சமூகத்தில் சேவை செய்ய நேரமில்லாதவர்கள், நேரமிருந்தும் மணமில்லாதவர்களுக்கு மத்தியில் தான், தங்கள் நேரத்தை, வாழ்நாட்களை சேவை செய்வதற்காக அர்ப்பணித்தவர்களும் வாழ்ந்து வருகிறார்கள். அப்படிப்பட்ட மனிதர்களில் ஒருவர் தான் பாரதிமோகன். மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி தாலுக்கா பெரம்பூர் கிராமத்தை சேர்ந்தவர் சமூக ஆர்வலர் பாரதிமோகன். வெளிநாடு சென்றுவிட்டு தாயகம் (இந்தியா) திரும்பியுள்ள இவர், மயிலாடுதுறை சாலைகளில் ஒருவேளை உணவிற்கு கூட வழியில்லாமல் தவித்து வரும் ஆதரவற்ற முதியவர்களை கண்டு வேதனையடைந்துள்ளார். 


Diwali 2023: சீர்காழி அருகே தல தீபாவளி கொண்டாட முடியாத புது மாப்பிள்ளைகள் - காரணம் என்ன..?




அதனைத் தொடர்ந்து அவர்களுக்கு உதவ வேண்டும் என்று முடிவு செய்த பாரதிமோகன் அவரது பெயரிலேயே அறக்கட்டளை ஒன்றை தொடங்கி, ஆதரவர்றவர்களை தேடி உணவு வழங்க தொடங்கினார். யாரும் உறவுகள் இன்றி இருக்கும் ஆதரவற்றவர்கள், மனநலம் பாதிக்கப்பட்ட நபர்களை தேடிப் பிடித்து அவர்களுக்கு முடி திருத்தம் செய்து அவர்களை தூய்மைப்படுத்தும் சேவைப் பணியையும் செய்து வருகிறார். கடந்த 2012 ஆம் ஆண்டு முதல் மயிலாடுதுறை, திருவாரூர், நாகப்பட்டினம், காரைக்கால், தஞ்சாவூர் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் மனநலம் பாதிக்கப்பட்டு சுற்றித்திரியும் ஆதரவற்ற நபர்களை தூய்மைப்படுத்தி அவர்களுக்கு மறுவாழ்வு அளிக்கும் முயற்சியில் ஈடுபட்ட பாரதிமோகன், இதுவரை 500-க்கும் மேற்பட்டவர்களுக்கு உதவி செய்துள்ளார்.


World Radiography Day 2023: இன்று உலக கதிரியக்க நாள்: எதற்கு கொண்டாடப்படுகிறது? முக்கியத்துவம் என்ன?




மேலும் இவரது சேவையை பாராட்டி கோயம்புத்தூர் கோல்டன் ஹியூமன் பீஸ் பல்கலைக்கழகம் பாரதி மோகனுக்கு டாக்டர் பட்டம் வழங்கி கௌரவித்துள்ளது. இந்நிலையில் தீபாவளி பண்டிகை நெருங்கி விட்ட நிலையில், சீர்காழி அருகே வைத்தீஸ்வரன் கோயில் பேருந்து நிலையத்தில் வசித்து வரும் ஏழை குடும்பத்து சிறுவர்கள் புத்தாடை கிடைக்குமா? என்ற ஏக்கத்தில் இருப்பதாக தகவல் அறிந்துள்ளார். பின்னர் அங்கு சென்ற சமூக ஆர்வலர் பாரதிமோகன் அவர்களின் குடும்ப நிலைமை குறித்து கேட்டு தெரிந்து கொண்டார். இதையடுத்து அந்த சிறுவர்களை தனது காரில் ஏற்றிக்கொண்டு ஜவுளிக்கடைக்கு சென்றுள்ளார். அங்கு விலையை பொருட்படுத்தாமல் சிறுவர்களின் விருப்பத்திற்கு ஏற்ப அவர்கள் கேட்ட ஆடைகளையும் வாங்கி கொடுத்துள்ளார். 


Kamal Haasan Wishes Seeman: தனக்கென்று ஒரு அரசியல்.. சீமான் பிறந்தநாளில் கமல்ஹாசன் வாழ்த்து!




இந்த தீபாவளிக்கு புத்தாடை கிடைக்குமா? என்ற ஏக்கத்தில் இருந்த சிறுவர்கள் ஆடைகளை கண்டதும் ஆனந்தத்தில் மகிழ்ந்தனர். தனக்கு வேண்டியதை  விருப்பத்துடன் தேடி பிடித்து எடுத்துக் கொண்ட ஏழை சிறுவர்கள், தங்களது புன்னகையை நன்றியாக தெரிவித்தனர். சமூக ஆர்வலர் பாரதிமோகனின் இந்த செயலை பல்வேறு தரப்பினரும் பாராட்டி வருகின்றனர்.


Bigg Boss 7 Tamil: பிக்பாஸில் அடாவடி காட்டும் புல்லி கேங்...தட்டிக் கேட்பாரா கமல்? கொந்தளிக்கும் நெட்டிசன்கள்!