மேலும் அறிய

கடல் வழியாக தீவிரவாதிகள் ஊடுருவல்கள் இருக்கிறதா? - முத்துப்பேட்டையில் 'சி விஜில் 2022 ஆபரேஷன்'

மீனவர்கள் படகு  சுற்றுலா பயணிகள் மற்றும் படகு துறை, அதேபோல் காட்டில்  உள்ள  சுற்றுலா பயணிகள் தாங்கும் பகுதியில் தீவிரவாதிகள் சமூக விரோதிகள்  யாரும் இருகிறார்களா? என்று தீவிர சோதனையில் ஈடுபட்டனர்.

முத்துப்பேட்டை பகுதியில் கடல் வழியாக தீவிரவாதிகள் ஊடுருவல்கள் இருக்கிறதாஎன இன்று காலை முதல் சி விஜில் 2022 ஆப்ரேஷன் என்ற பெயரில் போலீசார் பாதுகாப்பு ஒத்திகையில் ஈடுபட்டனர். நாளை இரவு வரை நடைபெறுகிறது.

திருவாரூர் மாவட்டம், முத்துப்பேட்டை பகுதியில் இன்று காலை முதல் சி விஜில் 2022' என்றபேரில் போலீசார் பாதுகாப்பு ஒத்திகையில் ஈடுபட்டு வருகின்றனர். இந்திய கடல் வழியாக தீவிரவாதிகள் ஊடுருவி, தாக்குதல் நடத்துவதை தடுக்கும் பொருட்டு, கடலோர கிராமங்களில் அரசு சார்பில் பாதுகாப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்த பாதுகாப்பு நடவடிக்கைகள் சரியாக நடக்கிறதா என்பதை பரிசோதிக்கும் வகையில், இந்திய கடலோர காவல் படையினர், தமிழக மரைன்  போலீசார் மற்றும் மாநில போலீசார் இணைந்து கடந்த ஆண்டுகளில் ஆப்ரேஷன் அம்லா, 'சாகர் கவாச்' (கடல்கவசம்)  என்ற பெயரில், ஒத்திகை நிகழ்ச்சி தமிழ்நாடு மற்றும் ஆந்திர பிரதேசம், புதுச்சேரி மாநில கடலோரப்பகுதிகளில் ஒத்திகை பயிற்சி இரண்டு நாட்கள் வருடம் நடத்தப்படுவது வழக்கம். 


கடல் வழியாக தீவிரவாதிகள் ஊடுருவல்கள் இருக்கிறதா? - முத்துப்பேட்டையில் 'சி விஜில் 2022 ஆபரேஷன்

அதன்படி, இந்த ஆண்டு  சி விஜில் 2022 ஆப்ரேஷன் என்ற பேரில் தமிழகத்தில் கடலோர பகுதியில் இன்று காலை முதல் துவங்கி நாளை இரவு வரை நடைபெறுகிறது. இதனையடுத்து திருவாரூர் மாவட்டம், முத்துப்பேட்டை பகுதியில்  சி விஜில் 2022 ஆப்ரேஷன் ஒத்திகை இன்று காலை துவங்கியது. அதன்படி முத்துப்பேட்டையில் பல்வேறு பகுதிகளில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு உள்ளனர். இதில் இடும்பாவனம், தில்லைவிளாகம், கோபாலசமுத்திரம், தம்பிக்கோட்டை கீழக்காடு, பேட்டை உள்ளிட்ட பகுதியில் உள்ள போலீஸ் செக்போஸ்டில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டது. மேலும் கிழக்கு கடற்கரை சாலையில் போலீசார்  சிறப்பு வாகன ரோந்தில் ஈடுபட்டனர். இதனை திருவாரூர் எஸ்பி சுரேஷ்குமார் மேற்பார்வையில் திருவாரூர் ஏடிஎஸ்பி வெள்ளத்துரை, முத்துப்பேட்டை டிஎஸ்பி  விவேகானந்தன், இன்ஸ்பெக்டர் ராஜேஷ் தலைமையிலான போலீசார் பல்வேறு  பகுதிகளை ஆய்வு செய்து பார்வையிட்டனர். 


கடல் வழியாக தீவிரவாதிகள் ஊடுருவல்கள் இருக்கிறதா? - முத்துப்பேட்டையில் 'சி விஜில் 2022 ஆபரேஷன்

அதேபோல் முன்னதாக முத்துப்பேட்டை கடலை  ஒட்டி அமைந்துள்ள ஆசியாவின் மிகப்பெரிய காடான அலையாத்திக்காடு மற்றும் லகூன் பகுதியில் முத்துப்பேட்டை கடலோர காவல்படை போலீஸ் சப் இன்ஸ்பெக்டர்  ரகுபதி தலைமையில் கடலோர காவல்படை போலீசார் படகில் சென்று மீனவர்கள் படகு  சுற்றுலா பயணிகள் செல்லும் படகுகள் மற்றும் படகுதுறை, அதேபோல் காட்டில்  உள்ள சுற்றுலா பயணிகள் தாங்கும் பகுதியில் தீவிரவாதிகள் சமூக விரோதிகள்  யாரும் இருக்கிறார்களா? என்று தீவிர சோதனையில் ஈடுபட்டனர்.

இந்தநிலையில்  இந்த ' சி விஜில் 2022 ஆப்ரேஷன்' ஒத்திகையில் திருவாரூர், திருத்துறைப்பூண்டி, மன்னார்குடி, முத்துப்பேட்டை ஆகிய பகுதியை சேர்ந்த 100க்கும் மேற்பட்ட  போலீசார், அதுமட்டுமின்றி கடலோர காவல்படை போலீசார் மற்றும்  சிறப்பு போலீசார், மற்றும் ஊர்க்காவல் படை போலீசார் இந்த ஒத்திகையில் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றனர். இந்த ஒத்திகை குறித்து மக்களுக்கு தெரியாததால் என்னா நடக்கிறது? தீவிரவாதிகள் சமூக விரோதிகள்  யாரும் இருக்கிறார்களா என்று தெரியாமல் இன்று காலை முதல் மக்கள் மத்தியில்  குழப்பம் ஏற்பட்டு ஒத்திகை குறித்து மக்களுக்கு தெரியாததால்  முத்துப்பேட்டையில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

தலைப்பு செய்திகள்

கரூர் கோவில் நிலங்கள்: பத்திரப்பதிவு தடை நீக்கம் குறித்து உயர் நீதிமன்றம் முக்கிய உத்தரவு!
கரூர் கோவில் நிலங்கள்: பத்திரப்பதிவு தடை நீக்கம் குறித்து உயர் நீதிமன்றம் முக்கிய உத்தரவு!
ஏழை விவசாயியின் மகன் நீட் தேர்வில் தமிழ்நாடு அளவில் முதலிடம்! அரசு பள்ளியின் மாபெரும் சாதனை..!
ஏழை விவசாயியின் மகன் நீட் தேர்வில் தமிழ்நாடு அளவில் முதலிடம்! அரசு பள்ளியின் மாபெரும் சாதனை..!
விருதுநகர்: பட்டாசு ஆலை, நீர்நிலை அருகே கல் குவாரி - உயர் நீதிமன்றம் அதிரடி!
விருதுநகர்: பட்டாசு ஆலை, நீர்நிலை அருகே கல் குவாரி - உயர் நீதிமன்றம் அதிரடி!
மதுரையில் அதிரடி: தடை செய்யப்பட்ட பிளாஸ்டர் ஆப் பாரிஸ் சிலைகளுக்கு சீல்!
மதுரையில் அதிரடி: தடை செய்யப்பட்ட பிளாஸ்டர் ஆப் பாரிஸ் சிலைகளுக்கு சீல்!

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
US Iran War: யப்பா, உங்க சண்டை ஓயவே ஓயாதா.? ஈரான் பகுதிக்குள் நுழைய முயன்ற கப்பலை தாக்கிய அமெரிக்கா; போச்சா.?!
யப்பா, உங்க சண்டை ஓயவே ஓயாதா.? ஈரான் பகுதிக்குள் நுழைய முயன்ற கப்பலை தாக்கிய அமெரிக்கா; போச்சா.?!
NEET Coaching Centre : ’நீட் தேர்வுக்கு எதிர்ப்பு – பயிற்சி மையத்திற்கு Personal Loan’ இருமுகன் முதல்வர் விஜய்..?
’நீட் தேர்வுக்கு எதிர்ப்பு – பயிற்சி மையத்திற்கு Personal Loan’ இருமுகன் முதல்வர் விஜய்..?
Independence Day 2026 Speech: சுதந்திர தினம்; மாணவர்கள் பள்ளி பேச்சுப்போட்டிகளில் கலந்துகொள்ள டிப்ஸ்! உரை
Independence Day 2026 Speech: சுதந்திர தினம்; மாணவர்கள் பள்ளி பேச்சுப்போட்டிகளில் கலந்துகொள்ள டிப்ஸ்! உரை
Hero EV bike: ஓலா, பஜாஜுக்கு போட்டி? ஹீரோவின் முதல் இ.வி.பைக்- எலக்ட்ரிக் சந்தையில் பெரும் புரட்சி!
Hero EV bike: ஓலா, பஜாஜுக்கு போட்டி? ஹீரோவின் முதல் இ.வி.பைக்- எலக்ட்ரிக் சந்தையில் பெரும் புரட்சி!
Trump Vs Iran: ''என்னைய அடிச்சதுக்கு பணத்த குடு'': ஈரானிடம் இழப்பீடு கோரும் ட்ரம்ப்; இது ரொம்ப புதுசா இருக்கே.!
''என்னைய அடிச்சதுக்கு பணத்த குடு'': ஈரானிடம் இழப்பீடு கோரும் ட்ரம்ப்; இது ரொம்ப புதுசா இருக்கே.!
New Bajaj Pulsar 150: போடு வெடிய.! புதிய எஞ்சின் புதிய ஃபிரேமுடன் வரவிருக்கும் இளசுகளின் ப்ரியமான பஜாஜ் பல்சர் 150
போடு வெடிய.! புதிய எஞ்சின் புதிய ஃபிரேமுடன் வரவிருக்கும் இளசுகளின் ப்ரியமான பஜாஜ் பல்சர் 150
Dhanush: உறுப்பினர் சேர்க்கையைத் தீவிரப்படுத்தும் தனுஷ்.. உன்னிப்பாக கவனிக்கும் விஜய்! அனல்பறக்கும் தமிழக அரசியல்!
Dhanush: உறுப்பினர் சேர்க்கையைத் தீவிரப்படுத்தும் தனுஷ்.. உன்னிப்பாக கவனிக்கும் விஜய்! அனல்பறக்கும் தமிழக அரசியல்!
EV Subsidy: அப்படி போடு.! மின்சார வாகனங்களுக்கு ரூ.1,000 கோடி தனி மானியம் ஒதுக்கிய மத்திய அரசு; எப்படி பெறுவது.?
அப்படி போடு.! மின்சார வாகனங்களுக்கு ரூ.1,000 கோடி தனி மானியம் ஒதுக்கிய மத்திய அரசு; எப்படி பெறுவது.?
Embed widget