தஞ்சாவூர்: அவ்வையார் விருதுக்கு விண்ணப்பம் செய்ய தமிழக அரசின் விருதுகள் இணையதளத்தில் (https://awards.tn.gov.in) விண்ணப்பிக்க வேண்டும் என்று தஞ்சை மாவட்ட கலெக்டர் தீபக் ஜேக்கப் தெரிவித்துள்ளார்.



உலக மகளிர் தின விழாவை தஞ்சாவூர் மாவட்ட சமூக நல அலுவலகம் சார்பில் ஆண்டுதோறும் மார்ச் 8-ல் கொண்டாடப்பட்ட வருகிறது. 2012 முதல் ஒவ்வொரு ஆண்டும் மகளிர் தின விழா கொண்டாத்தின் போது, பெண்களின் முன்னேற்றத்திற்கு சிறந்த சேவை புரிந்த ஒருவருக்கு அவ்வையார் விருது வழங்கப்பட்டு வருகிறது. இவ்விருதில் ரூ.1 இலட்சத்திற்கான காசோலை, தங்க பதக்கம், சான்று மற்றும் சால்வை வழங்கப்படும்.

இவ்விருதுக்கு விண்ணப்பம் செய்ய தமிழக அரசின் விருதுகள் இணையதளத்தில் (https://awards.tn.gov.in) விண்ணப்பிக்க வேண்டும். 2022ம் ஆண்டு அவ்வையார் விருது வழங்கும் பொருட்டு, கருத்துருக்கள் அனுப்புவதற்கான விதிமுறைகள் வகுக்கப்பட்டுள்ளது. அதன்படி தமிழ்நாட்டை பிறப்பிடமாக கொண்டவரும் 18 வயதிற்கு மேற்பட்டவராகவும் இருத்தல் வேண்டும். குறைந்தபட்சம் 5 ஆண்டுகள் சமூக சார்ந்த நடவடிக்கைகள், பெண் குலத்திற்கு பெருமை சேர்க்கும் வகையிலான, நடவடிக்கை, மொழி, இனம், பண்பாடு, கலை, அறிவியல், நிர்வாகம் போன்ற துறைகளில் மேன்மையாக பணிபுரிந்து மக்களுக்கு தொண்டாற்றும் வகையில் தொடர்ந்து பணியாற்றுபவராக இருத்தல் வேண்டும்.

பொருளடக்கம் மற்றும் பக்க எண்.(intex), இவ்விருது பெருவதற்கு நியமிக்கப்பட்டவரின் உயிர் தரவு (Biodata), மற்றும் பாஸ்போர்ட் சைஸ் புகைப்படம் 2, மாவட்ட கலெக்டரின் பரிந்துரை கடிதம், மாவட்ட சமூக நல அலுவலரின் பரிந்துரை கடிதம், தேசிய மற்றும் உலகளாவிய விருதுகளின் விவரம் (விருது பெற்றிருப்பின் அதன் விவரம், விருதின் பெயர், யாரிடமிருந்து பெற்றது மற்றும் பெற்ற வருடம், கையேட்டில் விருது பெற்ற புகைப்படம்,சான்றிதழ் போன்றவை இணைக்கப்பட வேண்டும்.

சேவையாற்றியது குறித்த பத்திரிகை செய்தி, சேவை பற்றிய செயல்முறை விளக்கம் ( புகைப்படத்துடன்), சமூக சேவையாளரின், சமூக சேவை நிறுவனத்தின் சேவை மூலமாக பயனாளிகள் பயனடைந்த விவரம், தொண்டு நிறுவனத்தின் பதிவு, உரிமம், ஆண்டறிக்கை, சமூக பணியாளர் இருப்பிடத்தில் அருகில் உள்ள காவல் நிலையத்திலிருந்து பெறப்பட்ட குற்றவியல் நடவடிக்கைகள், ஏதும் இல்லை என்பதற்கான சான்று போன்றவை வைத்து இணைப்பு படிவம் தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் முழுமையாக பூர்த்தி செய்து அனுப்ப வேண்டும்.

கையேடு தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் அச்சு செய்யப்பட்டு தலா இரண்டு நகலகள் அனுப்பப்பட வேண்டும். மேலும் இதற்கான படிவங்கள் மற்றும் விபரங்களுக்கு அறை எண்.303, வது தளம், மாவட்ட சமூக நல அலுவலகம், மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகம், தஞ்சாவூர் என்ற முகவரியில் பெற்றுக் கொள்ளலாம். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.