Bigg Boss Tamil: ‘நீ என்னெல்லாம் பண்ற..பெத்தவங்க வெளில தலை காட்ட முடியாது’.. பிக்பாஸ் ஐஷூவை விமர்சித்த சுசித்ரா..!

பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்றுள்ள போட்டியாளர் ஐஷூவை சரமாரியாக பாடகி சுசித்ரா நேர்காணல் ஒன்றில் வெளுத்து வாங்கியுள்ளார். 

Continues below advertisement

பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்றுள்ள போட்டியாளர் ஐஷூவை சரமாரியாக பாடகி சுசித்ரா நேர்காணல் ஒன்றில் வெளுத்து வாங்கியுள்ளார். 

Continues below advertisement

பிக்பாஸ் தமிழ் சீசன் 7  கடந்த அக்டோபர் 1ஆம் தேதி முதல் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வருகிறது. அதுமட்டுமல்லாமல் ஹாட் ஸ்டார் ஓடிடி தளத்தில் 24 மணி நேரமும் நேரலையாக ஒளிபரப்பாகி கொண்டிருக்கிறது. இந்நிகழ்ச்சியை நடிகர் கமல்ஹாசன் தான் தொகுத்து வழங்கி வருகிறார். பிக்பாஸ் நிகழ்ச்சி திங்கள் முதல் வெள்ளி வரை இரவு 9.30 மணிக்கும், வார இறுதி நாட்களில் இரவு 9.30 மணி முதல் 11 மணி வரையும் ஒளிபரப்பாகிறது. கிட்டதட்ட ஒரு மாதத்தை கடந்துள்ள பிக்பாஸ் நிகழ்ச்சி கடும் விமர்சனங்களை சந்தித்துள்ளது. 

இந்த சீசனில் முதலில் வினுஷா தேவி, பவா செல்லத்துரை, யுகேந்திரன், விஜய் வர்மா, டான்ஸர் ஐஷூ,சரவண விக்ரம்,கூல் சுரேஷ், மணி சந்திரா, ரவீனா தாஹா, நிக்ஸன், அனன்யா ராவ், ஜோவிகா விஜயகுமார், விஷ்ணு விஜய், பிரதீப் ஆண்டனி, விசித்ரா,  மாயா கிருஷ்ணா, அக்‌ஷயா உதயகுமார், பூர்ணிமா ரவி, பாடகர் கானா பாலா, பட்டிமன்ற பேச்சாளர் அன்ன பாரதி, விஜே அர்ச்சனா, நடிகர் தினேஷ் காமராஜ், ஆர்.ஜே.பிராவோ என பலரும் கலந்து கொண்டனர்.  இதில் னன்யா ராவ், வினுஷா தேவி, பவா செல்லத்துரை, யுகேந்திரன், விஜய் வர்மா, பிரதீப் ஆண்டனி, அன்னபாரதி ஆகியோர் வெளியேற்றப்பட்டுள்ளனர். 

இப்படியான நிலையில் பிக்பாஸ் நிகழ்ச்சி நாளுக்கு  நாள் கடுமையான விமர்சனங்களை சந்தித்து வருகிறது. பிரதீப் ஆண்டனி பெண்கள் பாதுகாப்பு அச்சுற்றுத்தலை ஏற்படுத்தியதாக ரெட் கார்டு கொடுத்து வெளியேற்றப்பட்டார்.அதேசமயம் வழக்கம்போல பிக்பாஸ் வீட்டுக்குள் காதல் கதைகளும் ரெக்கை கட்டி பறக்கின்றது, ஏற்கனவே ரவீனா தாஹா - மணி சந்திரா காதல் கதை ஒருபக்கம் சென்று கொண்டிருக்க, இன்னொரு பக்கம் நிக்ஸன் - ஐஷூ காதலிப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. 

எப்போது பார்த்தாலும் இருவரும் ஒன்றாகவே சுற்றி வருகின்றனர். மேலும் கடந்த வாரம் கண்ணாடி நடுவில் இருக்க இருவரும் முத்தம் கொடுத்து கொண்டனர். ஐஷூவுக்கு வேட்டி கட்டி விடுவதாக கூறி நிக்ஸன் படாதபாடு படுத்தியதை கண்டு இந்த வார கேப்டன் மாயாவே கடுப்பானார். மேலும் ஐஷூ - நிக்ஸன் இருவரும் மறைமுகமாக வைக்கப்பட்டுள்ள ஸ்மோக் ரூமிற்குள் சென்று ரகசியமாக பேசுகின்றனர். ரொமான்ஸ் செய்வதாகவும் வீடியோ ஆதாரங்களை வெளியிட்டு வருகின்றனர். 

இந்நிலையில் ஐஷூ பற்றி பாடகி சுசித்ரா கடுமையான விமர்சனத்தை முன்வைத்துள்ளார். அதில், “பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு போட்டியாளர்களாக வந்தவர்களின் குடும்பத்தினர் மிகப்பெரிய பயத்துடன் இருக்கிறார்கள். இதில் ஐஷூவின் பெற்றவர்களை நினைத்தால் மனசுக்கு ரொம்ப கஷ்டமா இருக்கு. அவங்களால தெருவுல மூஞ்சி காட்ட முடியாது. நிக்ஸனுடன் அந்த பொண்ணு என்னெல்லாம் பண்ணுது” என சரமாரியாக விமர்சித்துள்ளார். 

Continues below advertisement