நாம் தமிழர் ஒருங்கிணைப்பாளர் சீமான் இன்று தன் பிறந்தநாளைக் கொண்டாடி வரும் நிலையில், அவருக்கு நடிகர் கமல்ஹாசன் வாழ்த்து தெரிவித்துள்ளார்.


சீமானுக்கு கமல்ஹாசன் வாழ்த்து


கோலிவுட் சினிமாவில் இயக்குநராக அறிமுகமாகி, அரசியல் பாதையில் அடி எடுத்து வைத்து இன்று நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளராக வலம் வரும் சீமான், தன் 57ஆவது பிறந்தநாளைக் கொண்டாடுகிறார். அவருக்கு திரைத்துறையினரும் அரசியல் தலைவர்களும் வாழ்த்துகளைப் பகிர்ந்து வரும் நிலையில், கமல்ஹாசன் தன் சமூக வலைதளப் பக்கத்தில் தன் வாழ்த்துகளைப் பகிர்ந்துள்ளார்.


“தன்னடையாளம் பேணுவதோடு பிறரடையாளம் போற்றவும் செய்து, தனக்கென்றொரு அரசியல் முழங்கிவரும் அன்புச் சகோதரர், நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அவர்களுக்குப் பிறந்த நாள் வாழ்த்துகள்” எனப் பதிவிட்டுள்ளார்.


 






சீமான் வாழ்த்து


நேற்று நடிகர் கமல்ஹாசன் நேற்று தன் 69ஆவது பிறந்தநாளைக் கொண்டாடிய நிலையில், அவருக்கு சீமானும் வாழ்த்து தெரிவித்திருந்தார்.


“தமிழ்த் திரைக்கலையின் தன்னிகரில்லா தனிப்பெருங்கலைஞன்! எவ்வேடம் ஏற்றாலும் அதில் தமது அளப்பரிய நடிப்பாற்றலால் கதைமாந்தனாகவே வாழ்ந்து மக்களையும் அவ்வுணர்வோடு ஒன்றச் செய்யும் வல்லமை வாய்க்கப் பெற்றவர்! திரைத்துறையில் புதுமைகளைப் புகுத்தும் பன்முகத் திறன் படைத்த படைப்பாளி! மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் அன்பிற்குரிய அண்ணன் கமல்ஹாசன் அவர்களுக்கு என் நெஞ்சம் நிறைந்த இனிய பிறந்தநாள் நல் வாழ்த்துகளைத் தெரிவிப்பதில் பெருமகிழ்ச்சியடைகிறேன்.” என்று வாழ்த்தியிருந்தார்.


இதனைத் தொடர்ந்து தனக்கு வாழ்த்து தெரிவித்த சீமானுக்கு நடிகர் கமல்ஹாசன் நன்றி தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.


அன்புமணி ராமதாஸ் வாழ்த்து


முன்னதாக பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் சீமானுக்கு எக்ஸ் வலைதளப் பக்கத்தில் தன் வாழ்த்தைப் பகிர்ந்துள்ளார். “நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் நண்பர் சீமான் அவர்களின் பிறந்தநாளில் அவருக்கு எனது  உளமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.   அவர் நீண்டகாலம் நலவாழ்வு வாழ்ந்து மண்ணுக்கும், மக்களுக்கும் சேவை செய்ய வாழ்த்துகிறேன்” எனப் பதிவிட்டுள்ளார்.


 




மேலும் படிக்க : kamal haasan birthday: ”கலையுலகில் சாதனைகள் பல படைக்கும் கலைஞானி"...கமல்ஹாசனுக்கு முதல்வர் ஸ்டாலின் உள்ளிட்டோர் வாழ்த்து


Kamalhassan Birthday : தகராறு ஏது.. தமிழ் முத்தம் போடு.. உலகநாயகன் கமலுக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள்..