மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அடுத்த நெப்பத்தூர் கிராமத்தில் கடந்த மாதம் 20 -ஆம் தேதி ஞானாம்பாள் என்ற மூதாட்டி உயிரிழந்தார். இவரின் சடலத்தை எடுத்து செல்வதற்கு அவர்கள் வசிக்கும் பகுதியில் இருந்து முறையான பாதை இல்லை என ஊர் மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனை அடுத்து சீர்காழி கோட்டாச்சியர் அர்ச்சனா தலைமையில் சீர்காழி துணை காவல் கண்காணிப்பாளர் லாமேக் முன்னிலையில் பேச்சுவார்த்தை நடைபெற்றது. தொடர்ந்து, தற்காலிகமாக தனியாருக்கு சொந்தமான இடத்தில் வழி அமைத்து இறுதி சடங்கு நடைபெற்றது. 




இந்நிலையில், நிரந்தர தீர்வு காணும் வகையில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவின் பேரில் நெப்பத்தூர் கிராம மக்களின் நீண்ட நாள் கோரிக்கையை  மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் லலிதா இன்று நேரில் சென்று ஆய்வு செய்தார். மேலும் அவர் கூறுகையில், இந்த பிரச்சினை தொடர்பான உடனடி தீர்வு காண வேண்டுமென முதல்வர் கூறியதை அடுத்து நான் இங்கு வந்துள்ளேன் என்றும், தங்களது கோரிக்கை எதுவாக இருந்தாலும் முதல்வரிடம் தெரிவித்து


Erode By Election: பா.ஜ.க.வுக்கு கல்தாவா..? ஈரோடு கிழக்கில் அ.தி.மு.க. தனித்து போட்டி - செங்கோட்டையன் பேட்டியால் பரபரப்பு..!




இந்த கிராமங்களுக்கு தேவையான சாலை வசதி, குடிநீர், மின்சார வசதி உள்ளிட்ட அடிப்படைத் தேவைகளை பூர்த்தி செய்வதாக கிராம மக்களிடம் மாவட்ட ஆட்சியர் உறுதி அளித்தார். ஆய்வின்போது சீர்காழி கோட்டாட்சியர் அர்ச்சனா , ஒன்றிய பெருந்தலைவர் கமலஜோதி தேவேந்திரன் மற்றும்  துறை சார்ந்த அதிகாரிகள் பலர் உடனிருந்தனர்.