மேலும் அறிய

மயிலாடுதுறை : புதிதாக அமைந்த திமுக அரசில் நடைமுறைப்படுத்தப்பட்ட மாற்றங்கள் என்ன?

தமிழகத்தில் திமுக தலைமையிலான அரசு அமைந்து இன்றுடன் ஒரு மாத காலம் நிறைவு பெறுகிறது. இந்த சூழலில் தமிழகத்தில் கடைசியாக 38-வது மாவட்டமாக உருவான, மயிலாடுதுறை மாவட்டத்தில் கடந்த ஒரு மாத காலத்தில் புதியதாக நடைமுறைப்படுத்தப்பட்ட அறிவிப்புகளைப் பார்க்கலாம்.

தமிழகத்தின் முதலமைச்சராக மு‌.க.ஸ்டாலின் பதவியேற்ற நாள் முதல் அவருக்கு பெரும் சவாலாக கொரோனா வைரஸ் தொற்றின் இரண்டாம் அலை விஸ்வரூபம் எடுத்து, கோரத்தாண்டவம் ஆடி வருகிறது என்பதுதான். இந்த சூழலில் கொரோனா தொற்று அதிகம் பாதிப்பை ஏற்படுத்தி வரும் 11 மாவட்டங்களில் மயிலாடுதுறையும் அடங்கியுள்ளது. இதனால் மாவட்டத்தின் முக்கிய திட்டங்கள் உருவாக்கம் இன்றி, கொரோனா தொற்றை கட்டுப்படுத்தும் செயல்பாடுகளிலேயே அரசின் அதிக கவனத்தைக் காணமுடிகிறது. மேலும் சென்ற முறை மயிலாடுதுறை மாவட்டத்தின் உள்ள பூம்புகார், மயிலாடுதுறை, சீர்காழி ஆகிய மூன்று சட்டமன்ற தொகுதிகளையும் அதிமுக கைப்பற்றியிருந்த நிலையில் இம்முறை திமுக கூட்டணியில் கைப்பற்றியுள்ளது. பூம்புகார் மற்றும் சீர்காழியை திமுகவும், மயிலாடுதுறையை திமுக கூட்டணியான காங்கிரஸ் கட்சி கைப்பற்றியுள்ளதால் ஆளும் கட்சி ஆளுமை நிறைந்த மாவட்டமாக மயிலாடுதுறை உள்ளது.

மயிலாடுதுறை : புதிதாக அமைந்த திமுக அரசில் நடைமுறைப்படுத்தப்பட்ட மாற்றங்கள் என்ன?

அந்த வகையில் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்ட நோயாளிகளுக்கு ஆக்சிஜன் பற்றாக்குறையை போக்க 6 டன் கொள்ளவு கொண்ட நிரந்தர ஆக்சிஜன் கொள்கலன் மயிலாடுதுறை பெரியார் அரசு மருத்துவமனையில் நிறுவப்பட்டு பயன்பாட்டிற்கு கொண்டு வரப்பட்டுள்ளது. மேலும் சீர்காழி உள்ளிட்ட அரசு மருத்துவமனைகளிலும் கொள்கலன் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது. பல இடங்களில் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை மையங்கள் அதிகப்படுத்தப்பட்டுள்ளது. மேலும் ஆக்சிஜன் செறிவூட்டிகளை தன்னார்வலர்கள், தொண்டு நிறுவனங்களிடமிருந்து பெற நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு பெறபட்டு வருகிறது. முக்கிய முயற்சியாக மத்திய அரசிடமிருந்து மயிலாடுதுறை மாவட்டத்திற்கு மருத்துவ கல்லூரி பெறுவதற்கான நடவடிக்கைகளும் அரசு சார்பில் மேற்கொள்ளப்பட்டுள்ளது. 

மயிலாடுதுறை : புதிதாக அமைந்த திமுக அரசில் நடைமுறைப்படுத்தப்பட்ட மாற்றங்கள் என்ன?

குறிப்பாக வருகின்ற ஜூன் 12-ஆம் தேதி மேட்டூர் அணை காவிரி நீர் டெல்டா மாவட்ட பாசனத்திற்காக திறக்கப்படும் உள்ள நிலையில், மயிலாடுதுறை மாவட்டத்தின் பிரதான தொழிலான விவசாயம் என்பதால் மாவட்டத்தில் முதலமைச்சரின் சிறப்பு தூர்வாரும் திட்டத்தின்கீழ் 23 இடங்களில் 5.45 கோடி ரூபாய் செலவில் தூர்வாரும் பணிகள் ஐஏஎஸ் அதிகாரி கண்காணிப்பில் நடைபெற்று வருகிறது.

மயிலாடுதுறை : புதிதாக அமைந்த திமுக அரசில் நடைமுறைப்படுத்தப்பட்ட மாற்றங்கள் என்ன?

மாற்றங்கள் என்று பார்த்தால், புதியதாக உருவான மயிலாடுதுறை மாவட்டத்தின் முதல் காவல் கண்காணிப்பாளரும், புதிய மாவட்டம் உருவான சில மாதங்களில் சீர்காழியில் நகை வியாபாரியின் மனைவி மற்றும் மகனை கொலை செய்து 12 கிலோ தங்க நகைகளை கொள்ளையடித்து சென்ற வடமாநில கொள்ளை கும்பலை நான்கு மணிநேரத்தில் பிடித்து அந்த கும்பலின் தலைவனை என்கவுண்டர் செய்த ஸ்ரீநாதாவை விழுப்புரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளராக மாற்றம்செய்து. தென்காசி மாவட்ட காவல் கண்காணிப்பாளராக இருந்த சுகுணா சிங்கை மயிலாடுதுறை மாவட்ட காவல் கண்காணிப்பாளராக மாற்றம் செய்யப்பட்டுள்ளார்

தலைப்பு செய்திகள்

ஜெபமாலைபுரம் குப்பைக் கிடங்கில் மீண்டும் விஸ்வரூபம் எடுத்த தீ! நரகமாக மாறிய குடியிருப்பு பகுதிகள்
ஜெபமாலைபுரம் குப்பைக் கிடங்கில் மீண்டும் விஸ்வரூபம் எடுத்த தீ! நரகமாக மாறிய குடியிருப்பு பகுதிகள்
கும்பகோணத்தில் 44 பேருக்கு விலையில்லா வீட்டுமனை பட்டாக்கள் வழங்கல்: அமைச்சர் வினோத்ரவி பெருமிதம்
கும்பகோணத்தில் 44 பேருக்கு விலையில்லா வீட்டுமனை பட்டாக்கள் வழங்கல்: அமைச்சர் வினோத்ரவி பெருமிதம்
கருகும் குறுவை கனவுகள்! சான்றிதழ் தர மறுக்கும் விஏஓக்கள்; மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கதறிய விவசாயிகள்
கருகும் குறுவை கனவுகள்! சான்றிதழ் தர மறுக்கும் விஏஓக்கள்; மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கதறிய விவசாயிகள்
உயிர் வற்றிப்போன காவிரி! காய்ந்து கருகும் டெல்டா பூமி; தீராத தாகத்தில் தமிழகத்தின் நெற்களஞ்சியம்!
உயிர் வற்றிப்போன காவிரி! காய்ந்து கருகும் டெல்டா பூமி; தீராத தாகத்தில் தமிழகத்தின் நெற்களஞ்சியம்!

வீடியோ

12 year girl death|சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை!சாக்கு மூட்டையில் சடலம்!கொடூரனை அடித்தே கொன்ற மக்கள்
Keerthana | ”ENGLISH-ல பேசுங்க” திகைத்து நின்ற மாணவி! பள்ளியில் கீர்த்தனா!எல்லை மீறும் ரீல்ஸ் மோகம்?
Tiruppur Crime News : 4 மாத கர்ப்பிணி.. மனைவியை கொன்ற கணவன்... திருப்பூரை உலுக்கிய கொடூரம்
Theni Theft Murder : பாட்டி கொலையில் மர்மம்.. நாடகமாடிய பேரன், பேத்தி! போலீஸ் அதிரடி கைது!
Trichy VAO: போதையில் சட்டையின்றி தூக்கம்.. அலுவலகத்தில் சிக்கிய VAO! வைரலாகும் வீடியோ

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
"என் மீது பொய்யான கதைகள்..' சிவகாசி பள்ளிக்கு ஆய்வுக்குச் சென்றது ஏன்? அமைச்சர் கீர்த்தனா கேள்வி
CM Vijay Letter to PM: அந்தியோதயா அன்ன யோஜனா திட்டம்; தமிழ்நாடு நலனுக்குகந்த நடவடிக்கை தேவை; பிரதமருக்கு முதல்வர் விஜய் கடிதம்
அந்தியோதயா அன்ன யோஜனா திட்டம்; தமிழ்நாடு நலனுக்குகந்த நடவடிக்கை தேவை; பிரதமருக்கு முதல்வர் விஜய் கடிதம்
“திமுகவில் சேரச் சொல்லி ரூ.50 கோடிக்கு மேல் பேரம் பேசினார்கள்''; ஸ்ரீவைகுண்டம் தவெக MLA புகாரால் பரபரப்பு
“திமுகவில் சேரச் சொல்லி ரூ.50 கோடிக்கு மேல் பேரம் பேசினார்கள்''; ஸ்ரீவைகுண்டம் தவெக MLA புகாரால் பரபரப்பு
Yamaha R2 Price Features: KTM, Hero-க்கு சவால்.! செம ஸ்டைலான R2 பைக்கை களமிறக்கும் Yamaha; சக்தி, அம்சங்கள், விலை என்ன.?
KTM, Hero-க்கு சவால்.! செம ஸ்டைலான R2 பைக்கை களமிறக்கும் Yamaha; சக்தி, அம்சங்கள், விலை என்ன.?
செந்தில் பாலாஜி தலைமறைவு.. ஆட்சி கவிழ்ப்பு புகார்! வாயைத் திறக்காத மு.க.ஸ்டாலின், உதயநிதி!
செந்தில் பாலாஜி தலைமறைவு.. ஆட்சி கவிழ்ப்பு புகார்! வாயைத் திறக்காத மு.க.ஸ்டாலின், உதயநிதி!
Hero Xoom 110: சிட்டில ஓட்ட கச்சிதமான ஸ்கூட்டர்; ஹீரோ ஜூம் 110 வாங்க பிளானா.? இந்த 6 முக்கிய விஷயங்கள தெரிஞ்சுக்கோங்க
சிட்டில ஓட்ட கச்சிதமான ஸ்கூட்டர்; ஹீரோ ஜூம் 110 வாங்க பிளானா.? இந்த 6 முக்கிய விஷயங்கள தெரிஞ்சுக்கோங்க
முரட்டு குறட்டை ஒலி, முட்டாள் சொதப்பும் ஒலி, திருட்டுத் தீட்டொலி.. திமுக-வின் முரசொலியை சரமாரியாக விமர்சித்த தவெக!
முரட்டு குறட்டை ஒலி, முட்டாள் சொதப்பும் ஒலி, திருட்டுத் தீட்டொலி.. திமுக-வின் முரசொலியை சரமாரியாக விமர்சித்த தவெக!
மேகதாதுவை தடுக்க போர்க்கால நடவடிக்கை தேவை: தவெக அரசின் அணுகுமுறைக்கு அன்புமணி பாராட்டு!
மேகதாதுவை தடுக்க போர்க்கால நடவடிக்கை தேவை: தவெக அரசின் அணுகுமுறைக்கு அன்புமணி பாராட்டு!
Embed widget