மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி நகராட்சியில் சார்பில் மழைநீர் வடிகால் வாய்க்காலில் சீரமைப்பு பணிகள் தற்போது நடைபெற்று வருகிறது. மழைகாலங்களில் வடிகால் வாய்க்காலாகவும், மற்ற நேரங்களில் நகரின் கழிவு வாய்க்காலாகவும் இது இருந்து வருகிறது. இந்நிலையில் இந்த வாய்க்காலில் தற்போது சிமெண்ட் ரிவிப்மெண்ட் கட்டமைப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு பணிகள் நடைபெறுகிறது. 




இதனால் நகரின் கழிவுநீர்கள் செல்லும் பாதைகள் அடைக்கப்பட்டுள்ளது. பாதைகள் அடைக்கப்பட்டுள்ளதால் சீர்காழி - திருமுல்லைவாசல் பிரதான சாலையில் சபாநாயக முதலியார் இந்து தொடக்கப்பள்ளி அருகில் சாக்கடை கழிவுநீர் வழிந்து சாலையில் குளம் போல தேங்கியுள்ளது. மேலும் அப்பள்ளியின் ஒன்று முதல் ஐந்தாம் வகுப்பு வரை பயிலும் சின்ன சிறு பள்ளி குழந்தைகளுக்கு இதனால் தொற்று நோய்கள் ஏற்படும் வாய்ப்புகள் அதிகம் நிலவி வருகிறது.


U19 Womens Worldcup: உலகக்கோப்பை இறுதிப்போட்டி: சிங்கப்பெண்களை நேரில் ஊக்கப்படுத்திய தங்கமகன் நீரஜ் சோப்ரா...!




கழிவுநீர் வாய்க்காலில் கட்டமைப்பு பணி நடைபெற்று நிலையில், கழிவுநீரை முறையாக கழிவுநீர் வண்டி மூலம் அப்புறப்பட்டுத்தமால், சாலையில் ஓடுவதால் பள்ளி மாணவர்கள், மற்றும் பொதுமக்கள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர்.  மேலும் அதில் வாகன ஓட்டிகள் மீகுந்த சிரமத்துடன் செல்வதால் கழிவுநீர் பல இடங்களுக்கு தள்ளப்பட்டு பெரும் சுகாதார தொற்று ஏற்படும் அபாயம் நிலவி வருகிறது. இதனை உடனடியாக சீர்காழி நகராட்சி நிர்வாகம் கவனத்தில் கொண்டு கழிவுநீர் வாகனம் மூலம் கழிவுநீரை அப்புறப்படுத்த சுகாதார சீர்கேட்டை தடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


Cyber Crime: மக்களே உஷார்..! புதுப்புது யுக்தியுடன் உலா வரும் சைபர் திருடர்கள்.. தப்பிப்பது எப்படி?




மேலும், வடிகால் வாய்க்கால்கள் செல்லும் பகுதியில் திமுக பிரமுகரின் வீடு அமைந்துள்ளதால்  அவர் வீட்டின் முன் வடிகாலை  புதுப்பித்து கட்ட அவர் எதிர்ப்பு தெரிவிப்பதாகவும், சீர்காழி நகர் மன்ற தலைவரும் ஆளும் கட்சியை சேர்ந்தவர் என்பதால் திமுக பிரமுகருக்கு ஆதரவாக செயல்பட்டு, சரியான முறையில் பணிகளை மேற்கொள்ளலாம் இழுபறி நீடிப்பதாகவும், இதனால் கடந்த ஒருவார காலமாக இந்த கழிவுநீர் சாலையில் ஓடுவதை சகித்துக்கொண்டு செல்வதாக அப்பகுதி மக்கள் வேதனை தெரிவிக்கின்றனர்.


PMK: மீண்டும் வன்னியர் சங்க மாநாடு..! அன்புமணியின் காஞ்சி சைலன்ட் விசிட்..! என்ன செய்யப்போகிறது பா.ம.க. ?




அதுமட்டுமின்றி சீர்காழி உள்ள 24 வார்டுகளிலும் முறையாக குப்பைகள் அல்லப்படாமல் பல இடங்களில் குவிந்து வீதிகளில் சிதறி கிடக்கின்றன. உள்ளாட்சி தேர்தலுக்கு முன்பு நகர மண்ட தலைவர் இல்லாத போது சீர்காழி நகராட்சி ஆணையால் நிர்வாகத்தால் சிறப்பாக செயல்பட்டது என்றும், தற்போது மக்கள் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகள் இருந்தும், சீர்காழி சீரழிந்து சுகாதார கேடின் உச்சத்தில் உள்ளது என வருகின்றனர்.


மேலும் பல சுவாரஸ்யமான செய்திகளை காண :


Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் ABP நாடு செய்திகளை உடனுக்குடன் பெற