1. தூத்துக்குடி மத்தியபாகம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் கடந்த 21.12.2021 அன்று ரூ.21 கோடி மதிப்புடைய 21 கிலோ ஹெராயின் எனும் போதை பொருளை மத்தியபாகம் காவல் நிலைய போலீசார் பறிமுதல் செய்தனர். இது தொடர்பாக 7 பேர் கைது செய்யப்பட்டனர்.
2. நெல்லை நெல்லையப்பர் கோவில் தைப்பூச திருவிழாவின் நான்காவது நாள் நிகழ்ச்சியான திருநெல்வேலி பெயர் காரண திருவிழா வெகு விமர்சியாக நடைபெற்றது. வேதபட்டர் உணர்த்திய நெல்லை மழையிலிருந்து வேலியிட்டு சுவாமி நெல்லையப்பர் காத்த திருவிளையாடல் நிகழ்ச்சி தத்துரூபமாக நடத்தப்பட்டது.
3. நெல்லை சரக புதிய டிஐஜியாக பிரவேஷ்குமார் நேற்று பதவியேற்றுக் கொண்டார் , சட்டம் ஒழுங்கு பிரச்னைகள் , ரவுடிசம் ஒழிப்பு , கஞ்சா விற்பனையில் ஈடுபடும் முக்கிய குற்றவாளிகளை கைது செய்வது ஆகியவற்றிற்கு முக்கியத்துவம் அளித்து நடவடிக்கை எடுக்கப்படும் என அவர் தெரிவித்துள்ளார் .
4. நெல்லையில் பிரபல தனியார் பஸ் நிறுவன அதிபர் மீது 30 கோடி ரூபாய் பண மோசடி புகார்; மாநகர காவல் ஆணையரிடம் கேரளாவை சேர்ந்த பெண்கள் மனு அளித்துள்ள சம்பவத்தால் பரபரப்பு ஏற்பட்டது.
5. மதுரை அருள்மிகு முருகன் திருக்கோயில் சோலைமலை மண்டபம் ஆறாவது படைவீடு அழகர்கோயில். தைப்பூச பெருவிழா-2022 நடைபெற்று வரும் திருவிழாவில் நான்காவது நாளான நேற்று காலை சுவாமி முருகப்பெருமான் வள்ளி தேவசேனா சமேத சிம்மாசனத்திலும், மாலை ஆட்டுகிடாய் வாகனத்திலும் எழுந்தருளினார்.
6. விருதுநகர் மாவட்டம், பூவந்தி கிராமத்தில் அமைந்துள்ள காவல்துறையினர் துப்பாக்கிச்சூடு பயிற்சி மையத்தை சுற்றி சுற்றுச்சுவர் அமைக்கக் கோரிய வழக்கு. தமிழக உள்துறை செயலர், தமிழக காவல்துறை தலைவர், பதிலளிக்க உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவு.
7. சிறுமி பாலியல் பலாத்கார கொலை வழக்கில் வாலிபருக்கு விதிக்கப்பட்ட தூக்கு தண்டனையை உறுதி செய்து உயர் நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவு. புதுக்கோட்டை மாவட்டம் ஏம்பல் கிராமத்தை சேர்ந்த சாமிவேல் என்கிற ராஜா (வயது 26) என்பவர் கடந்த ஆண்டு ஏம்பல் பகுதியில் சிறுமி ஒருவரை பாலியல் பலாத்காரம் செய்தது தொடர்பான வழக்கு.
8. ராமநாதபுரம் மாவட்டம் மண்டபத்தில் இயங்கி வரும் தனியார் மீன் பதப்படுத்தும் நிறுவனத்தில் பணிபுரிந்த 16 தொழிலாளர்களுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டதால் மீன் ஏற்றுமதி நிறுவனத்தை மூட உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளது.
9. ராமநாதபுரத்தில் வீடு புகுந்து பெண்ணிடம் கத்தியை காட்டி மிரட்டி 9 பவுன் தாலி சங்கிலியை பறித்து சென்ற சம்பவத்தில் மதுரையை சேர்ந்த கட்டிட தொழிலாளியை போலீசார் கைது செய்தனர்.
10. மதுரை அவனியாபுரம் ஜல்லிக்கட்டு நடைபெறுவதை முன்னிட்டு முன்னேற்பாடு பணிகளை வணிகவரி மற்றும் பதிவுத்துறை அமைச்சர் அவர்கள், மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள், மாநகராட்சி ஆணையாளர் அவர்கள், மாநகர காவல் துணை ஆணையர் (சட்டம் ஒழுங்கு) அவர்கள் ஆகியோர் பார்வையிட்டார்கள்
இதை படிக்க மிஸ் பண்ணாதீங்க பாஸ் - Sivaganga | ஆண்கள் காது வளர்க்கணும்... ஏன்னா வரலாறு அப்படி.! சிவகங்கை செகுட்டை அய்யனாரும் நம்பிக்கையும்!