நடிகை சமந்தாவுடனான மணமுறிவுக் குறித்து முதன்முறையாக மௌனம் கலைத்தார் நடிகர் நாக சைதன்யா


தமிழ், தெலுங்கு திரையுலகில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் சமந்தா. இவர் பிரபல தெலுங்கு நடிகரும், நாகார்ஜுனாவின் மகனுமான நாக சைதன்யாவும் 7 ஆண்டுகளாக காதலித்து வந்தார். இவர்களது திருமணம் கடந்த 2017 ஆம் ஆண்டு பிரமாண்டமாக நடைபெற்றது. திருமணத்துக்கு பிறகும் தமிழ், தெலுங்கு என படுபிஸியாக நடித்து வந்த சமந்தா அடுத்தடுத்து வெற்றிப் படங்களையும் கொடுத்தார்.


 






 


சமூக வலைதளங்களில் இருவரும் இணைந்து புகைப்படங்களை வெளியிட்டு வந்தனர். திரையுலகில் மிகவும் அன்னியோன்யமான தம்பதி என பலராலும் பாராட்டப்பட்டனர். 


இதனிடையே சமந்தாவும் நாக சைதன்யாவும் ஒரே நேரத்தில் விவாகரத்து முடிவை தத்தமது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டனர். தங்கள் இன்ஸ்டாகிராம் பதிவில், "நீண்ட ஆலோசனைக்கு பிறகு,  எங்கள் சொந்த பாதையை தொடர நானும், சைதன்யாவும் பிரிகிறோம் என சமந்தா குறிப்பிட்டுள்ளார். மேலும், 10 ஆண்டுகளுக்கும் மேலான நட்பைப் பெற்றிருந்ததில் நாங்கள் அதிர்ஷ்டசாலிகளாக உணர்கிறோம், அது எங்கள் உறவின் முக்கிய அம்சமாக இருந்தது.எப்போதும் எங்களுக்கு இடையே ஒரு சிறப்பு பிணைப்பை வைத்திருக்கும் என நம்புகிறோம்.


மேலும் எங்களது ரசிகர்கள், நலம் விரும்பிகள்,  ஊடகங்கள ஆகியோர் இந்த கடினமான காலத்தில் எங்களுக்கு ஆதரவளிக்குமாறு கேட்டுக்கொள்கிறோம். இதை கடந்து செல்வதற்கான பிரைவசியை அனைவரும் வழங்க வேண்டும்”எனத் தெரிவித்தனர். 


மௌனம் கலைத்த நாக சைதன்யா:


இந்நிலையில், நாக சைதன்யா நடித்துள்ள பங்கராஜூ என்ற திரைப்படம் நாளை திரைக்கு வரயிருக்கிறது. இத்திரைப்படத்தை பிரபலபடுத்தும் விதமாக பல்வேறு முன்னெடுப்புகளை படக்குழு  எடுத்து வருகிறது. அதனொரு பகுதியாக, பங்கராஜூ திரைப்படம் தொடர்பான நேர்காணலில் நாக சைதன்யா கலந்து கொண்டார். அதில், சமந்தவுடனான மணமுறிவுக் குறித்து கேள்விக்குப் பதிலளித்த அவர், " பிரிவு என்பது பரவாயில்லை.  ஏற்றுக் கொள்ளக்கூடியது தான். அவரவர்களின் சொந்த நலனுக்காக எடுக்கப்பட்ட பரஸ்பர முடிவு. சமந்தாவுக்கு மகிழ்ச்சி என்றால், எனக்கும் மகிழ்ச்சியே. அத்தகைய சூழ்நிலையில் விவாகரத்து என்பது சிறந்த முடிவாக இருக்கும்" என்று தெரிவித்தார். 


 






 


முன்னதாக, இவர் அளித்த மற்றொரு பேட்டியில், "ஒரு திரைப்படத்தில் நான் ஒப்பந்தமாகும் முன் நான் அந்த திரைப்படத்தின் என்னுடைய கேரக்டர், கதை ஆகியவை என்னுடைய குடும்ப கெளரவத்திற்கு பாதிப்பு ஏற்படுமா என்பதை யோசித்து தான் நான் ஒப்புக் கொள்வேன். எனக்கே அந்தக் கதையின் மீது முழு திருப்தி இருந்தால் மட்டுமே ஏற்றுக்கொள்வேன்" எனக் கூறியிருந்தார்.    


சமந்தாவைப் பிரிய காரணம் இதுதானோ?- நாகசைதன்யாவின் மனம்திறந்த பேட்டி