மயிலாடுதுறை மாவட்டம், மணல்மேட்டை அடுத்த கடலங்குடி ஊராட்சி தெற்கு காருகுடியை சேர்ந்தவர் 39 வயதான கூலித்தொழிலாளி முத்துக்கிருஷ்ணன். அவரது மனைவி 37 வயதான சுகந்தி. இந்த தம்பதியினருக்கு 9 வயதில் சுகவினா என்ற பெண் குழந்தையும், 8 வயதில் முத்தமிழன் என்ற ஆண் குழந்தையும் மற்றும் 8 மாதத்தில் முகேஷ் என்ற ஆண் குழந்தையும் உள்ளனர். இந்நிலையில் முத்துகிருஷ்ணன் தனது மனைவி சுகந்தி மற்றும் குழந்தைகளுடன் காட்டுமன்னார்கோயிலுக்கு சென்று அங்கிருந்து தீபாவளி பண்டிகைக்கு புத்தாடைகள் வாங்கி கொண்டு புறப்பட்டு தனது இருசக்கர வாகனத்தில் ஊருக்கு திரும்பியுள்ளார்.


Bigg Boss 7 Tamil: பிக்பாஸில் அடாவடி காட்டும் புல்லி கேங்...தட்டிக் கேட்பாரா கமல்? கொந்தளிக்கும் நெட்டிசன்கள்!




அப்போது முட்டம் உயர்மட்ட பாலத்தில் வந்தபோது அந்த பகுதியில் தெற்கு ராஜன்வாய்க்கால் சாலையையும், பாலத்தையும் இணைக்கும் இடத்தில் உள்ள பள்ளத்தில் எதிர்பாராத விதமாக அவர்கள் வந்த இருசக்கர வாகனம் இறங்கியது. அப்போது கையில் வைத்திருந்த 8 மாத குழந்தையுடன் சுகந்தி, மோட்டார் சைக்கிளில் இருந்து தூக்கி வீசப்பட்டு சாலையில் விழுந்தார்.  இதில் படுகாயம் அடைந்த சுகந்தி, ரத்த வெள்ளத்தில் குழந்தைகளின் கண்ணெதிரே துடிதுடிக்க பரிதாபமாக இறந்தார். தகவல் அறிந்த மணல்மேடு சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த மணல்மேடு காவல்துறையினர் சுகந்தியின் உடலை கைப்பற்றி உடற்கூறு ஆய்வுக்காக காட்டுமன்னார்கோயில் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். 


Schools Holiday: பள்ளிகளுக்கு நவ.9 முதல் 11 நாட்கள் விடுமுறை: டெல்லி அரசு அறிவிப்பு- என்ன காரணம்?




மேலும், விபத்தில் படுகாயம் அடைந்த 8 மாத குழந்தை, காட்டுமன்னார்கோயில் அரசு மருத்துவமனையில் முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு, மேல்சிகிச்சைக்காக தஞ்சை மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்த விபத்தில் முத்துக்கிருஷ்ணன் மற்றும் இரண்டு குழந்தைகள் காயமின்றி அதிஷ்ட வசமாக உயிர் தப்பினர். இதுகுறித்து மணல்மேடு காவல் ஆய்வாளர் மாரிமுத்து மற்றும் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


Kamal Haasan Wishes Seeman: தனக்கென்று ஒரு அரசியல்.. சீமான் பிறந்தநாளில் கமல்ஹாசன் வாழ்த்து!




இந்த விபத்து தொடர்பாக அப்பகுதியை சேர்ந்த கிராமவாசி குணசேகரன் கூறுகையில், கடலூர் மாவட்டத்தையும், மயிலாடுதுறை மாவட்டத்தையும் இணைக்கக்கூடிய உயர்மட்ட பாலத்திலிருந்து சரிவான பகுதியில் ராஜன் வாய்க்கால் பாலத்தை இணைக்க கூடிய இடத்தில் பள்ளமாக உள்ளதால் சரிவான இடத்தில் வந்த வாகனம் நிலை தடுமாறி பள்ளத்தில் சிக்கி கீழே விழுந்து படுகாயம் அடைந்துள்ளனர். மேலும், இதுவரை இப்பகுதியில் மூன்று நபர்கள் உயிரிழந்துள்ளனர் என்றும், இப்பகுதியில் இதுபோன்ற விபத்துக்கள் அடிக்கடி நடைபெறுவதால் இந்த சாலையில் பாலத்தின் பள்ளத்தை சமன்படுத்தி சீரமைத்த வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


Omni Buses: சென்னை மக்களே அலர்ட்! நாளை முதல் ஆம்னி பேருந்துகளின் ரூட் மாற்றம்...இந்த 2 இடத்தை குறிச்சிக்கோங்க!