கடும் காற்று மாசு காரணமாக பள்ளிகளுக்கு நவம்பர் 9ஆம் தேதி முதல் 11 நாட்கள் விடுமுறை அளிக்கப்படுவதாக டெல்லி அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது. வழக்கமான குளிர்கால விடுமுறை நவம்பர் இறுதியில் விடப்படும் நிலையில், முன்னதாகவே தற்போது விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.


டெல்லியின் காற்றின் தரம் கடுமையாக மோசமடைந்து வருகிறது.  தொடர்ந்து அதிகரித்து வரும் காற்று மாசு காரணமாக ஏற்கனவே 2 நாள்கள் தொடக்கப் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டிருந்தது. தொடர்ந்து நவம்பர் 10-ம் தேதி வரை விடுமுறை நீட்டிக்கப்பட்டது.  6-12 ஆம் வகுப்பு வரை ஆன்லைன் வகுப்புகள் நடத்துமாறு அம்மாநில கல்வித்துறை அமைச்சர் அதிஷி மார்லெனே அறிவுறுத்தி இருந்தார்.


இதைத் தொடர்ந்து கடும் காற்று மாசு காரணமாக பள்ளிகளுக்கு நவம்பர் 9ஆம் தேதி முதல் 19ஆம் தேதி வரை 11 நாட்கள் விடுமுறை அளிக்கப்படுவதாக டெல்லி அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது.






 


அதோடு, மிகவும் சாதகமற்ற வானிலை மற்றும் தட்பவெப்ப நிலைகள் காரணமாக காற்றின் தரம் மேலும் மோசமடையும் என்று தர மேலாண்மை ஆணையம் கணித்துள்ளது. 


சுவாசப் பிரச்னை


இதர வகுப்பில் பயிலும் மாணவர்களுக்கு உடற்பயிற்சி வகுப்புகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. காற்று மாசு உச்சம் தொட்டதை அடுத்து சுவாசப் பிரச்னை காரணமாக மருத்துவமனையில் சேரும் குழந்தைகளின் எண்ணிக்கை அதிகரித்திருப்பது குறித்து ஏற்கனவே மருத்துவர்கள் கவலை தெரிவித்தனர். குழந்தைகளின் நலனை கருத்தில் கொண்டு பள்ளி விடுமுறை நீட்டிக்கப்பட்டுள்ளது.


காற்றின் தரம் கிரேடட் ரெஸ்பான்ஸ் ஆக்ஷன் பிளான்’ - ஜிஆர்ஏபி நிலை 4 (Graded Responses Action Plan Stage-4  -GRAP Stage-4) என்று குறியிடப்பட்டதை முன்னிட்டு கடுமையான கட்டுப்பாடுகள் நடைமுறைக்கு வந்துள்ளன.


முன்னதாக நவம்பர் 10ஆம் தேதி வரை 10 மற்றும் 12ஆம் வகுப்புகளைத் தவிர்த்து பிற வகுப்புகள் அனைத்துக்கும் ஆன்லைன் வழியில் கற்பிக்க, அறிவுறுத்தப்படு இருந்தது. இதற்கிடையே வழக்கமான குளிர்கால விடுமுறை நவம்பர் இறுதியில் விடப்படும் நிலையில், முன்னதாகவே தற்போது விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. குளிர்காலம் முடிவடைந்த பிறகு காற்றின் தரம் மெல்ல சீரடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.