சமூகவலைதளங்களில் பொதுவாக விலங்குகள் தொடர்பான வீடியோ என்றால் அது நிச்சயம் வைரல் தான். அதிலும் குறிப்பாக அது பாம்புகள் தொடர்பான வீடியோ என்றால் அதையும் பலரும் பார்த்து மகிழ்வார்கள். அந்தவகையில் தற்போது பெரிய மலைப் பாம்பு ஒன்று சாலையை கடக்கும் வீடியோ ஒன்று வேகமாக வைரலாகி வருகிறது. 


 


இந்த சம்பவம் தொடர்பாக ஒருவர் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் வீடியோ ஒன்றை பதிவிட்டுள்ளார். அதன்படி கேரள மாநிலம் கொச்சியில் அமைந்துள்ள விமான நிலையத்திற்கு செல்லும் சாலையில் இந்தச் சம்பவம் நடைபெற்றுள்ளது. கடந்த ஞாயிற்றுக்கிழமை இரவில் இந்த சம்பவம் நடைபெற்றுள்ளதாக கூறப்படுகிறது. இந்த வீடியோவில் இருப்பது இந்தியன் ராக் பைதான் வகை பாம்பு என்று கண்டறியப்பட்டுள்ளது. 


 






இந்த பாம்பு அந்த சாலையை கடக்க சுமார் 4- 5நிமிடங்கள் எடுத்து கொண்டதால் சாலையில் இரு பக்கமும் போக்குவரத்து சில நேரம் தடைப்பட்டது. பொதுமக்கள் தங்களுடைய வாகனத்தை நிறுத்தி இந்த பாம்பு சாலையை கடக்கும் வரை காத்திருந்தனர். அதன்பின்னர் சாலையில் மீண்டும் போக்குவரத்து சீரானது. கொச்சியில் கடந்த சில நாட்களாக 3 இடங்களில் மலைப்பாம்புகள் புகுந்ததாக வனத்துறைக்கு தகவல் கிடைத்துள்ளது. அந்த இடங்களுக்கு சென்று வனத்துறை அதிகாரிகள் மலைப்பாம்புகளை மீட்டுள்ளனர். 


இந்த மலைப்பாம்பு சாலையை கடக்கும் வீடியோ தொடர்பாக பலரும் தங்களுடைய கருத்துகளை ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டு வருகின்றனர். இது மாதிரி கடந்த ஆண்டு சிங்கப்பூரில் சாலையை ஒரு பெரிய மலைப்பாம்பு ஒன்று கடந்தது. அப்போது பேருந்து ஒன்று சாலையில் நின்று கொண்டிருந்தது. அந்த வீடியோவும் அப்போது வேகமாக வைராலானது. அதேபோல் தற்போது இந்த வீடியோவும் வைரலாகி வருகிறது. 


 







மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூட்யூபில் வீடியோக்களை காண



மேலும் படிக்க: விரைவில் செய்திகளுக்கு டி.ஆர்.பி. ரேட்டிங்...! குஷியில் செய்தி சேனல்கள்...!