மேலும் அறிய

தருமபுர ஆதீன கலைக்கல்லூரி பவளவிழாவில் முதல்வர் பங்கேற்பு; விழா ஏற்பாடுகள் தீவிரம்

மயிலாடுதுறையில் வருகின்ற 24 -ம் தேதி தருமபுர ஆதீன கலைக்கல்லூரி பவளவிழா நிறைவு விழாவில் முதலமைச்சர் ஸ்டாலின் பங்கேற்க உள்ளதால் விழா ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.

மயிலாடுதுறையில் சைவத்தையும் தமிழையும் பரப்பும் தொன்மை வாய்ந்த தருமபுரம் ஆதீன திருமடம் அமைந்துள்ளது. இவ்வாதீனத்தால் 1946 -ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட கலைக்கல்லூரி தருமபுரம் ஆதீனத்திற்கு எதிரே செயல்பட்டு வருகிறது. இக்கல்லூரி தமிழ் கல்லூரியாக தொடங்கப்பட்டு 1988 -ஆம் ஆண்டு கலைக்கல்லூரியாக வளர்ச்சி பெற்றது.  அதனைத் தொடர்ந்து தற்போது கல்லூரியின் 75-ம் ஆண்டு பவள விழா ஆண்டாக கொண்டாடப்பட்டு வருகிறது. பவளவிழாவை முன்னிட்டு கல்லூரி வளாகத்தில் 3000 பேர் அமரும் வகையில் 80 அடி அகலமும் 220 அடி நீளமும்  கொண்ட பிரமாண்ட கலையரங்கம் கட்டப்பட்டு  10 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் 12 அடி நீளம் கொண்ட 5 ராட்சச மின்விசிறிகள் அமைக்கப்பட்டுள்ளது.

தருமபுர ஆதீன கலைக்கல்லூரி பவளவிழாவில் முதல்வர் பங்கேற்பு; விழா ஏற்பாடுகள் தீவிரம்

இந்நிலையில் இந்த கலையரங்கத்தை தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வருகின்ற 24 -ம் தேதி (நாளை) மாலை நேரில் திறந்து வைக்க உள்ளார் என தருமபுரம் ஆதீன 27 -வது மடாதிபதி ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பிரம்மச்சாரிய சுவாமிகள் தெரிவித்துள்ளார். மேலும், தருமையாதீன தொலைக்காட்சி, வானொளி பதிவகத்தை திறந்து வைத்தும் பவளவிழா மலர் மற்றும் திருக்குறள் ஆதீன உரை விளக்க நூல்களை வெளியிட்டு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சிறப்புரையாற்ற உள்ளார்.  

Asian Champions Trophy Ranchi 2023: ராஞ்சியில் முதல்முறை.. பெண்களுக்கான ஆசிய சாம்பியன்ஸ் டிராபி.. அக்டோபர் மாதம் தொடக்கம்!

தருமபுர ஆதீன கலைக்கல்லூரி பவளவிழாவில் முதல்வர் பங்கேற்பு; விழா ஏற்பாடுகள் தீவிரம்

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வருகை தர உள்ளதால் விழா ஏற்பாடுகள் குறித்து சுற்றுசூழல் மற்றும் காலநிலை மாற்றத்துறை அமைச்சர் மெய்யநாதன் தருமபுரம் ஆதீனம் கல்லூரியில் ஆய்வு செய்தார். தருமபுரம் ஆதீன கர்த்தரை சந்தித்து விழா முன்னேற்பாடுகள் குறித்து கலந்தாலோசனை செய்தார். அப்போது மயிலாடுதுறை திமுக மாவட்ட செயலாளரும், பூம்புகார் சட்டமன்ற உறுப்பினருமான  நிவேதா எம்.முருகன், சீர்காழி சட்டமன்ற உறுப்பினர் பன்னீர்செல்வம் மற்றும் திமுக நிர்வாகிகள் பலர் உடனிருந்தனர்.

Fisherman Attack: அதிர்ச்சி..! 2-வது நாளாக மீண்டும் தமிழக மீனவர்களை தாக்கிய இலங்கை கடற்கொள்ளையர்கள்.. தீர்வுதான் என்ன?

தருமபுர ஆதீன கலைக்கல்லூரி பவளவிழாவில் முதல்வர் பங்கேற்பு; விழா ஏற்பாடுகள் தீவிரம்

25 வது ஆதீனம் காலத்தில் தமிழ் கல்லூரியாக தொடங்கப்பட்டு 26வது சன்னிதானம் காலத்தில் கலைக்கல்லூரியாக மாற்றப்பட்டு நடைபெற்று வருகிறது. இந்த கல்லூரியின் வெள்ளிவிழா ஆண்டில் அப்போதைய முதல்வர் கலைஞர் கருணாநிதி பங்கேற்றார். பொன்விழா ஆண்டில் அப்போதைய கல்வித்துறை அமைச்சர் அன்பழகன், கோசிமணி பங்கேற்றனர். தற்போது 75 வது பவளவிழா ஆண்டில் முதலமைச்சர் கலந்து கொள்வது சிறப்புக்குறியது என்றும்,  அனைவரும் இவ்விழாவில் கலந்து கொள்ள வேண்டும் என தருமபுரம் ஆதீனம் 27 ஆவது குரு மகா சன்னிதானம் ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாச்சாரியார் சுவாமிகள் தெரிவித்தார்.

Chennai HighCourt : ‘அதிகாரத்திற்கு வந்தாலே அவ்வளவுதான்’ .. சொத்துக்குவிப்பு வழக்கில் அமைச்சர்கள் விடுதலையை விமர்சித்த நீதிபதி..

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Dhanush :  நடிகர் சங்க கட்டிட பணிகளுக்காக ஒரு கோடி ரூபாய்.. தனுஷ் அதிரடி..
Dhanush : நடிகர் சங்க கட்டிட பணிகளுக்காக ஒரு கோடி ரூபாய்.. தனுஷ் அதிரடி..
Lok Sabha Election 2024 LIVE: ஆந்திராவில் மதியம் 3 மணி வரை 55 சதவீத வாக்குப்பதிவு..!
Lok Sabha Election 2024 LIVE: ஆந்திராவில் மதியம் 3 மணி வரை 55 சதவீத வாக்குப்பதிவு..!
Savukku Sankar: சவுக்கு சங்கரை ஒரு நாள் காவலில் எடுத்து விசாரிக்க நீதிமன்றம் அனுமதி
சவுக்கு சங்கரை ஒரு நாள் காவலில் எடுத்து விசாரிக்க நீதிமன்றம் அனுமதி
CBSE Class 10th Result: சிபிஎஸ்இ 10ஆம் வகுப்புத் தேர்வு முடிவுகளும் வெளியீடு; 93.6% தேர்ச்சி- காண்பது எப்படி?
CBSE Class 10th Result: சிபிஎஸ்இ 10ஆம் வகுப்புத் தேர்வு முடிவுகளும் வெளியீடு; 93.6% தேர்ச்சி- காண்பது எப்படி?
Advertisement
Advertisement
Advertisement
for smartphones
and tablets

வீடியோ

Ramdoss : மோடியின் சர்ச்சை பேச்சு எஸ்கேப்பான ராமதாஸ் முஸ்லீம் குறித்து பேசியது சரியா?Pondichery : பாண்டிச்சேரியில் 1 நாள்...150 ரூபாய் PACKAGE இத்தனை இடங்களா?Felix Gerald Arrest :  கணவரை தேடிய மனைவி போலீஸ் வேனில் Felix திடீர் திருப்பம்KPY Bala :

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Dhanush :  நடிகர் சங்க கட்டிட பணிகளுக்காக ஒரு கோடி ரூபாய்.. தனுஷ் அதிரடி..
Dhanush : நடிகர் சங்க கட்டிட பணிகளுக்காக ஒரு கோடி ரூபாய்.. தனுஷ் அதிரடி..
Lok Sabha Election 2024 LIVE: ஆந்திராவில் மதியம் 3 மணி வரை 55 சதவீத வாக்குப்பதிவு..!
Lok Sabha Election 2024 LIVE: ஆந்திராவில் மதியம் 3 மணி வரை 55 சதவீத வாக்குப்பதிவு..!
Savukku Sankar: சவுக்கு சங்கரை ஒரு நாள் காவலில் எடுத்து விசாரிக்க நீதிமன்றம் அனுமதி
சவுக்கு சங்கரை ஒரு நாள் காவலில் எடுத்து விசாரிக்க நீதிமன்றம் அனுமதி
CBSE Class 10th Result: சிபிஎஸ்இ 10ஆம் வகுப்புத் தேர்வு முடிவுகளும் வெளியீடு; 93.6% தேர்ச்சி- காண்பது எப்படி?
CBSE Class 10th Result: சிபிஎஸ்இ 10ஆம் வகுப்புத் தேர்வு முடிவுகளும் வெளியீடு; 93.6% தேர்ச்சி- காண்பது எப்படி?
Box Office Prediction : இந்த ஆண்டு ரூ.100 கோடி வசூலை எடுக்கப்போகும் முதல் தமிழ் படம் எது?
இந்த ஆண்டு ரூ.100 கோடி வசூலை எடுக்கப்போகும் முதல் தமிழ் படம் எது?
Andhra Assembly Election: பளார்! வரிசையில் நிற்காத எம்.எல்.ஏ.வுக்கு கன்னத்திலே அறை விட்ட வாக்காளர் - நீங்களே பாருங்க
Andhra Assembly Election: பளார்! வரிசையில் நிற்காத எம்.எல்.ஏ.வுக்கு கன்னத்திலே அறை விட்ட வாக்காளர் - நீங்களே பாருங்க
North Korea Rules: ரெட் லிப்ஸ்டிக், நீல கலர் ஜீன்ஸ் போட்டால் வழக்கு - வடகொரியாவில் எதற்கெல்லாம் தடை தெரியுமா?
ரெட் லிப்ஸ்டிக், நீல கலர் ஜீன்ஸ் போட்டால் வழக்கு - வடகொரியாவில் எதற்கெல்லாம் தடை தெரியுமா?
போலீஸ் வீட்டிலேயே கொள்ளை... பொதுமக்களுக்கு எங்கே பாதுகாப்பு இருக்கும்? - ஆர்.பி.உதயகுமார் கேள்வி
போலீஸ் வீட்டிலேயே கொள்ளை... பொதுமக்களுக்கு எங்கே பாதுகாப்பு இருக்கும்? - ஆர்.பி.உதயகுமார் கேள்வி
Embed widget