த.செ.ஞானவேல் இயக்கத்தில் நடிகர் சூர்யா, மணிகண்டன், லிஜோமோல் ஜோஸ், ரஜிஷா விஜயன், பிரகாஷ்ராஜ் உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகிய படம் 'ஜெய் பீம்'. அமேசான் ப்ரைம் ஓடிடி தளத்தில் இப்படம் வெளியாகியது. இந்தப் படத்தைப் பார்த்துவிட்டு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட அரசியல் தலைவர்கள், பல்வேறு திரையுலக பிரபலங்கள் பாராட்டு தெரிவித்தனர். விமர்சன ரீதியாகவும் இந்தப் படம் கொண்டாடப்பட்டது.


5 மாநில தேர்தல் எதிரொலி..! எல்லாமே ஏறுமுகம்! முதலீட்டாளர்களுக்கு கைகொடுத்த பங்குச்சந்தை!




இருந்தபோதிலும் ஜெய் பீம் திரைப்படம் வெளியான நாள் முதல் பல்வேறு சர்ச்சைகளுக்கும் விமர்சனங்களுக்கும் ஆளாகி வந்தது. பல்வேறு தரப்பினர் ஜெய்பீம் திரைப்படத்தை சிறப்பாக பேசி பாராட்டி வரும் வேலையில் ஒரு தரப்பினர் ஜெய்பீம் படத்திற்கு எதிராக தங்களின் கண்டனத்தை பல்வேறு வகைகளில் பதிவு செய்தனர்.


Election Results 2022: தடுமாறும் தலைமை.. உட்கட்சி பூசல்.. ஆளும் எண்ணிக்கை இரண்டு! நொறுங்கும் காங்கிரஸ்.!




வன்னியர்களை தவறாக சித்தரிப்பதாக கூறி பாட்டாளி மக்கள் கட்சியினர் கடும் எதிர்ப்பை  தெரிவித்து இருந்தனர். மேலும் நடிகர் சூர்யாவின் திரைப்படம் ஓடும் திரையரங்குகளில் பாட்டாளி மக்கள் கட்சியினர் வெளியிட எதிர்ப்பு தெரிவித்திருந்தனர். எல்லாவற்றுக்கும் மேலாக மயிலாடுதுறை மாவட்டம் பாட்டாளி மக்கள் கட்சி செயலாளர் சித்தமல்லி பழனிச்சாமி சார்பில் சூர்யாவை தாக்குபவர்களுக்கு ஒரு லட்சம் வழங்கப்படும் என்று அறிவித்து பரபரப்பை ஏற்படுத்தி இருந்தார். மேலும் சூர்யாவின் நடிப்பில் வெளிவரும் புதிய படத்தை திரையிட அனுமதிக்க மாட்டோம் என்று கூறியிருந்தனர். 




மதம் மறுப்பு திருமணம் செய்ததால் கொலை மிரட்டல் - மாலையும் கழுத்துமாக காதல் ஜோடி போலீசில் தஞ்சம்


இந்நிலையில் இன்று சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் நடிகர் சூர்யா நடிப்பில் எதற்கும் துணிந்தவன் என்ற திரைப்படம் வெளிவந்தது. இந்த திரைப்படத்தை திரையிடக்கூடாது என்று தமிழ்நாடு முழுவதும் பல்வேறு மாவட்டங்களில் பாட்டாளி மக்கள் கட்சியினர் எதிர்ப்பு தெரிவித்தனர். இந்த சூழலில் இன்று தமிழகம் முழுவதும் எதற்கும் துணிந்தவன் திரைப்படம் திரையிடப்பட்டது. மயிலாடுதுறை மாவட்டத்தில் மயிலாடுதுறை, சீர்காழி ஆகிய இரண்டு திரையரங்களில் நடிகர் சூர்யாவின் திரைப்படம் திரையிடப்பட்டுள்ளது. இதனை பாட்டாளி மக்கள் கட்சியினர் சார்பில் பிரச்சினை ஏதும் ஏற்படாதவாறு  திரையரங்குகளில் ஏராளமான காவல்துறையினர் குவிக்கப்பட்டு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். தொடர்ந்து மயிலாடுதுறை விஜயா திரையரங்கில் 11  மணிக்கு நடிகர் சூர்யா நடித்த எதற்கும் துணிந்தவன் படம் திரையிடப்பட்டுள்ளது.


Punjab Election Result 2022: காங்கிரஸை தட்டித்தூக்கி பஞ்சாப்பில் கால் ஊன்றிய ஆம் ஆத்மி...! கோலோச்சியது எப்படி?