மேலும் அறிய

இன்னும் உயிர்ப்புடன்தான் உள்ளது மனிதாபிமானம்... கோழிக்கழிவுகளுக்கு மத்தியில் கிடந்த முதியவரை மீட்ட செங்கிப்பட்டி போலீசார்

போலீசார் பொதுமக்களின் நண்பன் என்பதை உணர்த்தும் விதமாகவும் நடந்து கொண்ட செங்கிப்பட்டி போலீசாருக்கு பொதுமக்கள் பாராட்டுக்கள் தெரிவித்து வருகின்றனர்.

தஞ்சாவூர்: மனிதாபிமானம் இன்னும் உயிர்ப்புடன் தான் உள்ளது என்பதற்கு உதாரணமாக தஞ்சை மாவட்டம் செங்கிப்பட்டி பகுதியில் பாலத்தின் அடியில் கோழிக்கழிவுகளுக்கு மத்தியில் மிகவும் மோசமான நிலையில் கிடந்த முதியவரை போலீசார் மீட்ட சம்பவம் உணர்த்தியுள்ளது.

மனிதாபிமானம் மரித்து போகவில்லை என்பதற்கு உதாரணமாகவும், போலீசார் மக்களின் நண்பர்கள் என்பதை உணர்த்தும் விதமாகவும் தஞ்சாவூர் மாவட்டம் செங்கிப்பட்டியில்தான் இந்த சம்பவம் நடந்துள்ளது. மிகவும் மோசமான நிலையில் கோழிக்கழிவுகள் மற்றும் குப்பைகளுக்கு மத்தியில் கிடந்த 70 வயது முதியவரை போலீசார் மீட்டு முதலுதவி அளித்து மருத்துவமனையில் சேர்த்த சம்பவம் பெரும் பாராட்டுக்களை பெற்று வருகிறது.

தஞ்சாவூர் மாவட்டம் செங்கிப்பட்டியில் தனியார் கம்பெனி அருகே பாலம் ஒன்று உள்ளது. அதன் அடியில் 70 வயது மதிக்கத்தக்க முதியவர் ஒருவர் ஆதரவின்றி மிகவும் மோசமான நிலையில் கோழி கழிவுகள் கொட்டப்பட்ட இடத்தில் அனாதரவாக கிடந்துள்ளார். இதை அவ்வழியே சென்றவர்கள் பார்த்தார்களோ, பார்க்கவில்லையோ தெரியவில்லை.

இன்னும் உயிர்ப்புடன்தான் உள்ளது மனிதாபிமானம்... கோழிக்கழிவுகளுக்கு மத்தியில் கிடந்த முதியவரை மீட்ட செங்கிப்பட்டி போலீசார்

அந்த வழியாக ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்த செங்கிப்பட்டி ஏட்டு ராஜகோபால் மற்றும் போலீசார் சிவலிங்கம், மோகன்ராஜ் ஆகியோர் பார்வையில் அந்த முதியவர் தென்பட்டுள்ளார். அவ்வளவுதான் அதிர்ச்சிக்குள்ளான போலீசார் மூவரும் எதைப்பற்றியும் யோசிக்காமல் சட்டென்று அந்த கழிவுகள் கிடந்த இடத்திற்கு விரைந்து சென்றனர்.

தொடர்ந்து கோழிக்கழிவுகளில் இருந்து அந்த முதியவரை மீட்டனர். அவர் யார்? எந்த ஊர் என்று எதுவும் தெரியவில்லை. இருப்பினும் அவரை அப்படியே விட்டுச்செல்லாமல் செங்கிப்பட்டி ஏட்டு ராஜகோபால் மற்றும் போலீசார் சிவலிங்கம், மோகன்ராஜ் மூவரும் அந்த முதியவரை குளிப்பாட்டி உள்ளனர். பின்னர் அவர் அணிந்திருந்த பழைய ஆடை நீக்கிவிட்டு வேறு ஆடை அணிவித்தனர். மேலும் அவருக்கு தேவையான முதலுதவி சிகிச்சைகளை அளித்தனர். பசி மயக்கத்தில் அந்த முதியவர் இருப்பதை உணர்ந்து உடனடியாக அவருக்கு உணவுகள் வாங்கி வந்து வழங்கி உள்ளனர்.

இதையடுத்து 108 ஆம்புலன்ஸ்க்கும் தகவல் அளித்து மேல் சிகிச்சைக்காக தஞ்சை மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மிகுந்த வீச்சம் அடித்த கோழிக்கழிவு குப்பைகளுக்கு மத்தியில் கிடந்த அந்த முதியவரை உடனடியாக மீட்ட செங்கிப்பட்டி போலீசார் முதலுதவி அளித்த வீடியோ சமூக வலைதளத்தில் வெகு வேகமாக பரவி வருகிறது.  மனிதாபிமானம் இன்னும் செத்துப் போகவில்லை. இன்னும் உயிர்ப்புடன்தான் உள்ளது என்பதற்கு சாட்சியாகவும், போலீசார் பொதுமக்களின் நண்பன் என்பதை உணர்த்தும் விதமாகவும் நடந்து கொண்ட செங்கிப்பட்டி போலீசாருக்கு பொதுமக்கள் பாராட்டுக்கள் தெரிவித்து வருகின்றனர்.

இன்னும் உயிர்ப்புடன்தான் உள்ளது மனிதாபிமானம்... கோழிக்கழிவுகளுக்கு மத்தியில் கிடந்த முதியவரை மீட்ட செங்கிப்பட்டி போலீசார்

இதுகுறித்து சமூக ஆர்வலர்கள் தரப்பில் தெரிவிக்கையில், “முதியவரின் நிலையை அறிந்து உடனடியாக தாங்களே களத்தில் இறங்கி அந்த குப்பைகளை ஒதுக்கி அந்த முதியவரை மீட்டு குளிக்க செய்த போலீசாருக்கு ராயல் சல்யூட்தான் வைக்க வேண்டும். மேலும் அந்த முதியவருக்கு உணவு வாங்கி தந்து மருத்துவமனையில் சேர்க்க தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் எடுத்த செங்கிப்பட்டி போலீசார் மனிதாபிமானத்தில் உயர்ந்து நின்று விட்டனர். அவர்களின் இந்த செயல் பொதுமக்கள் மத்தியில்  வெகுவாக பேசப்பட்டு வருகிறது. பெற்றவர்களை அனாதரவாக விட்டு செல்லும் வாரிசுகள் மத்தியில் யார் என்றே தெரியாமல் இருந்தாலும் சக மனிதனாக இருந்து முதியவரை மீட்ட போலீசாருக்கு பாராட்டுக்கள் தெரிவிப்பதும், நன்றி கூறுவதும் நமது கடமையாகும்” என்றனர்.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

நீலகிரி மாவட்டத்திற்கு சுற்றுலா பயணிகள் வரவேண்டாம் - ஆட்சியர் அறிவுறுத்தல்..
நீலகிரி மாவட்டத்திற்கு சுற்றுலா பயணிகள் வரவேண்டாம் - ஆட்சியர் அறிவுறுத்தல்..
Breaking News LIVE: சீர்காழியில் தெருநாய்கள் கடித்ததில் 2 சிறுவர்கள் காயம்
Breaking News LIVE: சீர்காழியில் தெருநாய்கள் கடித்ததில் 2 சிறுவர்கள் காயம்
Crime: வளர்ப்பு நாய் மற்றும் உரிமையாளரை கடுமையாக தாக்கிய 5 பேர்.. இணையத்தில் வைரலாகும் வீடியோ..
வளர்ப்பு நாய் மற்றும் உரிமையாளரை கடுமையாக தாக்கிய 5 பேர்.. இணையத்தில் வைரலாகும் வீடியோ..
பொதுத் தேர்வுகளில் அதிக மதிப்பெண் பெற்ற பள்ளி ஆசிரியர்களுக்கு பாராட்டு விழா-அரசுக்கு ஆசிரியர்கள் சங்கம் நன்றி
பொதுத் தேர்வுகளில் அதிக மதிப்பெண் பெற்ற பள்ளி ஆசிரியர்களுக்கு பாராட்டு விழா-அரசுக்கு ஆசிரியர்கள் சங்கம் நன்றி
Advertisement
Advertisement
Advertisement
for smartphones
and tablets

வீடியோ

Jharkhand Minister arrest : எதிர்க்கட்சிகளுக்கு நெருக்கடி காங்கிரஸ் அமைச்சர் கைது அதிரடி காட்டும் EDModi on muslim fact check  : பொய் சொன்னாரா மோடி?ஆதாரம் இதோ!முஸ்லீம் குறித்து சர்ச்சை கருத்துDhoni Last Match IPL 2024  : ”தோனி தரிசனம் இருக்கு கவலை படாதீங்க தல FANS” Hussey கொடுத்த அப்டேட்Ilayaraja : ’கடந்த ஒரு மாசமா..என்னை பற்றிய விமர்சனம்’’இளையராஜா ஓபன் டாக்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
நீலகிரி மாவட்டத்திற்கு சுற்றுலா பயணிகள் வரவேண்டாம் - ஆட்சியர் அறிவுறுத்தல்..
நீலகிரி மாவட்டத்திற்கு சுற்றுலா பயணிகள் வரவேண்டாம் - ஆட்சியர் அறிவுறுத்தல்..
Breaking News LIVE: சீர்காழியில் தெருநாய்கள் கடித்ததில் 2 சிறுவர்கள் காயம்
Breaking News LIVE: சீர்காழியில் தெருநாய்கள் கடித்ததில் 2 சிறுவர்கள் காயம்
Crime: வளர்ப்பு நாய் மற்றும் உரிமையாளரை கடுமையாக தாக்கிய 5 பேர்.. இணையத்தில் வைரலாகும் வீடியோ..
வளர்ப்பு நாய் மற்றும் உரிமையாளரை கடுமையாக தாக்கிய 5 பேர்.. இணையத்தில் வைரலாகும் வீடியோ..
பொதுத் தேர்வுகளில் அதிக மதிப்பெண் பெற்ற பள்ளி ஆசிரியர்களுக்கு பாராட்டு விழா-அரசுக்கு ஆசிரியர்கள் சங்கம் நன்றி
பொதுத் தேர்வுகளில் அதிக மதிப்பெண் பெற்ற பள்ளி ஆசிரியர்களுக்கு பாராட்டு விழா-அரசுக்கு ஆசிரியர்கள் சங்கம் நன்றி
LSG IPL 2024: லக்னோ அணி பிளே-ஆஃப் செல்ல வாய்ப்பு இருக்கா? நிகழ வேண்டிய பிரமாண்ட மேஜிக் என்ன தெரியுமா?
LSG IPL 2024: லக்னோ அணி பிளே-ஆஃப் செல்ல வாய்ப்பு இருக்கா? நிகழ வேண்டிய பிரமாண்ட மேஜிக் என்ன தெரியுமா?
Vaaname Ellai: வானமே எல்லை: பொறியியல் படிப்பில் கணினி அறிவியல் வேஸ்ட்; ஏஐ பெஸ்ட்டா?- வழிகாட்டல்
Vaaname Ellai: வானமே எல்லை: பொறியியல் படிப்பில் கணினி அறிவியல் வேஸ்ட்; ஏஐ பெஸ்ட்டா?- வழிகாட்டல்
பணியிடை நீக்கப்பட வேண்டிய பெரியார் பல்கலை. பதிவாளருக்கு ஓய்வூதியமா?- துணைவேந்தரை உடனே நீக்கக் கோரிக்கை!
பணியிடை நீக்கப்பட வேண்டிய பெரியார் பல்கலை. பதிவாளருக்கு ஓய்வூதியமா?- துணைவேந்தரை உடனே நீக்கக் கோரிக்கை!
PM Modi: ”காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால், ராமர் கோயிலுக்குள் புல்டோசர் செல்லும்” - பிரதமர் மோடி எச்சரிக்கை
PM Modi: ”காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால், ராமர் கோயிலுக்குள் புல்டோசர் செல்லும்” - பிரதமர் மோடி எச்சரிக்கை
Embed widget