தமிழ்நாடு முழுவதும் இன்று போகி பண்டிகை வெகு விமர்சையாக கொண்டாடப்பட்டு வருகிறது. பழையன கழிதலும், புதியன புகுதலும் என தமிழ் ஆண்டின் மார்கழி மாதத்தின் கடைசி நாளன்று போகி பண்டிகை கொண்டாடப்படுகிறது. இது பழையன கழித்து, புதியன புகுந்திடும் நாளாகும். போகி அன்று வீட்டில் தேங்கியிருக்கும் தேவையற்ற பொருட்கள் அப்புறப்படுத்தப்பட்டு, வீடு சுத்தமாக்கப்படும். வீடு மட்டுமல்ல, மனதில் இருக்கும் தீய எண்ணங்களும், தவறான எண்ணங்களும் நீக்கப்பட வேண்டும் என்பது இதற்குள் ஒளிந்துள்ள தத்துவமாகும்.
பொங்கலுக்காக வீட்டை சுத்தம் செய்யும்போது, வீட்டிலிருக்கும் தேவையற்ற பொருட்களை தீயிட்டுக் கொளுத்துவது காலம் காலமாக இருந்து வரும் பழக்கம். இதையடுத்து மயிலாடுதுறை மாவட்டத்தில் இன்று அதிகாலை காலை முதலே போகிப் பண்டிகை விமர்சையாகக் கொண்டாடப்பட்டு வருகிறது. பயனற்ற பொருட்களை எரித்து போகியை கொண்டாடினர். அப்போது மக்கள் பழைய பொருட்கள், பாய், பழைய துணிகள் போன்றவைகளை எரித்து, போகி பண்டிகையை கொண்டாடினர்.
இதனால் பல பகுதிகளில் மார்கழி பனியை விரட்டும் அளவுக்கு புகை மூட்டம் காணப்பட்டது. மயிலாடுதுறை மாவட்டம், மயிலாடுதுறை, சீர்காழி, கொள்ளிடம், வைத்தீஸ்வரன் கோயில், பூம்புகார் உள்ளிட்ட மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் கடந்த சில நாட்களாக பனிபொழிவு அதிகமாக காணப்பட்டும், பகல் வேளையில் கடும் வெய்யில் வாட்டி வந்து, இந்நிலையில் இன்று போகி பண்டிகையை அடுத்து எரியுட்டப்பட்ட பழைய பொருட்களால் ஏற்பட்ட புகை மூட்டத்துடன், பனிமூட்டமும் கலந்து காலை சூரியன் உதித்தும் 8 மணி வரை பனியின் தாக்கம் குறையாமல் இருந்தது.
இதன் காரணமாக சாலையில் பொதுமக்கள் நடமாட்டம் குறைந்தே காணப்பட்டது. எதிரே வரும் வாகனங்கள் கூட தெரியாத சூழல் நிலவியதால் இருசக்கர வாகனம் முதல் அனைத்து வாகனங்கள் முகப்பு விளக்கை எரியவிட்டபடியே செல்கிறனர். இதனால் வாகன ஓட்டிகளும், பொதுமக்களும் கடும் சிரமத்திற்கு ஆளாகினர்.
பிரேக் அப் காதலருக்கு கட்டம் கட்டிய காதலி! 30 போலி இன்ஸ்டா கணக்குகள் மூலம் மாஸ்டர் ப்ளான்!