மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வரதட்சணை கொடுப்பதும் குற்றம், வாங்குவது குற்றம் என ஆட்சியரஷ் மகாபாரதியுடன் அரசு அதிகாரிகள் உறுதிமொழி ஏற்றுக்கொண்டனர்.  திருமணத்தின் போது மணமகள் மணமகனுக்கு சீர்வரிசை, வரதட்சணை என பல லட்சங்களிலும், பல கோடிகளிலும், தங்க நகைகள், வெள்ளி பொருட்கள், கார், பைக், வீடு, இடம் என வழங்குவதும், அதனை கட்டாயப்படுத்தி திருமணத்திற்கு பிறகும் வாங்குவதும், வரதட்சணை கொடுக்கவோ அல்லது காலதாமதம் ஆகும் போது மனைவியினை கணவர் மற்றும் அவரது குடும்பத்தினர் பல்வேறு வகைகளில் கொடுமை படுத்தி சித்திரவதை செய்வதும், ஒரு சில கொலை செய்யும் அளவிற்கு செல்கின்றனர்.


Bigg Boss 7 Tamil: ’கையெழுத்து போட்டுட்டுதானே வந்துருக்கீங்க..அப்புறம் என்ன?’ - போட்டியாளர்களை திட்டிய கமல்ஹாசன்..




மேலும் சிலர் மனைவியினை தற்கொலைக்கு தூண்டி அவர்களை உயிரிழப்புக்கும் காரணமாக இருந்து வருகின்றனர். வரதட்சணையின் தாக்கம் நாடுமுழுவதும் பரவலாக உள்ளது. அதிகம் படித்த கேரள மாநிலத்தில் கூட வரதட்சணை கொடுமை நிலவுகிறது. இதனை தடுக்க அரசு பல்வேறு சட்டங்களை வகுத்திருந்தாலும், வரதட்சணை பெறுவதும், வரதட்சணை கேட்டு சித்திரவதை செய்வதும் குறைந்தபாடில்லை. இந்நிலையில் வரதட்சணை கொடுமையின் தாக்கம் குறித்து அரசு சார்பில் பல்வேறு விழிப்புணர்வுகளை மக்களிடம் ஏற்படுத்தி வருகிறது. அதன் ஒன்றாக மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வரதட்சணை எதிர்ப்பு தின பேரணியை மாவட்ட ஆட்சியர் மகாபாரதி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மீனா ஆகியோர் கூட்டாக இன்று கொடியசைத்து துவக்கி வைத்து, வரதட்சனை கொடுப்பது, வாங்குவது குற்றம் என்று உறுதிமொழி ஏற்றுக்கொண்டனர்.


Vande Bharat Express: அதிவேகமாக ஓடிகொண்டிருந்த ஒடிசா வந்தே பாரத் ரயில்.. கற்களை வீசி தாக்குதல் நடத்திய மர்ம கும்பல்..!




மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை சார்பில் வரதட்சணை எதிர்ப்பு தின விழிப்புணர்வு பேரணி இன்று நடைபெற்றது. இதில் மாவட்ட ஆட்சியர் மகாபாரதி மற்றும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மீனா பங்கேற்று கொடியசைத்து பேரணியை துவக்கி வைத்தனர். முன்னதாக வரதட்சணைக்கு எதிராக  வரதட்சணை வாங்குவதும், கொடுப்பதும் குற்றம் என்று மாணவ மாணவிகள் மற்றும் மயிலாடுதுறை வருவாய் கோட்டாட்சியர் யுரேகா, மாவட்ட சமூக நல அலுவலர் சுகிர்தா தேவி உள்ளிட்ட அரசுத் துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர் உறுதிமொழி ஏற்றுக் கொண்டனர். 


Uttarkashi Tunnel Collapse: 41 தொழிலாளர்களை மீட்க 6 திட்டங்கள்.. நிபுணர்களின் கணிப்புகளில் எது சாத்தியமாகும்..?




பின்னர் கையில் பதாகைகளை ஏந்தியபடி முக்கிய வீதிகள் வழியாக பேரணி சென்றது. இதனிடையே நிகழ்ச்சி தொடங்குவதற்கு முன்பு மாவட்ட ஆட்சியர் மகாபாரதி மாணவர்களுடன் நகைச்சுவையாக சிறிது நேரம் கலந்துரையாடினார். அப்போது மழை வந்தால் விடுமுறை விடலாமா? அல்லது வேண்டாமா? என மாணவர்களிடம் புன்னகை முகத்துடன் கேள்வியை எழுப்பினார். மாணவர்கள் விடுமுறை விட வேண்டும் என்று கூறியதற்கு நீங்கள் டிவி பார்ப்பதற்கு விடுமுறை கேட்கிறீர்களா? என்று புன்னகையுடன் பதில் அளித்தார்.


PM Modi in Tirupati: நான்காவது முறையாக திருப்பதிக்கு வருகை! ஏழுமலையானை தரிசித்த பிரதமர் நரேந்திர மோடி