மயிலாடுதுறை மாவட்டம் மயிலாடுதுறை, சீர்காழி, கொள்ளிடம், வைத்தீஸ்வரன் கோயில், பூம்புகார், தரங்கம்பாடி, கொள்ளிடம் உள்ளிட்ட மாவட்டத்தின் பல்வேறு இடங்களிலும் இன்று காலை 9 மணி மேலும் கடும் பனிப்பொழிவு நிலவியது. மயிலாடுதுறை மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக அவ்வப்போது மிதமானது முதல் கனமழை பெய்து வந்தது. இந்நிலையில் இரண்டு நாட்களாக மழை பொழிவு இல்லாத நிலையில், அதிகாலை நேரத்தில் பனிபொழிவு அதிகரித்து வந்தது.
இந்நிலையில் இன்று அதிகாலை முதல் பனி பொழிவு அதிகரித்தது கடும் பனிப்பொழிவானது காணப்பட்டது. பொதுவாக காலை சூரியன் உதித்தும் பனிப்பொழிவின் தாக்கம் குறையும் சூழலில் இன்று சூரியன் உதித்தும் சுமார் காலை 9 மணி வரை பனியின் தாக்கம் சற்றும் குறையாமல் இருந்தது. கடும் பனி மூட்டம் காரணமாக சாலையில் பொதுமக்கள் நடமாட்டம் குறைந்தே காணப்பட்டது. எதிரே வரும் வாகனங்கள் கூட தெரியாத சூழல் நிலவியதால் இருசக்கர வாகனம் முதல் கனரக வாகனங்கள் முகப்பு விளக்கை எரிய விட்டபடியே குறைந்த வேகத்திலேயே வாகனங்களை இயக்கினர். இந்த திடீர் பனி மூட்டத்தால் வாகன ஓட்டிகளும், பொதுமக்களும் அவதியடைந்துள்ளனர்.
பொதுவாக கடும் பனிப்பொழிவு என்பது மார்கழி மாதத்தில் தான் காணப்படும் என்றும், ஆனால் இந்தாண்டு அதற்கு மாறாக மார்ச் மாதத்தில் கடும் பனிப்பொழிவு மற்றும் புயல் சின்னங்கள் போன்றவை உருவாகி வருகிறது என்றும் பல வயதான முதியவர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.
மேலும் பருவ நிலை மாற்றம், புவி வெப்பமடைதல் உள்ளிட்ட காரணங்களால் இதுபோன்ற நிகழ்வுகள் முன்னுக்கு பின் முரணாக ஏற்படுவதாகவும், புவி வெப்பமடைதலை தடுக்க பொதுமக்கள் ஆகிய நாமும் முழு பொறுப்பேற்று செயல்பட வேண்டும் என்றும், ஒவ்வொரு தனி மனிதனும் இதில் கவனம் செலுத்த வேண்டும் என சமூக ஆர்வலர்கள் பலரும் வேண்டும் கோள்விடுத்துள்ளனர்.
Car loan Information:
Calculate Car Loan EMI