஜி பிரவேஷ் குமார் முதலிடம்

திருநெல்வேலி சரக காவல்துறை உயர் அதிகாரிகளுக்கான இன்சாஸ் ரக துப்பாக்கி பிரிவுக்கான போட்டியில் டிஐஜி பிரவேஷ் குமார், கன்னியாகுமரி மாவட்ட பயிற்சி ஏஎஸ்பி கேல்கர் சுப்ரமண்யா ஆகியோர் முதலிடத்தையும், பூபதி இரண்டாவது இடத்தையும், தூத்துக்குடி ஊரக துணை கோட்ட டிஎஸ்பி சுரேஷ் மூன்றாவது இடத்தையும் பிடித்தனர்.பிஸ்டல் ரக துப்பாக்கி பிரிவுக்கான போட்டியில் டிஐஜிபிரவேஷ் குமார் முதலிடத்தையும், ஏஎஸ்பி கேல்கர் சுப்ரமண்யா இரண்டாவது இடத்தையும், பூபதிமூன்றாவது இடத்தையும் பிடித்தனர். ஒட்டுமொத்த துப்பாக்கி சுடும்போட்டியில் டிஐஜி பிரவேஷ்குமார் முதலிடத்தையும், கேல்கர்சுப்ரமண்யா, 2-வது இடத்தையும், பூபதி 3-வது இடத்தையும் பிடித்து வெற்றி பெற்றனர்.

தூத்துக்குடி மாவட்டம் வல்லநாடு துப்பாக்கி சுடுதளத்தில் துப்பாக்கி சுடும் போட்டி- நெல்லை டிஐஜி பிரவேஷ் குமார் முதலிடம்

வெற்றி பெற்றவர்களுக்கு டிஐஜி பரிசு வழங்கினார். போட்டிஏற்பாடுகளை சென்னை கமாண்டோ பயிற்சி பள்ளி காவல்கூடுதல் கண்காணிப்பாளர் ஸ்டீபன், ஆய்வாளர் விவேக் ராஜன் மற்றும் தூத்துக்குடி மாவட்ட ஆயுதப்படை காவல் ஆய்வாளர் சுனைமுருகன் தலைமையிலான ஆயுதப்படை காவல்துறையினர் செய்திருந்தனர்.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Singer Velmurugan Arrest: பிரபல பாடகர் வேல்முருகன் அதிரடி கைது - என்ன காரணம்?
Singer Velmurugan Arrest: பிரபல பாடகர் வேல்முருகன் அதிரடி கைது - என்ன காரணம்?
KPK Jayakumar Death : “ராமஜெயம் கொலை வழக்குபோல் ஆகும் ஜெயக்குமார் வழக்கு” சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றமா..?
KPK Jayakumar Death : “ராமஜெயம் கொலை வழக்குபோல் ஆகும் ஜெயக்குமார் வழக்கு” சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றமா..?
Thadi Balaji: தேவையானதை வாங்கிக்கொண்டு அரசை மக்கள் திட்டலாமா? - நடிகர் தாடி பாலாஜி கேள்வி!
தேவையானதை வாங்கிக்கொண்டு அரசை மக்கள் திட்டலாமா? - நடிகர் தாடி பாலாஜி கேள்வி!
TN Weather Update: தமிழ்நாட்டில் தொடரப்போகும் மழை! எந்தெந்த மாவட்டங்களில் வெளுத்து வாங்கப் போகுது? முழு விவரம்
TN Weather Update: தமிழ்நாட்டில் தொடரப்போகும் மழை! எந்தெந்த மாவட்டங்களில் வெளுத்து வாங்கப் போகுது? முழு விவரம்
Advertisement
Advertisement
Advertisement
for smartphones
and tablets

வீடியோ

KPY Bala : Red Pix Felix Wife : ”FELIX உயிருக்கு ஆபத்துஎன் கணவர் எங்கே?” பெலிக்ஸ் மனைவி கேள்விEV Velu Son Car Accident : கார் விபத்தில் சிக்கிய மகன் கலக்கத்தில் எ.வ.வேலு பதற வைக்கும் CCTV காட்சிAsaduddin Owaisi plays cricket : கிரிக்கெட் ஆடிய ஓவைசி! குதூகலமான சிறுவர்கள்! பிரச்சார சுவாரஸ்யம்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Singer Velmurugan Arrest: பிரபல பாடகர் வேல்முருகன் அதிரடி கைது - என்ன காரணம்?
Singer Velmurugan Arrest: பிரபல பாடகர் வேல்முருகன் அதிரடி கைது - என்ன காரணம்?
KPK Jayakumar Death : “ராமஜெயம் கொலை வழக்குபோல் ஆகும் ஜெயக்குமார் வழக்கு” சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றமா..?
KPK Jayakumar Death : “ராமஜெயம் கொலை வழக்குபோல் ஆகும் ஜெயக்குமார் வழக்கு” சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றமா..?
Thadi Balaji: தேவையானதை வாங்கிக்கொண்டு அரசை மக்கள் திட்டலாமா? - நடிகர் தாடி பாலாஜி கேள்வி!
தேவையானதை வாங்கிக்கொண்டு அரசை மக்கள் திட்டலாமா? - நடிகர் தாடி பாலாஜி கேள்வி!
TN Weather Update: தமிழ்நாட்டில் தொடரப்போகும் மழை! எந்தெந்த மாவட்டங்களில் வெளுத்து வாங்கப் போகுது? முழு விவரம்
TN Weather Update: தமிழ்நாட்டில் தொடரப்போகும் மழை! எந்தெந்த மாவட்டங்களில் வெளுத்து வாங்கப் போகுது? முழு விவரம்
Crime: ஆபாச வீடியோக்கள்! ஆண்களை மிரட்டி பணம், கார் பறித்த இரண்டு பெண்கள் - போலீசில் சிக்கியது எப்படி?
Crime: ஆபாச வீடியோக்கள்! ஆண்களை மிரட்டி பணம், கார் பறித்த இரண்டு பெண்கள் - போலீசில் சிக்கியது எப்படி?
Latest Gold Silver Rate: அப்பாடா! திங்கள் கிழமையே குறைந்த தங்கம் விலை..! ஒரு சவரன் எவ்வளவு தெரியுமா?
அப்பாடா! திங்கள் கிழமையே குறைந்த தங்கம் விலை..! ஒரு சவரன் எவ்வளவு தெரியுமா?
CSK Vs RCB IPL Playoff: சென்னையை தட்டி தூக்குனா தான் ப்ளே ஆஃப் வாய்ப்பு - ஆர்.சி.பி. எப்படி ஜெயிக்கணும் தெரியுமா?
CSK Vs RCB IPL Playoff: சென்னையை தட்டி தூக்குனா தான் ப்ளே ஆஃப் வாய்ப்பு - ஆர்.சி.பி. எப்படி ஜெயிக்கணும் தெரியுமா?
AP Assembly Elections: ஆந்திர சட்டமன்ற தேர்தலில் விறுவிறு வாக்குப்பதிவு - ஆர்வமுடன் வாக்களித்த பிரபலங்கள்!
ஆந்திர சட்டமன்ற தேர்தலில் விறுவிறு வாக்குப்பதிவு - ஆர்வமுடன் வாக்களித்தபிரபலங்கள்!
Embed widget